உணர்வோசை

பெண்ணின் திமிர் உண்மையில் ஆணின் திமிரா ? முதலாளித்துவத்தின் லாப சிந்தனைக்கு பெண் பலியாவது எப்படி ?

முதலாளித்துவம் ஆணுக்கிருந்த மகிமையை பெண்ணுக்கும் கொடுத்திருக்கிறது. காரணம், பெண்ணின் மேல் உள்ள அக்கறையால் எல்லாம் அல்ல.

பெண்ணின் திமிர் உண்மையில் ஆணின் திமிரா ?  முதலாளித்துவத்தின் லாப சிந்தனைக்கு பெண் பலியாவது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஒரு கொலை ஏன் நடக்கிறது?

ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் கொல்கிறான்?

ஆண் தவறு செய்திருக்கலாம். பெண் தவறு செய்திருக்கலாம். கூலி வேலையாக இருக்கலாம். பெற்றோராக இருக்கலாம். ஆனால் எங்கோ ஏதோ ஒரு சிக்கல் நேர்ந்திருக்கிறது. ஏதோ இருவரின் வாழ்க்கை பாட்டங்களுக்கு தடை விழுந்திருக்கிறது. அந்த தடைக்கு அடுத்தவர் காரணம் என்ற புள்ளியில் தொடங்குகிறது குற்றத்துக்கான சிந்தனை.

இந்த குற்றச்சிந்தனை பெருகுவதற்கு பல சமூக நடைமுறைகள் உதவுகின்றன. தடையிலிருந்து சுலபமாக வெளியே வர முடியாத அளவுக்கு அழுத்தம் தரும் சமூக நம்பிக்கைகள். சாதிகள், மதங்கள். அதை போற்றி பாதுகாக்கும் சட்டங்கள். பொருளாதார பிளவுகள். Commodification. பொதுப்புத்தியால் இயங்கும் ஊடகம். தன் லாபத்துக்காக ஊடகம் உருவாக்கும் பொதுப்புத்தி போன்றவை. அடிப்படையாக ஆண் புத்தி!

பெண்ணின் திமிர் உண்மையில் ஆணின் திமிரா ?  முதலாளித்துவத்தின் லாப சிந்தனைக்கு பெண் பலியாவது எப்படி ?

எல்லாவற்றுக்குமே ஆணை குறை சொல்லலாமா? பெண் திமிர் கொண்டு ஆடவே இல்லையா?

உண்டு. ஆனால் அங்கு நன்றாக ஆராய்ந்து பாருங்கள். அந்த பெண் கொண்டிருக்கும் திமிர், அடிப்படையில் ஒரு ஆணின் திமிராக இருக்கும். தந்தை, அண்ணன், தம்பி அல்லது கணவன், போன்ற ஆண்களின் திமிரை பிரதிநிதித்துவப்படுத்தும் தாயின் வழி திமிராக இருக்கும். கார்த்தி சுப்புராஜ் பாணியில் சொல்வதானால் “ஆம்பளத் திமிர் கொண்ட பொம்பளைகளுக்கு பிறந்த மகள்களாக’” இருப்பர். ஆணின் சொத்து, சாதி, மதம், அகங்காரம், அந்தஸ்து என இன்னும் ஆணின் இன்னபிற லொட்டு லொசுக்குகளை கட்டி காப்பாற்றும் ஆறு பெண்கள் கொண்ட குழு ஒன்று இயங்கும் குடும்பமாக அது இருக்கும்.

வேட்டைக்கு செல்பவனாக தானும், சுள்ளிகள் பொறுக்கி, சிறுதானியங்கள் பயிரிட்டு, குழந்தை பெற்று தருபவளாக மட்டும் பெண் இருக்க வேண்டும் என்கிற ஆணின் மனநிலை இது. மிகவும் பழமையான - விவசாயம் அறிமுகமான காலத்தைய - வீடு பெண்ணுக்கு உலகம் ஆணுக்கு என்ற நிலப்பிரபுத்துவ சிந்தனையின் நீட்சி!

நகரத்தில் நிலப்பிரபுத்துவ சிந்தனையா?

ஆம்.

பெண்ணின் திமிர் உண்மையில் ஆணின் திமிரா ?  முதலாளித்துவத்தின் லாப சிந்தனைக்கு பெண் பலியாவது எப்படி ?

கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து நிலப்பரப்பை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அது கொடுத்த சிந்தனைப்பரப்பு சுலபமாக மாறுவதில்லை. அதற்கான முழு விருப்பமும் விழிப்புணர்வும் இருந்தாலொழிய!

உலகமயமாக்கல் ஆணையும் பெண்ணையும் சரி நிகராகத்தானே வைக்கிறது?

ஆம். முதலாளித்துவம் ஆணுக்கிருந்த மகிமையை பெண்ணுக்கும் கொடுத்திருக்கிறது. காரணம், பெண்ணின் மேல் உள்ள அக்கறையால் எல்லாம் அல்ல. இத்தனை காலமும் அடிமைப்படுத்தி, பெண்களிடம் நிலப்பிரபுத்துவம் ஏற்படுத்தி வைத்திருக்கும் Fragility, முதலாளித்துவத்துக்கு வசதியாக இருக்கிறது. பண்டங்களாக மாற்ற பெண்களை சுலபமாக ஈர்க்கமுடிகிறது. அப்படியான மாற்றம் ஏற்படுத்தும் சமூக சிக்கல்களுக்கு முதலாளித்துவம் பொறுப்புடன் பதிலளிக்கிறதா என்றால் இல்லை. அதன் லாப சிந்தனைக்கு அது தேவையும் இல்லை.

பெண்ணின் திமிர் உண்மையில் ஆணின் திமிரா ?  முதலாளித்துவத்தின் லாப சிந்தனைக்கு பெண் பலியாவது எப்படி ?

முதலாளித்துவத்துக்கு தேவை சந்தையும் பண்டமும் அதிக நுகர்வாளர்களும் மட்டும்தான். மற்ற எந்த அறமும் அதற்கு கிடையாது. குடும்பமாக அமர்ந்து ஒரு டிவி பார்த்து அளவளாவியது மறைந்து அறைக்கொரு டிவி கொடுத்து, தனிநபர்களை உருவாக்கி, நுகர்வை பெருக்கிக் கொள்ளும் உத்திதான் அதனுடையது. அதிக தனி நபர்கள் எனில், அதிக தன்னலம்.

இவையாவும் ‘மொட்டைத்தலை-முழங்கால் முடிச்சாகவோ’ Chaos Theory ஆகவோ தெரியலாம். ஆனால் இந்த அடிப்படை எதையும் புரிந்துகொள்ளாமல் எந்த ஆணியையும் பிடுங்க முடியாது என்பதுதான் யதார்த்தம்.

பெண்ணை தெய்வமாக்கிவிட்டு வீட்டுக்குள் தூக்கிப்போட்டு மிதிப்பதை போல், பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லையே என வெதும்பிவிட்டு பெண்களை கொல்லும் ஏனைய மனிதர்களாகத்தான் கடைசியில் நாம் எஞ்சுவோம்.

banner

Related Stories

Related Stories