அரசியல்

வாக்கு எண்ணிக்கை 11 மணி நிலவரம் ; தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை!

காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி தொடர்ந்து 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

வாக்கு எண்ணிக்கை 11 மணி நிலவரம் ;  தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 290 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களிலும், மற்றவை 101 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 37 இடங்களிலும் அதிமுக கூட்டணி 2 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. 22 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரை திமுக கூட்டணி 13 இடங்களிலும் அதிமுக கூட்டணி 7 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

banner

Related Stories

Related Stories