உணர்வோசை

"இந்தி நாடாக மாற்றுவதே பா.ஜ.க திட்டம்; அ.தி.மு.க கூட்டணியின் சதி!” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! -7

இந்தியாவை இந்தி - மொழி மட்டுமே உள்ள இந்தியாவாக முதலில் ஆக்குவதும், அதன்பிறகு சமஸ்கிருத இந்தியாவாக மாற்றுவதும் தான் பா.ஜ.கவினரின் திட்டம்!

"இந்தி நாடாக மாற்றுவதே பா.ஜ.க திட்டம்; அ.தி.மு.க கூட்டணியின் சதி!” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! -7
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! வணக்கம்!

இன்றைக்கு தமிழகத்தை ஒரு சூழ்ச்சி சூழ்ந்துள்ளது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை வெறும் அரசியல் கூட்டணியாக மட்டும் யாரும் நினைத்து விடாதீர்கள். அது மாபெரும் சதித் திட்டத்தின் ஒரு அங்கம் தான்!

அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து சில தொகுதிகளைக் கைப்பற்றுவது பா.ஜ.கவின் முதல் திட்டம். அ.தி.மு.க சார்பில் வென்றவர்களையும் அதன் பிறகு பா.ஜ.கவாக மாற்றுவது இரண்டாவது திட்டம்! அதனால் தான் பா.ஜ.கவின் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் என்று அமித்ஷா பேசி வருகிறார். தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி மலர்ந்தால் தான் என்னால் வேல் யாத்திரை முழுமையான வெற்றி என்று என்னால் சொல்ல முடியும் என்று விழுப்புரத்தில் பேசி இருக்கிறார் அமித்ஷா. அந்த முழு வெற்றியை அடைவதன் மூலமாகத் தான் இந்தியின் ஆட்சியை, சமஸ்கிருதத்தின் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்!

* இந்தியாவை இந்தி - மொழி மட்டுமே உள்ள இந்தியாவாக முதலில் ஆக்குவதும், அதன்பிறகு சமஸ்கிருத இந்தியாவாக மாற்றுவதும் தான் பா.ஜ.கவினரின் திட்டம்!

* 'மொழிப்பிரச்னைக்கு ஒரே தீர்வு தான் இருக்கிறது, சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக வருகிற காலம்வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்' - என்றார் அவர்களது மூத்த தலைவர் கோல்வார்க்கர்.

* 'நாடு முழுவதும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். அதே நேரத்தில் சமஸ்கிருத எழுத்துக்களை பிரபலப்படுத்த வேண்டும். எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருத எழுத்துக்களையே பொது எழுத்தாக அறிவிக்க வேண்டும்' - என்று பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கம் தீர்மானம் போட்டுள்ளது. இந்த நோக்கத்தைச் செயல்படுத்தத் துடிக்கிறார்கள்.

* இந்திய அரசியலமைப்புச் சட்டமோ, அல்லது வேறு சட்டம் எதுவும் இந்தியாவின் தேசிய மொழியாக எதையும் வரையறை செய்யவில்லை. இங்கே வரையறுக்கப்பட்டு இருப்பது அலுவல் மொழிகள் மட்டும் தான். இந்தியாவின் அலுவல் பணிகளுக்கு முதன்மையாக இந்தியும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகிறது.

*ஆங்கிலத்தின் பயன்பாடு குறித்து அலுவல் மொழிகள் சட்டம் 1963, அலுவல் மொழிகள் விதிகள் தெளிவுபடுத்துகிறது. உச்சநீதிமன்றத்திலும் மாநில உயர்நீதிமன்றத்திலும் ஆங்கிலமே நடைமுறை மொழி. மாநிலங்களுக்கு இந்தி, ஆங்கிலத்தில் கடிதங்கள் அனுப்பவேண்டும். தமிழகத்துக்கு ஆங்கிலத்தில் தான் அனுப்ப வேண்டும். ஆனால் மத்திய அரசுக்கு ஒருவர் எந்த மொழியிலும் தனது முறையீட்டைத் தரலாம்.

* அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் 22 மொழிகள் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளை மத்திய அரசு மதிப்பது இல்லை. இந்த மொழிகள் அனைத்தும் ஆட்சிமொழி ஆக வேண்டும்.

* ஆனால் இவர்கள் ஆங்கிலத்தை முழுமையாக அகற்றத் துடிக்கிறார்கள். அதற்குக் காரணம், ஆங்கிலத்தின் மீதான கோபம் அல்ல. அந்த இடத்துக்கு இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கொண்டு வரவே ஆங்கிலத்தை எதிர்க்கிறார்கள்.

* இவர்கள் தாய்மொழிப் பற்று இருப்பது போல நடிக்கிறார்கள். அதற்குக் காரணம், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதற்காக அல்ல. அந்த இடத்தில் இந்தியை உட்கார வைப்பதற்காக!

* இந்தியா பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், பண்பாடுகள் கொண்ட ஒன்றியம். இங்கே ஒரே ஒரு மொழி எப்படி தேசிய மொழியாக இருக்க முடியும்? சமஸ்கிருதக் கல்வி எதற்காக? அதன் பயன்பாடு என்ன? சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எத்தனை பேர்? சமஸ்கிருதம் வேண்டும் என்று சொல்கிற யாருக்காவது சமஸ்கிருதத்தில் பேசத் தெரியுமா? வாசிக்கத் தெரியுமா? சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்தும் தைரியம் உண்டா?

"இந்தி நாடாக மாற்றுவதே பா.ஜ.க திட்டம்; அ.தி.மு.க கூட்டணியின் சதி!” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! -7

* அனைத்து இடங்களிலும் இந்தியைக் கொண்டு வருவதும், அதன்பிறகு சமஸ்கிருதமயமாக்குவதும் அவர்களது எதிர்காலத்திட்டம். எச்சரிக்கையாக இருந்து இதை எதிர்க்க வேண்டியது தமிழர்களது கடமை! தடுக்க வேண்டியது மட்டுமல்ல, தமிழாட்சியை உருவாக்க வேண்டியதும் தமிழ் மக்களது கடமை!
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழாட்சியே நடந்துள்ளது.

* ஈராயிரம் ஆண்டு வரலாறு கொண்ட நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது!

* நூற்றாண்டுக் கனவான செம்மொழித் தகுதியை தமிழுக்கு பெற்றுத் தந்தது!

* 'மெட் ராஸ்' என்ற பெயரை 'சென்னை' என ஆக்கியது!

* தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை நிறைவேற்றியது!

* ஶ்ரீ,ஶ்ரீமதி என்ற சொல்லுக்கு பதிலாக திரு,திருமதி சொல்லை சட்டபூர்வம் ஆக்கியது!

* தலைநகரில் வள்ளுவர் கோட்டமும் கடல் நகரில் 133 அடியில் வள்ளுவர் சிலையும் அமைத்தது!

* திரும்பிய பக்கம் எல்லாம் திருக்குறளைத் தீட்டியது!

* தமிழ் வாழ்க என எழுத வைத்தது!

* சிலம்பின் பெருமையைக் காட்டும் பூம்புகார் கோட்டம் அமைத்தது!

* தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது!

* ஆட்சிமொழியாய் தமிழை முழுமைப்படுத்தியது!

* தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் அனைத்துப் பாடங்களையும் தமிழில் மொழிபெயர்த்து 1000க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை வெளியிட்டது!

* தமிழை கணினி மொழி ஆக்கியது!

* தமிழ் பயிற்று மொழிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இன்று பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தமிழில் படிக்கலாம்!

* ஆசிரியர்களுக்கு இணையானவர்களாக தமிழாசிரியர்களை ஆக்கியது. தமிழாசிரியர்களும் தலைமையாசியர் ஆகலாம் என உயர்த்தியது!

* தமிழை சனநாயகத்தன்மை உள்ளதாக மாற்றியது.

* உலகம் முழுவதும் தமிழைப் பரப்பியது!

* உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது!

* உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது!

* திராவிடப் பல்கலைக் கழகத்துக்கு

* நானும் தமிழன் டா என்று சொல்ல வைத்தது!

* அழகாய் தமிழைப் பேச வைத்தது!

* செரிவாய் தமிழை எழுத வைத்தது!

* பல்லாயிரம் படைப்பாளிகளை உருவாக்கியது!

* தமிழறிஞர் நூல்களை எல்லாம் நாட்டுடமை ஆக்கியதும், அவர்களது குடும்பத்துக்கு இலட்சக்கணக்கில் நிதி உதவி செய்ததும்!

* தமிழ்நெட் இணைய மாநாட்டை 1999 இல் நடத்தியது!

* ஓலைச் சுவடி மொழியை அச்சு மொழியாகவும் அச்சுமொழியை திரை மொழியாகவும், திரை மொழியை கணிணி மொழியாகவும் கணினி மொழியை நாளை உருவாகப் போகும் இன்னொரு நவீனமாகவும் உருவாக்க அடித்தளம் அமைத்தது!

இத்தகைய தமிழாட்சி மலர திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பீர். நன்றி வணக்கம்!

Related Stories

Related Stories