அரசியல்

“மின்னணு இயந்திரம் குறித்து மக்களுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை” : நாராயணசாமி கருத்து!

மின்னணு இயந்திரம் குறித்து மக்களுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

“மின்னணு இயந்திரம் குறித்து மக்களுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை” : நாராயணசாமி கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னா் செய்தியாளர்களை சந்தித்த நராயணசாமி, தமிழகம் கண்டிராத வகையில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர் எனவும் இந்த வெற்றி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட முன்னோடியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் “மத்தியில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது மிகப்பெரிய வருத்தமும் அதிர்ச்சியும் அடையும் வகையில் அமைந்துள்ளது. இந்தத் தேர்தல் தோல்வியையடுத்து மாற்று யூகம் அமைக்க வேண்டியது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், பா.ஜ.க மதத்தை வைத்து தேர்தல் யூகத்தை அமைத்து வெற்றி பெற்றுள்ளது எனவும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், மின்னணு இயந்திரம் குறித்து மக்களுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை எனவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories