உணர்வோசை

“தி.மு.க-வுக்கு கொள்கையையும், பதவியையும் பற்றிய வகுப்பு எடுக்கவேண்டாம்” : மாலனுக்கு முரசொலி பதிலடி!

தி.மு.க மீது காழ்ப்பு உணர்ச்சியில் பேசிய நரகல் நாராயணன் (மாலன்)-க்கு முரசொலி நாளிதழ் பதிலடி கொடுத்துள்ளது.

“தி.மு.க-வுக்கு கொள்கையையும், பதவியையும் பற்றிய வகுப்பு எடுக்கவேண்டாம்” : மாலனுக்கு  முரசொலி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க எத்தனை இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கிண்டல் செய்யும் தொனியில், தி.மு.க தலைவருக்கு, பத்திரிக்கையாளர் மாலன் ‘துக்ளக்’ இதழில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். மாலனின் சாதி வன்மமும், தி.மு.க மீதான காழ்ப்பும் மட்டும்தான் அதில் தெரிகிறது.

தி.மு.க.வும் காங்கிரஸும் செய்து கொள்ளும் இடப்பங்கீடு என்பது இரண்டு கட்சித் தலைமைக்கு மட்டுமே உரிமையானது. இதில் எதற்காக விளக்குப் பிடிக்கிறார் மாலன்?

“சிவசங்கரி, கருப்பையா மூப்பனாரிடம் சொல்லி - கருப்பையா மூப்பனார், ராஜேஷ் பைலட்டிடம் சொல்லி - ராஜேஷ் பைலட், ராஜீவ் காந்தியிடம் சொல்லி - ராஜீவ்காந்தி, பிரபுசாவ்லாவிடம் சொல்லி - பிரபுசாவ்லா, அருண்பூரியிடம் சொல்லி ‘இந்தியா டுடே’ தமிழ் வார இதழுக்கு எடிட்டர் ஆனவர் மாலன்”.

“தி.மு.க-வுக்கு கொள்கையையும், பதவியையும் பற்றிய வகுப்பு எடுக்கவேண்டாம்” : மாலனுக்கு  முரசொலி பதிலடி!

இந்த காங்கிரஸ் தலைவர்கள் இல்லாமல் போயிருந்தால் ‘திசைகள்’ அறியாமல் சிறு பத்திரிக்கைகளில் சட்டையைக் கிழித்துக் கொண்டு இருந்திருப்பார் இந்த நரகல் நாராயணன். இவர் தி.மு.க. தலைவரின் ராசியை ஜோசியம் பார்க்கிறாராம்.

இவரது வேலைக்கு பரிந்துரைத்த இரண்டு தலைவர்கள் மரணமும் மிகத் துயரமானது. மாலனின் ராசிதான் இதற்குக் காரணமா? உங்களது ராசி என்ன மாலன்? இருந்த பத்திரிக்கை, ஊடகங்களில் எல்லாம் விரட்டப்பட்டவர், துரத்தப்பட்டவர். இதுதானே உங்களது ராசி?

மகாத்மா காந்தி மதவெறித்தனத்தால் கொடூரமாகக் கொல்லப்படும் போது அவருக்கு என்ன வயது என்பதனைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், ‘ஜனகணமன’ நாவல் எழுதிய பிழை கணக்காளன், பீகார் கணக்குகளைப் போட முன்வருவது பா.ஜ.க.வுக்கு விலைப்போன விவகாரமே தவிர வேறல்ல!

தி.மு.க.வுக்கு கொள்கையையும், பதவியையும் பற்றிய வகுப்பு எடுக்கவேண்டாம். துண்டு வேட்டி கதைகளை எங்களுக்கே விட வேண்டாம். தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் எல்லாம் ஆபாசமாக மாறிவிட்டதாகச் சொல்லி ‘திசைகள்’ தொடங்கிய நீங்கள், ‘குமுதம்’ போனதும் வெளியிட்ட டூ பீஸ்-களில் உங்கள் இதழியல் அறம் அம்மணமாக நின்றதே?

‘அன்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு’ என்ற உங்களது பீடிகை அருவெறுப்பைத் தருகிறது. இந்த புனுகு பூசுதல் வேண்டாம். நேரடி எதிரியாகவே மாலன்கள் வரலாம்!

ஓ! தி.மு.க ஆட்சிக்கு வரப்போகிறதே! அதனால் மாலன்கள் இப்போதே ‘துண்டு’ போட்டு வைக்கிறார்களே!

banner

Related Stories

Related Stories