அரசியல்

வாக்கு எண்ணிக்கையின்போது முனைப்பாக இருக்கவேண்டும் : நாராயணசாமி வேண்டுகோள்!

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும் முனைப்பாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

வாக்கு எண்ணிக்கையின்போது முனைப்பாக இருக்கவேண்டும் : நாராயணசாமி வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேர்தல் கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டியதில்லை எனவும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும் முனைப்பாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவககத்தில் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “மக்களவைத் தேர்தல் அனைவரையுமே குழப்பி இருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பொய்யாகும். ஆஸ்திரேலிய பொதுத்தேர்தலில் கருத்துக்கணிப்புக்கு எதிராக தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கமும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனும் வெற்றி பெறுவார்கள். காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்று ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்பார்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும் முனைப்பாக இருக்கவேண்டும். நமது வெற்றி வேட்பாளர்கள் வெற்றிக்கான சான்றிதழ் பெறும்வரை நாம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்கவேண்டும்.” என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories