உணர்வோசை

“சொந்த மாவட்ட மக்களையே ஏமாற்றிய எத்தர் தான் எடப்பாடி பழனிசாமி” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-15

அரசாங்க பணத்தை கோடி கோடியாக எடுத்து, பக்கம் பக்கமாக விளம்பரம் தரும் பழனிசாமி, சொந்தத் தொகுதியை, சொந்த மாவட்டத்தை ஏமாற்றிய எத்தர் தான் என்பது நிரூபணம் ஆகிவிட்டது!

“சொந்த மாவட்ட மக்களையே ஏமாற்றிய எத்தர் தான் எடப்பாடி பழனிசாமி” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-15
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே வணக்கம்!

எடப்பாடியையே ஏமாற்றியவர் தான் எடப்பாடி பழனிசாமி!

தனது சொந்தத் தொகுதியில் கூட எந்த அடிப்படை பிரச்னையையும் பழனிசாமி தீர்க்கவில்லை. பிறகு எப்படி தமிழ்நாட்டில் மற்ற தொகுதியில், அம்மக்களின் பிரச்னையை பழனிசாமி தீர்ப்பார்?

சுமார் 10 ஆயிரம் பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளார்கள் எடப்பாடி தொகுதியில் மட்டும். அவர்களது அனைத்து விண்ணப்பங்களையும் கட்டுக்கட்டாக அடுக்கி எடுத்து வந்து பொதுவெளியில் காட்டினார் தி.மு.க தலைவர்.

எடப்பாடி தொகுதியில் நடந்த கிராம சபையில் பேசிய பெண்கள் அனைவரது உரையும் கண்ணீரையும் கோபத்தையும் வரவழைத்தது. அரசாங்க அலுவலகத்துக்குப் போனால் எந்த இடத்தில் எவ்வளவு லஞ்சம் தர வேண்டி இருக்கிறது என்றார் ஒரு பெண். நெசவாளர் நிறைந்த அந்தப் பகுதியில் நெசவாளர் துயர் துடைக்க எதுவும் செய்யவில்லை என்றார் இன்னொருவர். டாஸ்மாக் கடைகள் மூலமாக ஏற்படும் சட்டம் ஒழுங்கை இன்னொருவர் சொன்னார். படித்த தன்னைப் போன்றவர்க்கு வேலை கிடைக்காத கொடுமையை இன்னொருவர் சொன்னார். 'ரோடு போடுவதைத் தவிர எதுவும் செய்யவில்லை, அதுவும் போட்ட ரோட்டையே திரும்பத் திரும்பப் போடுகிறார்கள்' என்று சொன்னார் மற்றொருவர்.

ஒரு முதலமைச்சர் தனது சொந்தத் தொகுதியைக் கூட எவ்வளவு கேவலமாக வைத்துள்ளார் என்பதை படம் பிடித்தது எடப்பாடியில் நடந்த கிராமசபை!

1. எடப்பாடி தொகுதியில் ஜவுளிபூங்கா

2. நெருஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம்

3. கொங்கணபுரத்தில் தொழில்பேட்டை

4. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் பயன்பாடு

5. எடப்பாடி அரசு மருத்துவமனை மேம்பாடு

6. கொங்கணபுரம் கூட்டுறவு வங்கி விவகாரம்

7. மின் மயானங்கள்

8. தேங்காய், மா, பருத்தி, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றுக்கு ஆதார விலை

9. பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம்

10. நிலக்கடலை விவசாயிகளுக்கு தனிகூட்டுறவு சங்கம்

- இந்த கோரிக்கைகள் எதையும் பழனிசாமி இந்த தொகுதிக்கு செய்து தரவில்லை. இவை அனைத்தும் தான் செய்து தருவதாகச் சொன்ன வாக்குறுதிகள் தான்.

நங்கவல்லி டவுண் பஞ்சாயத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் பொதுப்பணத்தை மோசடி செய்தார். இது கண்டுபிடிக்கப்பட்டது. அ.தி.மு.கவைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணை நாடகம் நடத்தி, இழப்பை மட்டும் பதிவு செய்து அவரை காப்பாற்றிவிட்டார் பழனிசாமி. அ.தி.மு.க உள்ளூர் தலைவர்களும் முதல்வருக்கு நெருக்கமான உதவியாளர்களும் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொங்கல் பரிசுகளாக விநியோகிக்கப்பட்ட கரும்பில் முதல்வரின் நெருங்கிய கூட்டாளிகள் கமிஷன் பார்த்துள்ளார்கள். தேங்காய் வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களது துன்பம் பழனிசாமிக்கு தெரியுமா?
எடப்பாடியில் உள்ள கொங்கனபுரத்தில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில், கர்நாடக குழாய் இணைப்பு இங்கு போலல்லாமல் நெடுஞ்சாலைகள் வழியாக செல்கிறது. ஆனால் இங்கு ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விவசாய நிலங்களையும் சேதப்படுத்துகிறது. இதுதான் விவசாயி ஆட்சியின் லட்சணமா?

“சொந்த மாவட்ட மக்களையே ஏமாற்றிய எத்தர் தான் எடப்பாடி பழனிசாமி” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-15

அ.தி.மு.க அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரியநாச்சியூர் கிராமத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை இடித்தது. இன்று அவரை அதைக் கட்டித்தரவில்லை. மக்கள் எதற்கெடுத்தாலும் எடப்பாடி நகரத்துக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. தூய்மையான பஞ்சாயத்து விருதை கொடுத்துள்ளார்கள். ஆனால் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஒன்றரை ஆண்டுகளாக சுத்தம் செய்யவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள்.

கிராமசபைக் கூட்டம் நடந்த பஞ்சாயத்தில் 52 சிண்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் உள்ளன. 3 ஆண்டுகளுக்கு முன்பு இதில் 40 தொட்டிகளில் இருந்து மோட்டார் அகற்றப்பட்டது, அவை இன்னும் பொருத்தப்படவில்லை. கிராமசபைக் கூட்டம் மைதானத்தின் நுழைவாயிலில் ஒரு சிண்டெக்ஸ் தொட்டி உள்ளது, அதில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் இல்லை. இதுதான் முதல்வரின் தொகுதியின் நிலைமை!

ஆனால் கழிவறை கட்டுவதில் கமிஷன் அடித்துவிட்டார்கள். மத்திய அரசு அறிமுகப்படுத்திய வீட்டு கழிப்பறை திட்டத்தில் சேர 2 ஆயிரம் ரூபாய் கமிஷனாக அ.தி.மு.க பிரமுகர்கள் வாங்கி இருக்கிறார்கள்.

தனிப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கு 4000-5000 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள். காசு கொடுத்தால் தான் டெண்டர் என்று பழனிசாமி நடந்து கொள்வதைப் போலவே அவரது கட்சிக்காரர்களும் காசு கொடுத்தால் தான் இது போன்ற அரசின் பயனை பெற முடியும் என்ற நிலைமை தான் எடப்பாடி தொகுதியில் இருக்கிறது! சேலம் மாவட்டத்துக்காவது ஏதாவது செய்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை!

* சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தகவல் தொழில் நுட்பப் பூங்கா பணிகள் இதுவரை முடக்கப்பட்டு உள்ளது.

* திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடக்கப்பட்டுள்ளது.

* பாதாளச் சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை!

* ஏற்காடு தாவரவியல் பூங்காவை முறையாக அமைக்கவில்லை!

* சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மேம்படுத்தவில்லை.

* சேலம் மாநகர எல்லைப் பகுதிகளை இணைக்கும் ரிங் ரோடு அமைக்கப்படும் என்றார் பழனிசாமி. இதுவரை அமைக்கவில்லை!

* தலைவாசல் சந்தை விரிவாக்கம் செய்யப்படவில்லை!

* ஓமலூரில் திரவிய தொழிற்சாலை அமையவில்லை!

* எடப்பாடி, வீரபாண்டி தொகுதியில் ஜவுளி பூங்கா அமையவில்லை!

* சேலத்தில் ராணுவத் தளவாடத் தொழிற்சாலை அமையப் போகிறது என்றார்கள். அமையவில்லை!

* சேலம் செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட் மேம்படுத்தப்படவில்லை. இவையும் பழனிசாமி கொடுத்த வாக்குறுதிகள் தான்.

இப்படி கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்ட ஆட்சி தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.

அரசாங்க பணத்தை கோடி கோடியாக எடுத்து, பக்கம் பக்கமாக விளம்பரம் தரும் பழனிசாமி, சொந்தத் தொகுதியை, சொந்த மாவட்டத்தை ஏமாற்றிய எத்தர் தான் என்பது நிரூபணம் ஆகிவிட்டது!

இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா?ஆதரிப்பீர் உதயசூரியன்!நன்றி வணக்கம்!

- தொடரும்...

Related Stories

Related Stories