அரசியல்

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியினர் முறைகேடு - முத்தரசன் குற்றச்சாட்டு !

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியினர் முறைகேடு - முத்தரசன் குற்றச்சாட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல கொள்கை ரீதியாக அமைக்கப்பட்ட கூட்டணி. மதவாத சக்திகளை மற்றும் அதற்கு துணை போகும் கட்சிகளுக்கு எதிரான கூட்டணி. திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தந்த அனைவருக்கும் நன்றி

தபால் வாக்குகளை முதலில் என்ன வேண்டும் என விதி இருக்கும் போது தமிழகத்தில் பல்வேறு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகள் முதலில் எண்ணாமல் ஆளுங்கட்சி வெற்றி பெறும் வண்ணம் பல்வேறு மோசடிகளை செய்வதற்கு தேர்தல் ஆணையம் வழி செய்கிறது. பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் அதிகாரிகளை மிரட்டி அச்சுறுத்தி மக்கள் அளிக்கும் தீர்ப்பிற்கு எதிராக வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சி மோசடி செய்து வருகிறது." இவ்வாறு கூறினார்.

banner

Related Stories

Related Stories