அரசியல்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தீர்ப்பு சொல்வது என்ன ? 

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை முறைகேடாக எடுக்கப்பட்டதால் அதிமுக வேட்பாளரின் வெற்றிசெல்லாது என தீர்ப்பு வந்தும் இடைத்தேர்தல் வெளியிடாதது ஏன்?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தீர்ப்பு சொல்வது என்ன ? 
Thiruparangunram
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி திருப்பரங்குன்றம் சட்ட மன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் டாக்டர் சரவண னும் அ.இ.அ.தி.மு.க. வின் சார்பில் ஏ.கே.போஸ் என்பவரும் வேட்பாளர்களாக அத்தொகுதியில் போட்டியிட்டனர். இத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தீர்ப்பு சொல்வது என்ன ? 
A.K.Bose MLA

முதல்வர் ஜெயலலிதா அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்பதால் அ.இ. அ.தி.மு.க. வின் வேட்பாளரான ஏ.கே.போஸின் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப் படும் 'ஏ', 'பி' ஆகிய இரண்டு படிவங்களில் கையெழுத்திட வேண்டியவராகிறார். அவர் மையில் கையெழுத்து மட்டுமே இட வேண்டும். பெருவிரல் கைரேகை வைக்கக் கூடாது. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்ததால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு 'ஏ', 'பி' படிவங்களில் பெருவிரல் ரேகை நாட்டப்பட்டது. யாராவது ஓர் அரசு அதிகாரி - சப் - டிவிஷனல் அலுவலருக்குக் கீழ் இல்லாதிருப்பவர் முன் அந்தப் பெருவிரல் ரேகை பதியப்பட வேண்டும். ஆனால், எந்த அதிகாரி முன் ஜெயலலிதா தன் ரேகையைப் பதிந்தார் என்று தெரியவில்லை . அப்படி ஓர் அதிகாரி முன் நடந்ததா என்றும் தெரியவில்லை . டாக்டர் சரவணன், தி.மு.க. சார்பில் தொடர்ந்த வழக்கினால் சில உண்மைகள் தீர்ப்பில் வெளிப்பட்டன.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தீர்ப்பு சொல்வது என்ன ? 
Jayalalitha

ஆர்.டி.ஓ., டி.ஆர்.ஓ. முன்னிலையில் கைநாட்டுப் போடவேண்டும். அதுதான் செல்லத்தக்கதாகும். ஆனால் டாக்டர் பாலாஜி, ஜெயலலிதா கைநாட்டுப் போடுவதற்கு முன்னிலைப்படுத்தப்படுகிறார். இது சரியானது இல்லை . 28.10.2016-ல் ஏ.கே.போஸ், வேட்பு மனுவோடு ஜெயலலிதாவின் கைநாட்டு உள்ள 'ஏ', 'பி' படிவங் களை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கிறார். இது எப்படி நடந்தது?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தீர்ப்பு சொல்வது என்ன ? 
Rajesh Lakkani

தமிழகத்தின் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, 27.10.2016 ல் தேர்தல் கமிஷனிடம் கை நாட்டுக்காக அனுமதி கோருகிறார். அனுமதி கொடுக்கப்படுகிறது. அதே தேதியில் போஸ் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு வேட்புமனுவை 'ஏ', 'பி' படிவங் களோடு கைநாட்டு வைக்கப்பட்டுள்ளவைகளை வாங்கிக் கொள்ளச் சொல்கிறார், லகானி. ஒரே நாள் இடைவெளியில் இது நடைபெறுகிறது. போஸ் தொகுதியில் தேர்தல் அதிகாரியோ, டாக்டர் பாலாஜியின் முன்னிலையில் கைநாட்டு போட்டது சரியில்லை . அதற்குத் தகுதியுடைய அதிகாரியும் அவர் இல்லை என்று லகானியிடம் சொல்கிறார். மேலிடத்தில் சொல்கிறார்கள்; வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார் லகானி. அந்த மேலிடம் என்பது எது? நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டாமா?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தீர்ப்பு சொல்வது என்ன ? 
Doctor Balaji

நீதிபதி வழக்கை விசாரித்தபோது, டாக்டர் பாலாஜி முன்னிலையில் அவர் ஓர் அரசு அதிகாரி என்பதால், ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. இதன்படி டாக்டர் பாலாஜியைக் குறுக்கு விசாரணை செய்தனர். அவர் அளித்த வாக்கு மூலத்தின்படி ஜெயலலிதாவின் அறைக்குச் செல்வதற்கு முன்பாகவே 'ஏ', - 'பி' படிவங்களில் - ஜெயலலிதாவின் ரேகை பதியப்பட்டு விட்டது. எனவே டாக்டர் பாலாஜியின் முன்னிலையில் கைரேகை பதிவு செய்யப்படவில்லை. ரேகை பதிவு செய்யும் போதும் சுயநினைவோடு ஜெயலலிதா இருந்தாரா என்பதும் நிரூபிக்கப் படவில்லை . இவையெல்லாம் டாக்டர் சரவணனின் வழக்கறிஞர் அருணால் வாதமாக நீதிபதி முன் எடுத்து வைக்கப்பட்டன. வேட்பு மனுவோடு சமர்ப் பிக்கப்பட்ட 'ஏ', 'பி' படிவங்களில் உள்ள நான்கு கைநாட்டுகளையும் பார்க்கிறபோதே, அவை வேறுபாடு உடையனவாகவே தெரிகின்றன. இவை மட்டும் இல்லை.

டாக்டர் பாலாஜி ஓர் அரசு ஊழியர். இதே டாக்டர் ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விசாரணைக் கமிஷன் முன் சாட்சியம் அளிக்கும்போது அந்தப் படிவங்களில் இருப்பவை ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகைதான் என்றும், என் முன் பதிய வைத்தார் என்றும் கூறி இருக்கிறார். நீதிமன்றத்தில் ஒன்றும், விசாரணைக் கமிஷன் முன் ஒன்றும் ஒரு சம்பவத்தை பற்றிய முரண்பாடுகளான செய்திகளை டாக்டர் பாலாஜி முன் வைக்கிறார். அவர் அப்படிச் சொல்வதற்குக் காரணம் என்ன? "ஏ', 'பி' படிவங்களில் உள்ள பெருவிரல் ரேகை உண்மையில் ஜெயலலிதாவுடை யது தானா? அல்லது அவர் சுயநினைவு இல்லாத நிலையில் பதிவு செய்து கொண்டதா? அல்லது அவசர ஆத்திரத்திற்கு வேறொரு வருடைய பெருவிரல் அடையாளத்தைப் பயன்படுத்திக்கொண்டனரா? - என்பதெல்லாம் ஆராயப்படவேண்டும்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தீர்ப்பு சொல்வது என்ன ? 
M.G.R

1984-இல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது அவர் தேர்தலில் போட்டியிட்டார். அவர் வேட்புமனுவில் பெருவிரல் ரேகை பதியப்பட்டதும், அப்போது பெருஞ்செய்தியாக இருந்தது. ஆனால் அப்போது அவர் கட்சிக்கு - அதாவது அ.இ.அ.தி.மு.க.விற்குப் பொதுச் செயலாளராக இருந்தவர் வேறொருவர். வேட்பாளர் என்ற முறையில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் பெருவிரல் ரேகை அப்போது பதியப் பட்டுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இதுபோல பெருஞ் சர்ச்சைகள் எழ வாய்ப் பில்லை . ஆனால் எப்படி அவரிடம் பெருவிரல் ரேகை பெறப்பட்டது அவர் அறிந்தா? அறியாமலா? என்றும் அப்போது பேச்சுகள் இருந்தன. ஆனால் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட இந்த வழக்கு, அவர் தொடர்புடைய எதுவும் மர்மமாக இருப்பது போல இதுவும் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது.

டாக்டர் பாலாஜியின் வாக்குமூலங்களுக்குப் பிறகு நாம் பெரிதும் கவனங் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. ஏ.கே.போஸினுடைய வேட்பு மனுவில் உள்ளஏ', - 'பி' படிவங்களில் இருக்கும் பெருவிரல் ரேகை ஜெயலலிதா வினுடையது தானா? அரசு அலுவலர் ஒருவர் முன் அந்த ரேகை பதியப்பட்டு இருக்கிறதா? - என்று தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனரா என்று தெரியவில்லை. ஆனால் வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டனர்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தீர்ப்பு சொல்வது என்ன ? 
Chennai High Court

மேலும் உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டின் அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி, தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செய் லாளராக இருந்த கே.எப். வில்ஃபர்டு ஆகியோரை மிக்க கடுமையான கண்டனம் செய்து இருக்கிறது. அதாவது தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளான இந்த இருவர், வேட்பாளரின் ஆவணங்களில் அ.இ.அ.தி.மு.க.வின் தலைவர் இட்ட பெருவிரல் பதிவை ஆளுங்கட்சியோடு சேர்ந்து கொண்டு ஒரு மோசடிக்கு துணை போயிருக்கின்றனர் என்று நீதிமன்றம் கூறி இருக்கிறது. ஆகவேதான் உயர்நீதி மன்றம் ஏ.கே.போஸின் தேர்தல் செல்லாது என்று தீர்ப்புரைத்து இருக்கிறது.

(1) டாக்டர் பாலாஜி, இரண்டு அரசு விசாரணை மையங்களில் இரண்டுவிதமான கருத்துகளைச் சாட்சியமாக வழங்கி இருக்கிறார். அவர் டாக்டர் மட்டுமல்ல. ஓர் அரசு அதிகாரி, அதுவும் ஒரு முதலமைச்சர் பற்றி - கட்சித் தலைவரைப் பற்றிய பெருவிரல் பதிவில் குழப்பமாகச் சாட்சியமளிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இது மக்களைக் குழப்புகிற செய்தியாகும். ஆகவே டாக்டர் பாலாஜியின் மீது அரசு விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

(2) ஒரு வேட்பாளரின் தேர்தல் ஆவணங்களை அவர் சார்ந்த கட்சியின் தலைவர் நாடறிந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நிலையை அறிந்தும் - அந்த ஆவணங்களை - ஆராயாமல் - ஆளுங் கட்சியைச் சார்ந்த யாரோ ஒரு 'எக்ஸ்' க்கு அடி பணிந்து தேர்தல் ஆணையத்தின் இரு பெரும் அதிகாரிகள் ஆளுங்கட்சியோடு சேர்ந்து கொண்டு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மோசடியில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த இரு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

டாக்டர் சரவணன் தி.மு.க.வின் திருப்பரங்குன்ற வேட்பாளராக ஏ.கே.போஸுக்கு எதிராக களமிறங்கியவர். வெற்றி வாய்ப்பை இழந்தவரானாலும், போஸ் பெற்ற வெற்றியை மறுத்து அறைகூவல் விடுத்தவர். உயர் நீதிமன்ற நெடிய படிகளில் ஏறி இறங்கியவர். அவர்தான் வெற்றி வேட்பாளர் என்று உயர்நீதிமன்றம் அறிவிக்க முடியாமல் இருக்கலாம். அவரால் தொடுத்த வழக்கால் அரசு அதிகாரிகளின் 'சல்லாபம்' வெளியில் தெரிந்ததே, அதற்கு டாக்டர் சரவணன் தொடுத்த வழக்குதான் காரணமாக இருந்திருக்கிறது. அவருக்கு நமது பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம்.

தமிழ்நாட்டில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டுவிட்டன. 3+1 இன்னும் அறிவிக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது என்றனர். வழக்கு முடிந்து விட்டது. தீர்ப்புரைத்த அன்றே தேர்தல் ஆணையத்திற்கு கழகம், மீதமுள்ள தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கச் சொல்லி மனு கொடுத்திருக்கிறது. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தொகுதிக்கு, அவரின் இறுதி ஊர்வலம் நடைபெறும் போதே தேர்தல் அறிவித்த தேர்தல் ஆணையம், தமிழ் நாட்டில் 18-க்கு ஓர் அறிவிப்பு - மற்றதற்கு ஓர் அறிவிப்பு என்று வெளியிடுவ தற்குக் காத்திருப்பு என்ன? அ.இ.அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றதானா?

banner

Related Stories

Related Stories