உணர்வோசை

“வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா” : நெல்சன் மண்டேலா குறித்து கலைஞர் எழுதிய உணர்வுபூர்வ கடிதம் !

1951இல் இளைனார் அணியின் தலைவராகவே தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்தி மூன்று தான்! ஆம், வெள்ளை இருட்டை விலக்க கறுப்பு நிலாவின் பிறையாக அந்த இளைஞர் அணி தோன்றியது!

“வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா” : நெல்சன் மண்டேலா குறித்து கலைஞர் எழுதிய உணர்வுபூர்வ கடிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இளைஞர்களுக்கு வழி விடுவோம்! என்ற தலைப்பில் முத்தமிழற்ஞர் கலைஞர் எழுதிய கடிதத்தின் தொகுப்பு முரசொலி நாளேடு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு :-

உடன்­பி­றப்பே,

1990ஆம் ஆண்டு பிப்­ர­வரி திங்­கள் 11ஆம் நாள் காலை திருச்­சி­யில் திரா­விட முன்­னேற்­றக் கழக மாநாடு நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்­த­போது, மகிழ்ச்சி பொங்­கிட துள்­ளிக் குதித்­துக் கொண்டு மேடை­யி­லி­ருந்த ஒலி பெருக்­கி­யின் முன்­னால் நான் வந்து நின்­றேன். அலை­க­ட­லெ­னக் குழு­மி­யி­ருந்த தமிழ் மக்­க­ளைப் பார்த்­துச் சொன்­னேன்.

“தமிழ்ப் பெருங்­குடி மக்­களே!

கழக உடன்­பி­றப்­புக்­களே!

எல்­லை­யற்ற மகிழ்ச்­சியை ஏந்தி வந்­துள்ள செய்தி!

மண்டேலா விடுதலையால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தோர், மாநாட்டில் "நான் போதும் போதும் என்று கையமர்த்தும் வரையில், கடலில்லா திருச்சியில் கடலலைகளின் முழக்கத்தைச் எடுத்துக்காட்டியது.

27 ஆண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்னாப்பிரிக்கா நாட்டின் கறுப்பர் இனத்தலைவன் நெல்சன் மண்டேலா. விடுதலை செய்யப்பட்டுவிட்டார் - இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட மாநாட்டுப் பந்தலில் குழுமியிருப்போர் அனைவறாம் எழுந்து நின்று தொடர்ந்து கையொலி செய்யுங்கள்!" இந்தக் கருத்தமைந்த என் வேண்டுகோள்கேட்டு, செய்தனர்.

உத்தமர் காந்தியடிகள், தென்னாப்பிரிக்காவில் மனித உரிமைப் போர் நடத்தியபோதே நமது தென்னக மக்களின் ஆதரவையும் - அனுதாபத்தையும் பெற்றார் என்பதுபோல, மண்டேலா நடத்திய போராட்டத்தின்போதும் - தென்னிந்தியாவின் தமிழ் மக்களின் அனுதாபம் அவரது இயக்கத்திற்கு இருந்தது என்பதை இந்த நிகழ்ச்சி உலகத்திற்கு உலகமே அந்த ஒரு மனிதனின் சிறை வாசத்தைப் பற்றித்தான் அப்போது பேசிக் கொண்டும், கண் கலங்கிக் கொண்டுமிருந்தது.

“வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா” : நெல்சன் மண்டேலா குறித்து கலைஞர் எழுதிய உணர்வுபூர்வ கடிதம் !

காந்தியடிகள் நடத்திய அந்தப் போராட்டத்தில் இந்திய நாட்டின் தமிழ் நிலத்துக்குச் சொந்தக்காரர்களான நாகப்பன், நாராயணசாமி என்ற வாலிபர்களும், தில்லையாடி வள்ளியம்மாள் என்ற பெண்மணியும், சிறை புகுந்து, உடல் நலிந்து, உயிர் விட்டார்கள் என்பது வரலாறு – அந்த வரலாறு என்றும் நினைக்கப்படும் வண்ணம், கழக ஆட்சியின் கைவண்ணத்தால் உருவான அரிய சின்னங்கள், இன்றும் அழியாச் சின்னங்களாக தஞ்சை தில்லையாடியில் விளங்குகின்றன.

தென்னாப்பிரிக்காவிலும் கூட நமது இந்தியப் பிரதமராக நமது அணியின் நாயகராக விளங்கிய குஜ்ரால், 1997ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள், அந்தத் தியாகிகளின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் என்பது உணர்ச்சிமிக்க ஒர் நிகழ்ச்சியாகும்.

அந்தத் தென்னாப்பிரிக்காவில் கறுப்பர் இன விடுதலைக்காக, வெள்ளையர் ஆதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி, 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா; பின்னர் விடுதலைக்குப் பிறகு, அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றது பற்றியும் - அவரது துணைவியர்கள் அவரது தியாகப் போருக்குத் துணை நின்றது பற்றியும் - அவரின் வாழ்க்கை வரலாறு கூறும் ஏற்றத் தாழ்வுகள் பற்றியும் - எதுவும் விளக்க வேண்டிய அவசியமின்றி, அந்த மாவீரனின் வைர நெஞ்சம் -- அவன் வளர்ந்த சூழ்நிலை -- ஏற்றுக்கொண்ட அடக்குமுறை - கட்டிக்காத்த தன்மான உணர்வு - வழுக்கல் இல்லாத பொதுவாழ்வு -- இவையனைத்தும் அவனது இளமைக் காலத்திலேயே வாய்க்கப் பெற்றவனாக இருந்ததை எண்ணி, வியப்பு அடைகிறோம் - அவ்வழி வளரும் இளைஞர்கள் எவராயினும், வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளோம்.

1918 ஜூலை 18 மண்டேலா பிறந்த நாளாகும் - கறுப்பின மக்களிடையே நெல்சன் மண்டேலா குடும்பத்தினர் ஃகோஸா இன வகையைச் சேர்ந்தவர்கள். அக்குலத்தின் தலைவராக மண்டேலாவின் தந்தை இருந்தார். அவர் பெயர் ஹென்றி கான்யிஸ்வா காட்லா என்பதாகும். அவருக்கு நான்கு மனைவிகள் - பனிரெண்டு குழந்தைகள் - மூன்றாம் மனைவியின் மகன்தான் நெல்சன் மண்டேலா. குடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர் -- குடும்பத்துக்கு மொத்தம் மூன்று சின்னஞ்சிறு குடில்கள் - ஒன்று சமைத்திட! ஒன்று பொருள்களை சேமித்திட! - ஒன்று உறங்கிட! பாய்களில்தான் படுக்கை அவர்கள் அனைவருக்கும்!

“வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா” : நெல்சன் மண்டேலா குறித்து கலைஞர் எழுதிய உணர்வுபூர்வ கடிதம் !

ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு -- அவர் அன்னை எழுதப் படிக்க தெரியாதவர் -- ஆயினும், மகனைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி வைத்தார். 1928ஆம் ஆண்டுக்குள் மண்டேலாவின் தந்தை இறந்து விடவே, அந்தத் தந்தையின் மைத்துனரான " ஜோன்கின்டாபா என்பவர், மண்டேலாவின் படிப்பைக் கவனித்துக் கொண்டார். க்யூனு எனப்படும் மண்டேலா பிறந்த ஊரில், ஒய்வு நேரங்களில் பெரியோர்கள் கூறும் தமது இனத்தவர் பற்றிய பழைய கதைகளையும், வெள்ளையர்களால் தம்மின வரலாறுகள் மறைக்கப்பட்டதையும், வெள்ளையர் நுழைவுக்கு முன்பு அங்கிருந்த கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறைகளையும் பெரியோர்கள் கூறிடக் கேட்டு புத்துணர்ச்சி பெறும் மண்டேலா, படிப்பையும் விடவில்லை! ஆடு மாடு மேய்க்கும் வேலையையும் தொடர்ந்தார்.

அதே சமயம் தமது இனத்தாரின் துயர் துடைத்து, உரிமைகள் நிலை நாட்டப்பட வேண்டுமென்று அந்த இளம் வயதிலேயே அழுத்தமான உறுதி பூண்டார் மண்டேலா. 1938ஆம் ஆண்டு அவரது உறவினர் ஜோன்கின்டாபா முயற்சியினால், மண்டேலா, முதலில் "கெல்ட் டவுன்" கல்லூரியிலும் – பிறகு "போர்ட்ஹேர்” கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். அப்போதுதான் அவரது முதல் போராட்டத்துக்கான துளிர் விடத் தொடங்கியது. அங்கே வெளிப்பட்ட இன வேற்றுமைக் கொடுமையை எதிர்த்து, இளைனார் மண்டேலா தலைமையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்படவே, கல்லூரி நிர்வாகம் மண்டேலாவை வெளியேற்றியது. ஆம் - மண்டேலாவுக்கு அவர் நடத்திய உரிமைப் போரில் கிடைத்த முதல் தண்டனை அது!

மன்னிப்பு கேட்டுக் கொண்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம் என்று கூறப்பட்டது. அதை மானப் பிரச்சினை என்று கூறி மறுத்து விட்டார் மண்டேலா. பின்னர் தனது மாமன் மகன் ஜஸ்டிஸ் என்பவருடன் சேர்ந்து ஜோகன்ஸ்பெர்க் நகருக்குச் சென்று தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்தார். அங்கிருந்தும் அவரது உறவினர் தூண்டுதலால் வெளியேற்றப்பட்டதால், மண்டேலா, சட்டம் படித்திட முனைந்தார். 'லாசா சிடிங்ஸ்கி” என்ற வெள்ளைக்கார வழக்கறிஞரிடம் சட்டக் கல்வியில் பயிற்சி பெற்று திறமையாளரானார்.

மண்டேலா வாழ்க்கை, கட்டுப்பாடுமிக்கது என்றும், அதிகாலையில் எழும் வழக்கமுடையவர் என்றும் - நாளும் தவறாமல் நடைப் பயிற்சி மேற் கொண்டவர் என்றும் - எளிமையான உணவே அருந்தி, எப்போதும் சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர் என்றும் -- பெண்களுக்குத் துணையாக அடுக்களை வேலைகளில் கூட ஈடுபடுவார் என்றும் - அவரது சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. கறுப்பர் இன மக்களுக்கும், வெள்ளையருக்குமிடையே கடுமையான புகைச்சலும் -- மோதுதல்களும் இருந்தபோதிலும், மண்டேலா, இரு தரப்பு மாணவர்களிடமும் பரந்த மனத்துடனும், பண்பாட்டுடனும் நேசமாகப் பழகி, அமைதியாக காந்திய வழியிலே அறப்போர் நடத்தி, இன வேற்றுமைக் கொடுமையை அகற்ற நினைத்தார்!

“வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா” : நெல்சன் மண்டேலா குறித்து கலைஞர் எழுதிய உணர்வுபூர்வ கடிதம் !

1948ஆம் ஆண்டு, மண்டேலா, இளைஞர் அணியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடக்கப்பட்ட கால கட்டத்தில், கறுப்பின மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் அவர் கண்களை உறுத்தின. "காஃபிர்" என்ற இழிந்த வார்த்தையினால் கறுப்பின மக்கள் அழைக்கப்பட்டதையும் - தெருக்களில் நடமாட முடியாமல் தடுக்கப்பட்டதையும் -- மண்டேலாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுமட்டுமா? கறுப்பின மக்களின் நிலங்களை வெள்ளையர் பறித்துக் கொண்டனர் -- வெள்ளையர் கறுப்பரிடையே காதல் மற்றும் கலப்பு மணங்கள் - சட்ட விரோதமாயின - இனப்பகை, பெரும் பகை --கறுப்பினத்தாருக்கு வேலைகள் மறுக்கப்பட்டன- கேளிக்கை இடங்களில் அவர்களுக்கு அனுமதியில்லை - மீறினால் கடும் தண்டனை. இந்தக் கொடுமைகளை எதிர்த்து, 1948இல் இளைனார் அணியின் செயலாளரான மண்டேலா, 1949இல் கூட்டிய மாநில மாநாடு ஒன்றில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த தீர்மானம் நிறைவேற்றினார்.

அதைத் தொடர்ந்து, அவர், 1951இல் இளைனார் அணியின் தலைவராகவே தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்தி மூன்று தான்! ஆம், வெள்ளை இருட்டை விலக்க கறுப்பு நிலாவின் பிறையாக அந்த இளைஞர் அணி தோன்றியது!

வெள்ளையர் வெறித்தனத்தை எதிர்த்து அமைதியாக அரும்பிய மண்டேலாவின் அறப்போர், புரட்சி மலராகவும் பூத்திடத் தவறவில்லை. கறுப்பு இன மக்களின் மாணவர் போராட்டமும் தொடங்கியது. புரட்சிகள் - கிளர்ச்சிகளின் விளைவாக - சிறைப்பட்ட மண்டேலாவை, நாட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால், விடுதலை செய்வதாக தென்னாப்பிரிக்க வெள்ளையர் அரசு கூறியது. அதற்கு மண்டேலா மறுப்புரைத்து, “எங்களுக்கு சுதந்திர உரிமை இல்லையென்றால், நான் அடைபட்டுள்ள சிறைச்சாலையே திருப்தி அளிக்கக் கூடியது" என்று கூறிவிட்டார்.

“வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா” : நெல்சன் மண்டேலா குறித்து கலைஞர் எழுதிய உணர்வுபூர்வ கடிதம் !

அவர் நடத்திய போராட்டங்களின் தொடர்ச்சியாக, நீண்ட கால சிறை வாழ்க்கையைத்தான் அவர் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. சிறையில் ஆரம்ப நிலையில் கேவலமான உணவு, அதுவும் பசியை அடக்கக் கூடியதல்ல -- கல் தரையின் மீது உறங்குவதற்கு ஒரு பாய் - நாளேடுகள் வைத்திருந்தால் சிறை சட்டப்படி தண்டனை - நாள் முழுவதும் வேலை - ஒவ்வொரு நாளும் வேலை முடிந்ததும் உடைகள் அவிழ்க்கப்பட்டு சோதனை - இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்த மண்டேலா, இளமை முதல் அவர் கொண்ட வைராக்கியத்தின் எதிரொலியாக சிறைக் கொடுமைகளைப் பற்றி அவர் சொன்ன வாசகம் பின்வருமாறு:-

"சிறைக் கொடுமை என்னை இன்னலுக்கு ஆளாக்கவில்லை. சிறைக்கு வெளியே என் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை எண்ணித்தான் நான் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறேன்" என்பதாகும். மண்டேலாவின் இந்தத் தியாக வாழ்க்கை தென்னாப்பிரிக்க நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, இந்தப் பூமிப் பந்தில் வாழ்ந்து கொண்டு புத்துலகம் காணத் துடிக்கின்ற ஏறுநடை இளைஞர்களுக்கெல்லாம் இதய கீதமாகும்.

1959ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி, மண்டேலா உள்ளிட்ட விடுதலை இயக்க வீரர்களின் வழக்கில் இவர்களுக்கு எதிராக வாதாடிய அரசு வழக்கறிஞார் பிரோ என்பவர், நோயால் சிக்குண்டு மறைந்து விட்டார் என்ற செய்தி வானொலியின் மூலம் அறிவிக்கப் பட்டது. அந்தச் செய்தியினை அறிந்த போராட்ட வீரர்கள் மன மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக, அவர் அரசு வழக்கறிஞாராக தனக்கு அளிக்கப்பட்ட பணியினை சிறப்பாகச் செய்தார் என்ற வகையிலும், இன்னும் சொல்ல வேண்டுமேயானால், மனிதநேய மிக்க மனிதராகத்தான் அவர் செயல்பட்டார் என்ற வகையிலும், மறைந்த அந்த வழக்கறிஞருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது தங்கள் கடமை என்பதைக் காட்டிக் கொண்டார்கள்.

தேச விடுதலைப் போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு சுமார் 27 மாதங்களுக்குப் பிறகுதான் அவர்கள் மீதான வழக்கு விசாரணைக்காகவே எடுத்துக்கொள்ளப்பட்டது. குற்றவாளிக் கூண்டிலேநிறுத்தப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவரும், தாங்கள் எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர். அவர்களுக்குத் தரப்பட்ட குற்றப் பத்திரிகை மட்டும் 2000 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. 210 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டுமென்று கோரப்பட்டதில்,200 பேர் காவல் துறையைச் சார்ந்தவர்கள்.

“வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா” : நெல்சன் மண்டேலா குறித்து கலைஞர் எழுதிய உணர்வுபூர்வ கடிதம் !

வழக்கு விசாரணை, தொடர்ந்து திருச்சபை அமைந்துள்ள பழைய காலக் கட்டிடம் ஒன்றிலே நடைபெற்றது. அந்தத் திருச்சபையின் பாதிரியாருடைய அறைதான் உணவருந்தும் இடமாகப் பயன்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் திருமதி தையநாயகி பிள்ளை என்ற ஒரு அம்மையார்தான் தொண்டர் அணி யினருடன் இணைந்து இந்திய முறைப்படி உணவுப் பொருட்களைத் தயாரித்து, விசாரணைக் கைதிகளுக்கு அளித்து வந்திருக்கிறார். முற்பகலில் வடையும், தேநீரும் என்றும், பிற்பகலில் அதுபோலவே ஏதாவது சிற்றுண்டியும், தேநிறம் என்றும், மதியம் இந்திய முறைப்படி யான உணவு என்றும் அந்த அம்மையார் பரிமாறியிருக்கிறார்.

இவ்வாறு தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்ட வீரர்களுக்கு வழக்கு நடைபெற்ற நாட்களில் எல்லாம் உணவளித்து உபசரித்த அந்த திருமதி தையநாயகி பிள்ளை என்பவர் யார் தெரியுமா? அவர் தமிழ்நாட்டில் பிறந்த ஒருவரின் வழி வந்தவர் என்பதை, நெல்சன் மண்டேலா பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்களில் காணும்போது, நம்மையும் அறியாமல் ஒரு மகிழ்ச்சி நம் உள்ளத்தில் ஏற்படத்தான் செய்யும்.

இளம் வயதிலேயே புரட்சிக்காரராக மாறி,தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்காகப் பாடுபட்ட நெல்சன் மண்டேலாவைப் பற்றி நமது இளைஞர்களுக்கு நினைவூட்டுகின்ற இந்த நேரத்தில், அவர் கூறிய சில வரிகளோடு இன்றைய கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

"The Indian campaign became a model for the type of protest that we in the youth league were calling for

(இளைஞார் இயக்கத்தின் சார்பில் நாங்கள் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டத்திற்கு, இந்தியர்கள் நடத்திய இயக்கமே முன்மாதிரியாக இருந்தது.)

அன்புள்ள, மு.க.

(முரசொலி 18.11.2007)

Related Stories

Related Stories