அரசியல்

தவறான தகவலை பரப்பும் பாஜகவினர்-மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதில்லை என மம்தா அறிவிப்பு

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தற்போது பங்கேற்க போவதில்லை என கூறியுள்ளார்.

தவறான தகவலை பரப்பும் பாஜகவினர்-மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதில்லை என மம்தா அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெற்ற வெற்றியையடுத்து பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். நாளை ( 30-ம் தேதி) ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் களத்தில் மோடியும் மம்தாவும் மோதிக்கொண்ட நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் மம்தாவிற்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். பதவியேற்பு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் கலந்துகொள்வதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என்று மம்தா பானர்ஜி தீடீரெனக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். எனினும், தவறான தகவலை பாஜகவினர் பரப்பி வரும் சூழ்நிலையில், பதவியேற்பு விழாவில் என்னால் பங்கேற்க இயலாது." என தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் நடந்த அரசியல் வன்முறையில் 54 பேர் கொல்லப்பட்டதாக பாஜக கூறுவதில் உண்மையில்லை என்றும், அவர்கள் அரசியல் ரீதியாக கொள்ளப்படவில்லை, தனிப்பட்ட பிரச்சனையால் கொல்லப்பட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தவறான தகவல்களை பாஜக பரப்பி வருவதால் தாம் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்றும், பதவியேற்பு விழாவை அரசியல் ஆதாயத்திற்க்காக எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும், மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என கேரள முதல்வர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories