உணர்வோசை

“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” - கலைஞர் கடிதம் !

கழக உடன்பிறப்புகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய கடிதம்

“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” - கலைஞர் கடிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உடன்பிறப்பே,

இளைஞர்களைப் பற்றி இப்போதுதான் எனக்கு அக்கறை ஏற்பட்டுள்ளது போலக் கற்பனை செய்து கொண்டு, இறுமாப்பு, கர்வம், ஆணவம் இவற்றின் இறுக்கமான பிடியில் சிக்கியுள்ள, அரசியலுக்குப் புதிய வரவுகள் சிலர், எடுத்த எடுப்பிலேயே, தங்களை ஏணி மீது ஏற்றி, செங்கோலைக் கையிலே கொடுத்து விடுவார்கள் மக்கள் என நம்பிக் கொண்டு, எனக்கு ஏன் இளைஞார்கள் மீது திடீர்க் கவலை என்று கேட்டுள்ள கிறுக்குத்தனமான கேலியைச் சில ஏடுகள் வெளியிட்டிருப்பதைக் கண்டு வியந்தேன். சிரிப்பையும் அடக்க இயலவில்லை. பழுத்த பழமாம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பகுத்தறிவுப் பிரச்சாரத்தை இளமைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டதை நாடறியுமே!

அந்தத் தென்னாட்டுச் சாக்ரடீசின் தன்னிகரற்ற தளபதியாக விளங்கிய அறிஞர் அண்ணா, தனது 29வது வயதில் பெரியாரின் பேரன்பைப் பெற்று, திராவிடர் இயக்கத்தின் தளபதியாகவே போற்றப்பட்டது, அவரது நல் இளமைக் காலத்தில் தானே!

அவர் எழுதத் தொடங்கி இடையில் நிறுத்தி யுள்ள திராவிட இயக்க வரலாறு, என் தம்பி யினால் தொடர்ந்து எழுதப்படும் என எந்த இளைஞனைச் சுட்டிக் காட்டினார்? அன்னையெனஅவரை நேசித்த என்னையல்லவா? அவரது ஆணைக்கேற்ப இந்த இயக்கத்தில் தொடர் அத்தியாயங்களை உன் போன்ற உடன்பிறப்புகளின் உறுதுணையோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். அதனால், என்னைப் பார்த்து எவ்வளவு தான் மக்கள் புகழ் மாலைகளைக் குவித்துக் கொண்டிருந்தாலும், அடக்கமான போக்குத்தான் அரசியலில் அனைவருக்கும் இணக்கமான போக்கு என்பதை உணர்ந்து நடப்பவன் மட்டுமல்ல, என் உடன்பிறப்புகளும் அவ்வாறு நடக்க வேண்டுமென்று விழைபவன் நான்.

“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” - கலைஞர் கடிதம் !

ஒரு முறை சென்னைக் கடற்கரையில், ஐந்து லட்சம் பேர் நிறைந்த கூட்டத்தில், அண்ணா பேசும்போது குறிப்பிட்டார் - "பண்டித நேரு. கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் - நான் கொட்டிக் கிடக்கும் செங்கல்!" என்பதாக! அந்த உரை அண்ணாவை கோபுர உயரத்துக்கு மட்டுமல்ல! இமயக் கொடு முடி உயரத்துக்கு ஏற்றி விட்டது. அந்தஅண்ணனின் அடக்க சுபாவத்தில் அணுவளவாவது பெற்றிருக்க வேண்டுமென்ற என் அவாவின் அடையாளமே. 1940இல் நான் அண்ணாவின் "திராவிட நாடு" இதழில்எழுதிய "இளமைப்பலி!"-- அடுத்து, நடிகவேள் நாடக மன்றத்துக்கு எழுதித் தந்த நாடகம் “இளைஞான் குரல்!" -"இளமைத் துடிப்பு" என்ற தலைப்பில் மாநாடுகளில் நான் நிகழ்த்திய சிறப்புச் சொற்பொழிவுகள்.

இதோ, உலகில் தோன்றிய புரட்சிக்காரர்கள்- தலைவர்கள், மேதைகள் எனப்படும் புகழேந்திகள், மறைந்தும் மறையாத மாவீரர்கள், கொள்கைக் குன்றங்கள் - அனைவருமே இளம் வயதினர் - -அவர்கள் இயற்றிய சாதனைகளுக்கு, அவர்தம் இளமையும் ஒரு துணைக் காரணமென்பேன்-- இதோ, என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்வீர் - நெஞ்சில் நிறுத்திக் கொள்வீர்! -- நான் இக்கடிதங்கள் வாயிலாகத் தருகின்ற பட்டியலை!

இன்றைக்குப் பாடுபடும் பாட்டாளி வர்க்கம் - ஏழையர் சமுதாயம் - நடுத்தர மக்கள் கூட்டம் -- எந்தக் கொள்கையின் வெற்றிக்காக, கொடியேந்தி நெடிய பயணம் நடத்துகிறதோ, அதற்கான விடியலை வழங்கிட விரிவான தத்துவக் கருவூலம் எழுதித் தந்தாரே! அந்தக் காரல் மார்க்ஸ், பதினேழாவது வயதில் பள்ளிக் கல்விமுடித்து, இருபத்தி நான்காவது வயதில் பத்திரிகைஆசிரியராகி பல எதிர்ப்புகளை தாங்கி கொள்கை முழக்கிய இளைஞார்தான்.

அந்த இளமைக் காலத்திலே தான் “வேலையைத் தேர்ந்தெடுப்பது குறித்த ஒர் இளைஞனின் மனப்பதிவுகள்" என்ற ஆய்வுக் கட்டுரையில், அற்புதமான, ஆழமான, இயற்கையான தனது சிந்தனையின் வெளிப்பாடாகப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:-

“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” - கலைஞர் கடிதம் !

“நாம் எந்தத் தொழிலை விரும்புகிறோமோ, எந்தத் தொழிலில் தகுதியை வளர்த்துக் கொள்கிறோமோ அந்தத் தொழிலை அடைய முடியாமலேயே போய்விடலாம். ஏனெனில், சமுதாயத்தோடு நமக்குள்ள உறவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதாகவே உள்ளது... மனித குலத்தின் நன்மைக்காகப் பணியாற்றுவதன் மூலம் தம்மை உயர்தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மனிதர்களைத்தான் வரலாறு மகத்தான மனிதர்கள் என அழைக்கிறது. மக்களின் மகிழ்ச்சிக்காகப் பாடுபடும் மனிதனே மிகவும் மகிழ்ச்சியான மனிதன்'

மொத்த மனிதகுலத்தின் விடுதலை யோடு தொடர்புடையதே யூதர்களின் விடுதலையும் என மார்க்ஸ் முழங்கினார். முதலாளித்துவ சமூக அமைப்பு என்ற எல்லைக்குள் அரசியல் விடுதலைமிகப்பெரிய முன்னேற்றம்தான். ஆனால், மனிதகுல விடுதலை அதற்கும் மேலானது என்று வாதிட்டார் மார்க்ஸ். மனிதர்கள், தங்களது சொந்த சக்தியை ஒரு சமூக சக்தியாக அறிந்து கொண்டு, அமைப்புரீதியாகத் திரண்டால்தான் விடுதலை என்பது சாத்தியம் என்றார் அவர்.

மார்க்ஸின் இரண்டாவது கட்டுரை “சட்டம் பற்றிய ஹெகலின் தத்துவம் குறித்த விமர்சனம். இந்தக் கட்டுரையில் முதலாளித்துவத்தைத் தூக்கி எறியும் புரட்சிகர வர்க்கம் பாட்டாளி வர்க்கமே என்று அடையாளம் காட்டிய மார்க்ஸ், அந்த பாட்டாளி வர்க்கத்திற்கு தத்துவம் என்ற ஆயுதம் தேவை என்றார்.

"தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தை பாட்டாளி வர்க்கத்திடம் பெறுகிறது. அதுபோலவே பாட்டாளி வர்க்கம் தத்துவத்திடமிருந்து தனது ஆன்மிக ஆயுதத்தைப் பெறுகிறது... வெறும் விமர்சனங்களால் பொருளாயத சக்திகள் வீழ்த்தப்படுவதில்லை. பொருளாயத சக்திகள் பொருளாயத சக்திகளால்தான் வீழ்த்தப்பட வேண்டும். ஒரு கருத்து மக்களைச் சென்றடைந்து அதுஅவர்களின் மனதில் பதிந்துவிடுமானால். அதுவே பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது”என்ற புகழ்பெற்ற மார்க்சிய நிலையை, இந்த கட்டுரையில்தான் மார்க்ஸ் வரைந்தார்.

“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” - கலைஞர் கடிதம் !

கார்ல் மார்க்ஸ், தமது இருபத்தி ஒன்பதாவது வயதில், ஏங்கல்ஸ் எழுதிய "கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" என்ற அறிக்கையின் அடிப்படையில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதி இறுதிப்படுத்தும் பணியை மேற்கொண்டார். தமது முப்பதாவது வயதில், அதாவது 1848, பிப்ரவரியில் "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வெளியிட்டார். இதுதான் இன்று- வரை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு முதலாவது வேலைத்திட்ட அறிக்கையாகும். இதன் அடிப்படைகள் மீதுதான் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

"கட்சி அறிக்கை" என உலகெங்கிலும் அழைக்கப்படும் இந்த அறிக்கை, மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்குகிறது. முதலாளித்துவத்தின் தோற்றுவாயையும், வளர்ச்சியையும், அதன் எதிர்காலப் போக்கையும் துல்லியமான அறிவியல் தன்மையோடு விளக்குகிறது. இந்த அறிக்கை மூலதனத்திற்கு எதிரான கம்யூனிசத்தின் கம்பீரமான பிரகடனமாகும். "பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர, இழப்பதற்கு ஏதுமில்லாதவர்கள்; அவர்கள் வெற்றி பெறுவதற்கென்று அனைத்துலகும் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!"என்ற காவிய மணம் தோய்ந்த போர்ப் பிரகடனத்துடன் கட்சி அறிக்கை நிறைவு பெறுகிறது.

மார்க்சியத்தை உருவாக்குவதற்கு அந்தப் பேரறிவாளனோடு இணைந்து நின்று உதவிய மற்றொரு சிந்தனையாளர் பிரெடரிக் ஏங்கல்ஸ். உண்மையில் அந்தச் சிந்தனையாளர் இல்லாவிட்டால் மார்க்சியம் என்று ஒன்று, இன்று உருவாகியிருக்குமா என்பது சந்தேகம்தான். மார்க்ஸோடு இணைந்து மார்க்சியத்தின் பல கூறுகளை உருவாக்கிய பெருமை ஏங்கல்சுக்கு உண்டு. மார்க்சியம் என்று அழைக்கப்படுவது கார்ல் மார்க்சின் பெயரில் இருந்தாலும், உண்மையில் அது ஏங்கல்ஸ், மார்க்ஸ் ஆகிய இருவரது கூட்டு உழைப்பு, ஆய்வு, சிந்தனை ஆகியவற்றின் விளைவு ஆகும். உலக வரலாற்றிலேயே இருவர் இணைந்து ஒர் உலகப் பொதுவான தத்துவத்தை உருவாக்கியுள்ளனர் என்றால் அது மார்க்சியம்தான்.

“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” - கலைஞர் கடிதம் !

ஏங்கல்ஸ், தமது பத்தொன்பதாவது வயதிலேயே, அதாவது 1839ஆம் ஆண்டு "உப்பர்டால் கடிதங்கள்" என்ற தலைப்பில் பல கடிதங்களை எழுதினார். அவை மதத்தையும், அரசனையும் எதிர்த்து எழுதப்பட்டவை ஆகும். அதனால், பல இடங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. அவரது இருபத்தி இரண்டாவது வயதில், ஏங்கல்சிற்கு "ரெயின்லாந்து கெஜட்" என்ற பத்திரிகையின் தொடர்பு கிடைத்தது. இந்தப் பத்திரிகையின் ஆசிரியராக கார்ல் மார்க்ஸ் பொறுப்பேற்றிருந்தார்.

அப்போது ஏங்கல்சிற்கு மார்க்சைத் தெரியும். ஆனால் சந்தித்தது இல்லை. மார்க்ஸ் புரட்சிகரமான கருத்துகளை இந்தப் பத்திரிகை மூலம் பரப்பினார். பொதுவுடைமைக்கருத்துகளைப் பற்றி அதிகம் எழுதினார். ஏங்கல்ஸ் இக்கருத்துகளை ஏற்றுக் கொண்டார். அவர் தமது இருபத்தி நான்காவது வயதில், 1844ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜெர்மனி செல்லும் வழியில் பாரீசில் தங்க நேரிட்டது. இந்த ஆண்டில்தான் ஏங்கல்ஸ் மார்க்சை சந்தித்தார்.

இது ஒரு முக்கியமான சந்திப்பாகும். அதுமட்டுமல்லாமல், உலகத்தையே மாற்றிய ஒரு தத்துவத்தை உருவாக்குவதற்கு இந்தச் சந்திப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தச் சந்திப்பைப் பற்றியும், மார்க்சிய சிந்தனைகளைப் பற்றியும் திரு. வெ.சாமிநாத சர்மா அவர்கள், அவருடைய, "கார்ல்மார்க்ஸ்" என்ற நூலில்,"உலகில் எத்தனையோ சந்திப்பு கள் ஏற்படுகின்றன. எத்தனையோ சிநேக ஒப்பந்தங்கள் அழியாத மையினால் எழுதப்படுகின்றன.

“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” - கலைஞர் கடிதம் !

இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுகின்றவர்களும், பெரிய மனிதர்களாயிருந்திருக்கிறார்கள். ஆனால் மார்க்ஸ், ஏங்கல்ஸ் சந்திப்பு, நட்பு, ஒப்பந்தம், உலக சரித்திரத்தை மாற்றியமைத்ததைப் போல வேறு யாருடைய சந்திப்பும், நட்பும், ஒப்பந்தமும் மாற்றியமைக்கவில்லை. இருவருடைய சுபாவங்களும், அனுபவங்களும் வேறுவேறாயிருந்த போதிலும் ஒன்றுக் கொன்று துணை செய்வனவாயிருந்தன. எப்படி குடும்பமெனும் கப்பலை இயக்கிக் கொண்டு போவதற்கு மனமொத்த தம்பதிகள் அவசியமாயிருக்கிறதோ, அப்படியே சமதர்மமெனும் கப்பலை, கொந்தளிப்பான சமுத்திரத்தில் மிதக்க விடுவதற்கு ஒரே பார்வையுடைய இரண்டு பேர் அவசியமாயிருந்தது"என்று வர்ணனை செய்துள்ளார்.

பிரெடரிக் ஏங்கல்ஸ், தமது இருபத்தி ஐந்தாவது வயதில், 1845ஆம் ஆண்டு மார்க்சுடன் சேர்ந்து இருவரும் கூட்டு முயற்சி ஒன்றை மேற்கொண்டனர். அதாவது, ஹெகலுக்குப் பிந்திய கால ஜெர்மானியத் தத்துவத்தைப் பற்றியது அந்த நூல். அந்த நூலின் பெயர் "ஜெர்மானியக் கருத்தியல்". இந்த நூல் மார்க்சிய இலக்கியத்தில் மிக முக்கியமானதாகும். இந்த நூலில் வரலாற்று இயல் பொருள் முதல் வாதம் என்பது பற்றி விளக்கம் இடம்பெறு வதைக் காணலாம். வரலாறு என்பது பொருளியல் தன்மை உடையது என்பதை மார்க்சும், ஏங்கல்சும் விளக்குகின்றனர்.

அதாவது உற்பத்தி(மனிதனுக்கும், இயற்கைக்கும் உள்ளஉறவு) பரஸ்பர உறவு (ஒரு மனிதனுக்கும், மற்றொரு மனிதனுக்கும் உள்ள உறவு) என்பவைதான் மனிதனது செயலுக்குரிய இரு பகுதிகள் என்பதை விளக்குகின்றனர். இந்தப் பொருள் உற்பத்தியானதுதான் மனிதனது வாழ்வைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. அதாவது, உற்பத்தி முறையானது வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிறது. இந்த உற்பத்தி முறை சமூக உறவுகளையும், அரசியல் உறவுகளையும் தீர்மானிக்கிறது.

“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” - கலைஞர் கடிதம் !

“கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான பின்னர், மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரது வாழ்க்கை முழுவதும் புரட்சிகர இயக்கங்களில் பங்கெடுக்கும் போக்கில் மாறியது. அவரது இருபத்தி எட்டாவது வயதில் ஏங்கல்ஸ் ஜெர்மனிக்குச் சென்றார். அங்கு புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அங்கு நிலவிய சீர்திருத்தவாதப் போக்கினை எதிர்த்துப் போராடினார்.

1849ஆம் ஆண்டு. அதாவது தமது இருபத்தொன்பதாவது வயதில், ஏங்கல்ஸ் "ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம்" என்ற நூலை எழுதினார். மார்க்சிய கொள்கை வளர்ச்சியில் இது மிக முக்கியமான ஒரு நூல். வரலாற்றியல் பொருள்முதல் வாதத்தினைப் பயன்படுத்தி வர்க்கப் போராட்டம் பற்றிய விளக்கத்தை ஏங்கல்ஸ் இதில் அளிக்கிறார். மதம் பற்றியும், மதத்தின் பங்கு பற்றியும் இதில் ஒரு விரிவான விவாதம் இடம் பெறுகிறது.

அன்புள்ள

மு.க.

நன்றி :- (முரசொலி - 13.11.2007)

Related Stories

Related Stories