அரசியல்

பின்னடைவைச் சந்திக்கிறார் ராகுல் : அமேதியில் வெற்றி பெறுவாரா ?

மக்களவைத் தேர்தலின் முன்னணி நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது. தற்போதய நிலவரப்படி பா.ஜ.க பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது.

பின்னடைவைச் சந்திக்கிறார் ராகுல் : அமேதியில் வெற்றி பெறுவாரா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. நடைபெற்று முடிந்த 542 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்னிலை நிலவரம் வெளியானது முதலே பா.ஜ.க பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது. பா.ஜ.க கூட்டணி 306 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

வி.ஐ.பி தொகுதிகளில் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணியிடம் 5101 வாக்கு வித்தியாசத்தில் பின்னடவைச் சந்தித்துள்ளார். அதேநேரத்தில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி 43,118 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

போபால் தொகுதியில் பிரக்யா தாகுர் காங்கிரஸ் கட்சியின் திக் விஜய சிங்கைவிட 90149 வாக்கு அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் 1,64,115வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 1,81,316 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா 3,81,482 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

banner

Related Stories

Related Stories