உணர்வோசை

“விவசாய விரோதிகள் இருவரும் கைகோத்து வாக்கு கேட்க வருகிறார்கள்!” - அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே:14

போர் நினைவுச்சின்னத்தில் நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைக்கப்பட்ட அதேநேரத்தில் தான் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், கடும்குளிரில் போராடி உயிர் நீத்த வரலாறும் எழுதப்பட்டது!

“விவசாய விரோதிகள் இருவரும் கைகோத்து வாக்கு கேட்க வருகிறார்கள்!” - அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே:14
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே வணக்கம்!

போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்கிறார் மோடி! அவர்கள் விவசாயிகள் அல்ல, தரகர்கள் என்கிறார் பழனிசாமி! இத்தகைய விவசாய விரோதிகள் இருவரும் கை கோத்து வாக்கு கேட்க வருகிறார்கள்!

சனவரி 26 - குடியரசு தினம்! சுதந்திர இந்தியாவில் இதுவரை பார்க்காத ஒரு காட்சியை இந்தியா அன்று பார்த்துள்ளது. ஒரு பக்கம் குடிமக்களின் அணிவகுப்பு! இன்னொரு பக்கம் அரசின் அணிவகுப்பு!

இலட்சக்கணக்கான விவசாயிகள் அணிவகுத்து வந்தார்களே, அதுதான் குடிமக்களின் அணிவகுப்பு! தனது நிர்வாக இயந்திரத்தின் மூலமாக நடத்திய கலைநிகழ்ச்சிகளும் இராணுவ மிடுக்கும் தான் அரசின் அணிவகுப்பு! இந்தியா இதுவரை பார்க்காதது.

ஒரு நாள் அல்ல, மூன்று மாதங்களாக தலைநகரை முற்றுகையிட்டுள்ளார்கள் இந்திய விவசாயிகள். அவர்களது கோரிக்கை வெளிப்படையானது. மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும் தங்களுக்கு எதிரானது, விவசாயத்துக்கு எதிரானது என்று அந்த விவசாயிகள் நினைக்கிறார்கள். கருதுகிறார்கள். அந்த மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களோடு மத்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நாடகம் நடத்தியதே தவிர, உண்மையான அக்கறையோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஒரு வாரத்தில் கலைந்துவிடுவார்கள், இரண்டாவது வாரம் காணாமல் போய்விடுவார்கள், மூன்றாவது வாரத்தில் சிலர் தான் இருப்பார்கள் என்று நினைத்தது மோடி அரசு. ஏமாந்தது மோடி அரசு. நாளுக்கு நாள் விவசாயிகளின் எண்ணிக்கை கூடியதே தவிர, குறையவில்லை. விவசாயிகளின் வீரமும் விவேகமும் அதிகரித்ததே தவிர குறையவில்லை. அதன்பிறகும் இரக்கம் பிறக்கவில்லை மத்திய அரசுக்கு!

விவசாயிகளோடு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதற்குக் கூட உண்மையான காரணம், விவசாயிகள் மீதான அக்கறையால் அல்ல. சனவரி 26 குடியரசு தின அணிவகுப்புக்குள் விவசாயிகளை அப்புறப்படுத்திவிட நினைத்தார்கள். ஆனால் அசைந்து கொடுக்கவில்லை விவசாயிகள்.
கல்லைப் போல அசையாமல் இருந்தார் பிரதமர். நிலத்தைப் போல உறுதியாக இருந்தார்கள் விவசாயிகள்! அப்படியே அவர்களை சாலைகளில் விட்டுவிடுவது என்று மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது. எத்தனை மாதமும் ஆகட்டும், எத்தனை ஆண்டும் ஆகட்டும் என்ற எண்ணத்தோடு மத்திய அரசு இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் ஏழைத்தாயின் மகனிடம் இந்தியா எதிர்பார்த்தது இதை அல்ல!

''விவசாயிகளுக்கு நாடே தலைவணங்குகிறது" என்று குடியரசுத்தலைவர் பேசி இருக்கிறார். ஆனால் குடியரசு தினத்தன்று நாடே தலைகவிழ்ந்து நிற்பதைத் தான் விவசாயிகள் போராட்டம் காட்டி வருகிறது. குடியரசு தினத்தன்று ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஆற்றிய உரை சம்பிரதாயமான உரையே தவிர, சத்தியத்தின் பாற்பட்டது அல்ல!

வேளாண்மையில் மத்திய அரசு செய்யப் போவது சீர்திருத்தம் அல்ல, சீரழிவு என்பது குடியரசுத் தலைவருக்குத் தெரியாதா?விவசாயிகளுக்கு ஏற்பட்டது தவறான புரிதல் என்கிறார் அவர். எது தவறான புரிதல் என்று அவரால் சொல்ல முடிந்ததா? அந்த தவறான புரிதலை நீக்க அரசு என்ன செய்தது, செய்ய வேண்டும் என்பதையாவது அவரால் சொல்ல முடிந்ததா? இந்தியாவின் வெளிப்புற பாதுகாப்பை பற்றி மட்டுமே பேசும் அவரால், ஏன் உள்புற கட்டமைப்பு சிதைவு குறித்து பேச முடியவில்லை. உள்முரண்பாடுகளை நீக்காத நாட்டால், வெளிமுரண்பாடுகளை எதிர்கொள்ளும் வலிமையை அடைய முடியாது என்பது அவருக்குத் தெரியாதா?

சனவரி 26 அன்று டெல்லி பார்த்த காட்சிகள், குடியரசுத் தலைவருக்கு பெருமைக்குரியதா? தலைநகர் நோக்கிய எல்லாச் சாலைகளிலும் ராணுவ வாகனங்களுக்கு இணையாக விவசாய வாகனங்கள் வந்ததே? மக்கள் அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இதனை என்ன மாதிரியாக பார்க்கிறது?இந்தியா பார்த்த காட்சிகள், இந்திய குடியரசுக்கே களங்கம் ஏற்படுத்துபவை. அரசியல்சட்ட நெறிமுறைகளுக்கே முரணானவை.

போர் நினைவுச்சின்னத்தில் நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைக்கப்பட்ட அதேநேரத்தில் தான் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், கடும்குளிரில் போராடி உயிர் நீத்த வரலாறும் எழுதப்பட்டது! ராஜபாதையில் நடந்து வந்து குடியரசுத்தலைவர், இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். அதேநேரத்தில் தான் தேசியக் கொடிகளை தங்களது டிராக்டரில் பறக்கவிட்டு விவசாயிகள் வலம் வருகிறார்கள்!

ஒரு பக்கம் சர்ச்சைக்குரிய 'ரஃபேல்' போர் விமானங்களின் அணிவகுப்பு. இன்னொரு பக்கம் மண்ணும் மக்களும் கலந்த டிராக்டர்களின் அணிவகுப்பு! இந்தியாவின் கலாச்சார பெருமையைக் காட்டும் கலைநிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கும்போதே, இந்தியா ஒரு விவசாய நாடு என்பதை விவசாயிகள் காட்டுக் கொண்டு இருந்தார்கள்! கொரோனாவை காரணம் காட்டி, மக்களை பார்வையாளர்களாக இல்லாமல் குடியரசு தின அணிவகுப்பு நடத்தப்பட்டது. கொரோனாவை விடக் கொடியது மூன்று வேளாண் சட்டங்கள் என்பதால் விவசாயிகள் கூட்டம் கூட்டமாக தெருவுக்கு வந்தார்கள்!

“விவசாய விரோதிகள் இருவரும் கைகோத்து வாக்கு கேட்க வருகிறார்கள்!” - அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே:14
The Quint

அரசு பேரணிக்கு 5 அடுக்கு பாதுகாப்பாம். விவசாயிகள் பேரணிக்கு, விவசாயிகளே பாதுகாப்பு! 72 ஆண்டு குடியரசு நாட்டை எப்படி சீரழித்துவிட்டார்கள் என்பதை மூன்று மாதங்களாக நடக்கும் விவசாயிகள் போராட்டம் காட்டிவிட்டது!அறுபது நாட்களாக அமைதி வழியில் போராடிய விவசாயிகள் போராட்டத்துக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று யோசித்த மத்திய அரசு, அவர்களாகவே ஒரு சதியை உருவாக்கி... விவசாயிகளை வன்முறையாளர்களாக சித்தரித்து விட்டு, போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துடிக்கிறது. முனைப்புக் காட்டுகிறது. அதனை விவசாயிகளும் உணர்ந்துவிட்டார்கள். நாட்டு மக்களும் உணர்ந்து தெளிந்துவிட்டார்கள்.

நியாயமான அடிப்படையில் ஒரு போராட்டம் நடந்தால் அதனை நியாயமான வழியில் எதிர்கொள்ள மத்திய அரசு முனையவில்லை. பேச்சுவார்த்தை என்ற பெயரால் நாட்களை நகர்த்தியதே தவிர, நியாயமான பரிசீலனை என்பது இல்லை. அதுவும் மத்திய அமைச்சர் தோமர், விவசாயிகளுக்காக பேசாமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக பேசினார். 'விவசாயத்தில் பல்வேறு கம்பெனிகள் முதலீடு செய்வது விவசாயிகளுக்கு நன்மை' என்று சொல்லி வந்தார். இதுதான் விவசாயிகளை மேலும் மேலும் கோபம் கொள்ள வைத்தது. மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. மத்திய அரசு ஏன் திரும்பப் பெற மறுக்கிறது? அதானிக்காக மறுக்கிறது. அப்படியானால் இது ஏழைத்தாயின் மகனான மோடி ஆட்சியா? அதானியின் ஆட்சியா? நானும் விவசாயி என்று சொல்லி பச்சைத் துண்டைப் போட்டுக் கொண்டு பசப்பு சிரிப்பு சிரிக்கும் பழனிசாமியின் ஆட்சி அல்ல இது. இது விவசாயிகளை ஏய்க்கும் ஆட்சி தான்!

* டெல்டா மாவட்டங்களே கொந்தளித்துக் கிடக்கிறது.

* காவிரிக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.

* காவிரி உரிமை ஜல்சக்தி துறையின் தொங்கு சதையாக மாறிவிட்டது.

* மேகதாது அணை கட்டுவதை தடுக்கமுடியவில்லை.

* எரிவாயு குழாய்கள் அமைப்பதால் விவசாயிகள் பல மாவட்டங்களில் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

* ஹைட் ரோகார்பன் திட்டங்கள் விவசாயிகளை அச்சம் தர வைத்துள்ளது.

* கஜா புயல் தாக்கி மூன்று ஆண்டுகள் ஆனபிறகும் நிவாரணம் தரவில்லை.

* தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை.

* நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

* நெல் கொள்முதலை முழுமையாகச் செய்யவில்லை.* கரும்புக்கு விலை இல்லை.

* கரும்பு நிலுவைத் தொகை பல ஆண்டுகளாக பாக்கி.

* கூட்டுறவுத் துறையில் தனிநபர் கடன் தருவது இல்லை.

* விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மீட்டர் பொருத்தி இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திட்டமிடுகிறார்கள்.

* நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள்.* மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார்.

* போராடும் விவசாயிகளை புரோக்கர்கள் என்று கொச்சைப்படுத்துகிறார்.

- இத்தகைய போலி விவசாயியான பழனிசாமியை அரசியல் ரீதியாக அப்புறப்படுத்த வேண்டிய தேர்தல் தான் வருகிற சட்டமன்றத் தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள்! நன்றி வணக்கம்!

Related Stories

Related Stories