உணர்வோசை

புரளி பேசும் மனிதன்.. மனிதப் பரிணாமத்தில் மாறாத ஒரு விஷயத்தை தடுப்பது எப்படி ?

மனிதப் பரிணாமம் முழுக்க தகவல் பரிமாற்றம் எத்தனையோ மாற்றங்கள் கொண்டபோதும் ஒருவருக்கு பின் பேசும் இந்த புறம் பேசும் வழியிலான தகவல் பரிமாற்றம் மட்டும் மாறவே இல்லை.

புரளி பேசும் மனிதன்..  மனிதப் பரிணாமத்தில் மாறாத ஒரு விஷயத்தை தடுப்பது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புரளியில் பலவகைகள் உண்டு. வீட்டுத் திண்ணை பாட்டி, தாத்தாக்கள் தொடங்கி முற்போக்கு முகாமின் பிரபலங்கள் வரை வகை தொகையாக பல ரக புரளிகள் உண்டு.

அடிப்படையில் மனிதனுக்கு புறம் பேசுதல் பிடிக்கும். மனிதப் பரிணாமத்தில் புறம் பேசுதலுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. குழுவாக இயங்கும் மனிதனுக்கு தனியாக ஒவ்வொருவரை பற்றியும் ஒரு கருத்து இருக்கும். அக்கருத்தை பொதுவில் அவன் பேச மாட்டான். அப்படி பேசினால் சம்பந்தப்பட்ட நபரின் உறவையோ அல்லது அவருடன் நட்பில் இருப்பவரின் உறவை, உதவிகளையோ இழக்கும் நிலை ஏற்படலாம். எனவே தனியாக அக்கருத்தை தனக்கு நெருக்கமான வட்டத்திடம் மட்டும் பகிர்ந்து கொள்வான்.

அந்தப் பகிர்வில் சிறுமை இருக்கலாம். கோபம் இருக்கலாம். அக்கறை இருக்கலாம். எள்ளல் இருக்கலாம். பரிவு இருக்கலாம். பொறாமை இருக்கலாம். ஆனால் மனிதப் பரிணாமம் முழுக்க தகவல் பரிமாற்றம் எத்தனையோ மாற்றங்கள் கொண்டபோதும் ஒருவருக்கு பின் பேசும் இந்த புறம் பேசும் வழியிலான தகவல் பரிமாற்றம் மட்டும் மாறவே இல்லை.

புரளி பேசும் மனிதன்..  மனிதப் பரிணாமத்தில் மாறாத ஒரு விஷயத்தை தடுப்பது எப்படி ?

இப்பரிமாற்றத்தில் இருக்கும் தகவல் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அரைகுறை உண்மையாக இருக்கலாம். அல்லது முற்றிலும் பொய்யாக இருக்கலாம். அல்லது எந்த சம்பந்தமும் இன்றி புத்தம் புதிதாக புனையப்பட்டதாகவும் இருக்கலாம்.

புறம் பேசுதலுக்கு காரணமாக ரகசியங்கள் இருக்கின்றன. எவரிடமும் வெளியே சொல்லப்படாத ரகசியங்கள் இருக்கும் என்கிற யதார்த்ததில் இருந்துதான் இத்தகைய கை, கால் முளைத்த தகவல்கள் உருவாகின்றன.

பரிணாமரீதியாக தொடருவதால் புறம் பேசுதலை நல்ல விஷயமாக கொண்டிட முடியாது. இன்றைய சூழலில் பெரும்பாலும் எதிர்மறைத் தகவல்கள் பரப்பவே புறம் பேசுதல் பயன்படுத்தப்படுகிறது.

புரளி பேசும் மனிதன்..  மனிதப் பரிணாமத்தில் மாறாத ஒரு விஷயத்தை தடுப்பது எப்படி ?

காதலுறவில் இருந்தவர் காதலரை பற்றி குறை கூறுவர். முன்னேறிய ஒருவரை பற்றி இழித்து பேசுபவர். தவறான நடத்தை கொண்டோரை பற்றி உண்மைகளை பரப்புவர். சிக்கலான மனிதர்களை பற்றிய உண்மைகளை கூறுவர். பதவியிலிருந்து ஒருவரை இறக்க அரசியல் வேலைகளை புறம் பேசி செய்வர். ஒருவரை வீழ்த்துவதற்கான அணி சேர்க்கையை புறம் பேசுதலின் வழி கட்டுவோரும் உண்டு. ரசபாசமான தகவல்களே அதிகமாக தனி நபர்களை குறித்து புறம் பேசப்படுகின்றன.

எனவே நீங்கள் என்ன செய்தாலும் உங்களைப் பற்றிய புறம் பேசுதலை தடுக்கவே முடியாது. உங்களின் காதலரோ எதிரியோ துரோகிகளோ இழியர்களோ உங்களை பற்றி புறம் பேசிக் கொண்டே இருப்பார்கள். அது உங்களுக்கு தெரிய வந்து கொண்டே இருக்கும்.

புரளி பேசும் மனிதன்..  மனிதப் பரிணாமத்தில் மாறாத ஒரு விஷயத்தை தடுப்பது எப்படி ?

'குணா' படத்தின் கமல் கோபுர உச்சியிலிருந்து கீழே எட்டி பார்த்தும் 'ஹும்.. மனுஷங்க!' என எள்ளி நகைத்து கடந்து விடப் பாருங்கள். இல்லையென்றால் அவற்றைக் கேட்டு ரசியுங்கள். ஆனால் அதிலேயே தேங்கி, நொக்குறுகி, குமைந்து, துவளத் தொடங்கி விடாதீர்கள்.

பேச விஷயம் இல்லாதோருக்கும் நாம் பேச்சாகி வாழ்வளிக்கிறோம் என சந்தோஷம் கொள்ளுங்கள்.

banner

Related Stories

Related Stories