அரசியல்

மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு தயார் - முதல்வர் கமல்நாத் தகவல்

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு தயாராக இருக்கிறது என்று முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு தயார் - முதல்வர் கமல்நாத் தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறி பா.ஜ.க.வின் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் கோபால் பார்கவா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ம.பி.ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.

இது குறித்து பேசிய முதல்வர் கமல்நாத், மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த பின் கடந்த 5 மாதங்களில் 4 முறை பெரும்பான்மையை நிரூபித்து இருப்பதாக கூறினார். மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவதால் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு காங்கிரஸ் அரசு தயாராகவே இருக்கிறது என்றும் கமல்நாத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories