அரசியல்

‘காவி உடுத்தினால் மட்டுமே துறவி அல்ல’: பிரக்யா சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் பதில்

“காவி ஆடைகளை உடுத்தினால் மட்டும் துறவியாக முடியாது” என பிரக்யா சிங்குக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பதிலளித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

சாத்வி பிரக்யா தாக்கூர் பாரதிய ஜனதா கட்சியின் போபால் வேட்பாளர். இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றச்சாட்டில் சிக்கி தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். இவர் பாபர் மசூதி இடிப்பு, ஹேமந்த் கர்கரே மரணம் போன்றவை குறித்து மோசமான சர்ச்சை கருத்துக்களைக் கூறி இந்திய முழுவதும் கடும் கண்டங்களுக்கு உள்ளனர்.

தற்போது தேர்தலின் போது அவருக்கு எதிராக போபால் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். திக்விஜய் சிங்க்கு எதிராகத் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை பிரக்யா தாக்கூர் கூறிவந்தார். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயை 'தீவிரவாதி' என குறிப்பிட்டார்.

இதற்கு சீஹோரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பதில் அளித்த திக்விஜய் சிங், "தவத்தினால் தியாகத்தாலும் தான் ஒருவர் துறவியாக முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். காவி ஆடைகளை உடுத்தினால் மட்டும் துறவியாக முடியாது. கர்கரேவுக்கும், எனக்கும் சாபம் விடும் நீங்கள், ஏன் தீவிரவாதிகளுக்குச் சாபம் அளிக்கவில்லை’’ எனக் கிண்டலாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளரைத் தீவிரவாதி எனக் கூறியதற்குத் தேர்தல் ஆணையம் இவரை விசாரணைக்கு உட்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories