உணர்வோசை

'கோகுலத்தில் சீதை' - ரிஷி கதாபாத்திரத்தில் வரும் கார்த்திக் நல்லவரா கெட்டவரா ?

Undefined relationships கொடுக்கும் பாதுகாப்பை பெண்கள் ரசிக்கிறார்கள். அவற்றுள்தான் அவர்களால் காதலிக்க முடியும்.

'கோகுலத்தில் சீதை' - ரிஷி கதாபாத்திரத்தில் வரும் கார்த்திக் நல்லவரா கெட்டவரா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

கார்த்திக்கின் ரிஷி கதாபாத்திரம் சுவாரஸ்யமான பாத்திரம். அவனுக்கு பெண்ணிடம் காமம் மட்டும்தான் தேவை. நேரடியாக தன் தேவையை சொல்லி, உடன்படுகிற பெண்களுடன் கலவுவான். எந்த பாசாங்கும் இருக்காது.

நாயகி உடன்பட மாட்டாள். அவளை ரிஷி நிர்ப்பந்திக்க மாட்டான். ஒரே வீட்டில் இருக்கும் சூழல் வரும். அப்போதும் அவளை காமத்துடன் அவன் அணுக மாட்டான். ஏனெனில் அவனுடைய தேவை was well defined. அது இல்லை என ஆன பிறகு திரும்ப அந்த தேவையை தன் மயக்குறு வித்தைகளின் வழி எல்லாம் சாதிக்க அவன் விரும்ப மாட்டான். பிறகு நாயகி ஒரு தோழியாக இருப்பாள். Friendship and sex are different planes என்ற maturity ரிஷியிடம் இருக்கும். இறுதியில் காதல் என்றெல்லாம் வழக்கமான ஜல்லியடிப்போடு இயக்குநர் படத்தை முடித்திருப்பார்.

ரிஷி போன்ற நபர்களுக்கு நாம் பல பெயர்கள் வைத்திருக்கிறோம். 'பொறுக்கி', 'பெண்ணை உடலாக மட்டுமே பார்ப்பவன்', 'பெண்ணை மதிக்காதவன்', 'ரோமியோ' என நிறைய வார்த்தைகள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ரிஷி நேர்மையானவன்.

'கோகுலத்தில் சீதை' - ரிஷி கதாபாத்திரத்தில் வரும் கார்த்திக் நல்லவரா கெட்டவரா ?

ரிஷி போன்ற பெண்கள் இல்லையா?

இருக்கிறார்கள். BP மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய பேர் இருக்கிறார்கள்!

இதுதான் சமூகம். இதை கண்டு, தெரிந்து, இதன் சிக்கல்களை பொதுவெளியில் பேசுவோம். மறைப்பதோ, பேச மறுப்பதோ, தவறு என முத்திரை குத்தி ஒடுக்குவதோ எந்த சரியையும் கொடுத்துவிடாது. Sexting, Phone Sex எல்லாம் இன்று காதலிலேயே வந்து விட்டது. Fling relationship, Open relationship, Fuck Buddy என பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை எல்லாமும் இருபாலரின் ஒத்துழைப்போடே நடக்கின்றன.

எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டு ஆனால் இவை எல்லாவற்றையும் செய்வதற்கான வழியாக காதலை கொள்வோரை மட்டும் நாம் ஏற்கிறோம்.

விவாகரத்து ஆனவர்கள் இருக்கிறார்கள். விவாகரத்துக்கு காத்திருக்கும் married singles இருக்கிறார்கள். Single Parents இருக்கிறார்கள். கல்யாணத்தில் நம்பிக்கை அற்று single ஆக வாழ்பவர்கள் இருக்கிறார்கள். மணம் முடிந்து, கணவரோ மனைவியோ ஏதோவொரு வகையில் காமுற முடியாத நிலைக்கு ஆட்பட்டவர்கள் இருக்கிறார்கள். பல குடும்பங்களில் துணைகள் asexual ஆக இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் இந்த சமூகம் என்ன நிவாரணம் வைத்து இருக்கிறது?

'கோகுலத்தில் சீதை' - ரிஷி கதாபாத்திரத்தில் வரும் கார்த்திக் நல்லவரா கெட்டவரா ?

பெண்களுக்கு இன்றைய digital age நிறைய சாத்தியங்களை கொடுத்திருக்கிறது. நிறைய ரகசியங்களை கொடுத்திருக்கிறது. சமூக தளங்கள் முழுக்க சிவப்பு ஹார்ட்டின்களும் முத்தங்களும் லவ் யூக்களும் இறைந்து கிடக்கின்றன.

ஓர் ஆண் தன்னை ரசிப்பதை, கவிதை பாடுவதை பெண்கள் ரசிக்கிறார்கள்; ஆண்களை போலவே. பல நேரங்களில் அவற்றை பெண்கள் ஊக்குவிக்கிறார்கள். பல ஆண்கள் அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மிக எளிதாக Any problem Shalu? என நைஸாக ஓர் உறவுக்குள் புகுந்து குழப்பி பிரிவு ஏற்படுத்துகிறார்கள். ஆதரவு பேசுகிறார்கள். பின் காதல் வயப்படுத்துகிறார்கள். கலவுகிறார்கள்.

உண்மையில் பிரச்சினை இது போன்ற undefined relationships-தான். இந்த ரசனை, அன்பு, flirting, கொஞ்சல், possessiveness, சிணுங்கல் என்றெல்லாம் ஊடே புகும் ஆண்களோடு பெண்களும் பெண்களுடன் ஆண்களும் கொள்ளும் உறவை இருபாலரும் define செய்யவே மாட்டார்கள். அதிகபட்சம் போனால் friend என்ற definition மட்டும்தான். இருப்பதிலேயே அடித்து நாசப்படுத்தப்பட்ட வார்த்தை நம்மூரில் friendதான். வாயிருந்தால் ஆயுள் முழுக்க அழுது தீர்க்கும்.

மற்ற நாடுகளில் எல்லாம் இப்பிரச்சினைகள் கிடையாது. காதலையே dating, relationship, moving together, marriage என பல கட்டங்களாக define செய்து வைத்திருக்கிறார்கள். பிற வகை உறவுகளுக்கும் defined motives-உடனே பெயர்கள் வைத்திருக்கிறார்கள். Casual sex, Blind Date, Sex Mate என பல வகைகள். Masturbation-ஐயே ஆண்கள் மட்டும்தான் செய்வார்கள் என நம்பும் பெரும்பான்மை கொண்ட பெருமைமிகு ஊர் நம்மூர்.

Undefined relationships கொடுக்கும் பாதுகாப்பை பெண்கள் ரசிக்கிறார்கள். அவற்றுள்தான் அவர்களால் காதலிக்க முடியும். கொஞ்சி கொள்ள முடியும். கலவிக் கொள்ள முடியும். ஏனெனில் சமூகம் திணித்து வைத்திருக்கும் பெண் என்ற ஒழுக்க பிம்பத்துக்குள் அவர்கள் சிக்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் தேவை இது என நிர்ணயித்து பேச தயங்குகிறார்கள்.

'கோகுலத்தில் சீதை' - ரிஷி கதாபாத்திரத்தில் வரும் கார்த்திக் நல்லவரா கெட்டவரா ?

ஒருவேளை ஆண்கள், தனக்கு தேவை என்ன என ரிஷி போல define செய்துவிட்டால் அவர்கள் பதறுகிறார்கள்.

தனக்கான ஒழுக்க பிம்பம் உடைந்துவிட்டதாக கற்பனை செய்கிறார்கள். இத்தனைக்கும் ரிஷி போல் முற்றிலும் சம்பந்தப்படாத பெண்ணிடம் கூட கேட்க மாட்டார்கள். தனக்கு தெரிந்த, இது போன்ற inclination கொண்ட பெண்ணிடமே கேட்பார்கள். அதுவரை அதே விஷயத்தை undefined ஆக பேசிக் கொண்டிருந்தவர்கள் அதற்கு பிறகு கோபம் கொள்கிறார்கள். Sexism என்றெல்லாம் பேச தொடங்கி அந்த ஆண்களை நோகடிக்க தொடங்கி விடுகிறார்கள். இதில் 'Any problem Shalu?' ஆண்கள் வேறு துணைக்கு வந்து ஒரு பெரும் உளவியல் தாக்குதலை தொடுத்து விடுகிறார்கள்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என தெரிகிறதா?

Emotionally drain ஆகி ஏதோவொரு காரணத்தால் தனித்து வாழ்ந்து, காமம் தேவைப்படுகிற பலரின், கேட்கும் நாகரிகத்தை உடைக்கிறீர்கள். உங்களின் சுயநல அரசியலுக்காக அந்த நபரை போட்டு ஒடுக்குகிறீர்கள். அவர்கள் எல்லாம் அப்படி இருப்பதற்கான காரணங்களை வழங்கும் சமூகத்தை கேள்வி கேட்காமல், ஒருவனை மட்டும் சிலுவையில் தொங்கவிட்டு புண்ணியம் தேட முயற்சி செய்கிறீர்கள்.

அந்நிய நாட்டில் இருந்து வரும் மூலதனம் அதோடு சேர்த்து அந்த நாட்டின் வாழ்வியல் முறைகளையும்தான் எடுத்து வரும். அந்த வாழ்வியல் முறைகளை பொதுவில் பேசி இந்த தலைமுறையின் new age பிரச்சினைகளை விவாதித்து அவர்களை தயார்படுத்துல் தான் சரியாக இருக்க முடியுமே தவிர, அவற்றை மறுத்தலோ மறைத்தலோ குற்றங்களைத்தான் பெருக்கும். அகச்சிக்கல்களை உருவாக்கும்.

வித்தியாசம் தெரிந்து கொள்ளுங்கள்!

banner

Related Stories

Related Stories