உணர்வோசை

“சவால்கள் விடுத்து இந்தியாவை காவு கொடுத்துவிடாதீர்கள் பிரதமரே!” : இந்தியா - சீனா மோதலுக்குப் பின்னே..!

பிரதமர் மோடி எச்சரிக்கை என்ற பெயரில் சவடாலாகப் பேசி இந்தியர்களின் வாழ்க்கையோடு கபடி விளையாடக் கூடாது.

“சவால்கள் விடுத்து இந்தியாவை காவு கொடுத்துவிடாதீர்கள் பிரதமரே!” : இந்தியா - சீனா மோதலுக்குப் பின்னே..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்திய - சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரமகன்கள் தாய்மண்ணைக் காப்பதற்காக உயிர்த் தியாகம் செய்து வீரமரணம் அடைந்துள்ளனர். இந்திய-சீன எல்லையில் நடக்கும் இம்மாதிரியான மோதல்கள் குறித்து தெரிந்துகொள்ள நாம் வரலாற்றின் பக்கங்கள் சிலவற்றைப் புரட்டி பார்க்க வேண்டியிருக்கிறது.

சீனா இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தத் தொடர்ந்து எத்தனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இன்று அல்ல; கால் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இதுதான் நிலை.

கடந்த 1962ம் ஆண்டு அக்., 20ம் தேதி இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டது. ஒரு மாதம் வரை நீண்ட இப்போர் நவ., 21ம் தேதி முடிவுக்கு வந்தது. இப்போரில் இந்தியாவுக்கு தோல்வி ஏற்பட்டது. போரில் 1,383 இந்திய வீரர்கள் பலியாகினர். 3,900 இந்திய வீரர்களை சீனா பிடித்துக்கொண்டது. சீன தரப்பில் 722 வீரர்கள் பலியாகினர்.

போரின் போது இந்திய பிரதமராக நேருவும், சீனாவின் கம்யூனிச கட்சி தலைவராக மா-சே-துங்கும் ஆட்சியில் இருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள அக்சய் சின் எல்லைப் பகுதிக்குக் குறுக்கே நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது. இதைத் தடுக்கும் வகையில் காவல் சாவடிகளை அமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்தது.

திபெத்தில் 1959ல் ஏற்பட்ட கிளர்ச்சியைத் தொடர்ந்து, சீனாவில் இருந்து வெளியேறிய தலாய் லாமா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதில் சீனாவிற்கு எள்ளும் கொள்ளுமாகக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“சவால்கள் விடுத்து இந்தியாவை காவு கொடுத்துவிடாதீர்கள் பிரதமரே!” : இந்தியா - சீனா மோதலுக்குப் பின்னே..!

இந்நிலையில் 1962 அக்., 20ல் காஷ்மீரின் லடாக் பகுதியில் முதலில் தாக்குதலை சீனா தொடங்கியது. இராணுவ தலைமையகத்துடன் தொடர்புகொள்ள முடியாதவாறு இந்திய படையினரின் தொலைத்தொடர்பு சேவையை சீனா தகர்த்தது. சீன வீரர்கள் வேகமாக முன்னேறி இந்திய எல்லைப்பகுதிகளைக் கைப்பற்றினர். வீரர்களின் உயிர்பலியும் அதிகரித்தது.

நவம்பர் 19ஆம் தேதி நள்ளிரவில் சீன வானொலி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. உடனடியாக போரை தானாகவே நிறுத்துவதாக ஒருதலைப்பட்சமாக அறிவித்தது, இந்த போர்நிறுத்தத்தை இந்திய இராணுவமும் நிபந்தனைகளற்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சீன வானொலியில் அறிவிக்கப்பட்டது. நவம்பர் 21ஆம் தேதியன்று, தேஜ்பூரில் இயல்புவாழ்க்கை படிப்படியாக திரும்பியது.

இதேபோல் மற்றுமொரு சம்பவம் 1967ல் அரங்கேறியது. வடகிழக்கு சிக்கிம் மாநிலத்தில் இந்தியாவின் மிக உயர்ந்த மலைப்பாதை நாது லா ஆகும். இது பூடான், சீனா ஆட்சி செய்யும் திபெத் மற்றும் நேபாளம் இடையே இருக்கும் ஒரு குறுகிய பகுதி. அங்கும் இதுபோன்று அத்துமீறி பீரங்கி மற்றும் துப்பாக்கிகளால் தொடர்ச்சியான மோதல்கள் நடந்தன. அப்போது டெல்லி 80 இந்திய வீரர்கள் இறந்ததாகவும் 400 சீன உயிரிழப்புகள் கணக்கிடப்பட்டதாகவும் தெரிவித்தது.

இதேபோல் 1975ல் அருணாச்சல பிரதேச எல்லையில் ஒரு சம்பவம் நடந்தேறியது. அருணாச்சல பிரதேச எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக புதுடெல்லி குற்றம்சாட்டியது. ஆனால் அதனை சீனா மறுத்தது நகைமுரண்!

“சவால்கள் விடுத்து இந்தியாவை காவு கொடுத்துவிடாதீர்கள் பிரதமரே!” : இந்தியா - சீனா மோதலுக்குப் பின்னே..!

அதற்குப் பிறகு 42 ஆண்டுகள் கழித்து 2017ல், பூடானின் டோக்லாம் பிராந்தியத்தில் இந்தியாவும் சீனாவும் ஒரு மாத காலத்திற்கு தங்கள் இராணுவத்தை தயார் நிலையில் நிறுத்திவைத்திருந்தது. இந்த பகுதியில் சீனா சாலைகள் அமைப்பதை தடுக்க இந்திய இராணுவம் துருப்புக்களை அனுப்பியது. டோக்லாம் பீடபூமி முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது "chicken’s neck" என அழைக்கப்படும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரு மெல்லிய நிலப்பரப்பிற்கு, சீனாவிற்கு அணுகல் தரக்கூடிய பகுதி. இதை சீனா மற்றும் இந்தியாவின் நட்பு நாடான பூட்டான் இருவரும் உரிமை கோரின. பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரச்னை தீர்க்கப்பட்டது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடிந்து 3 ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில் கடந்த 15ம் தேதி (ஜூன் 2020) மாலை, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு காலாட்படை பட்டாலியன் கட்டளை அதிகாரி உட்பட 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் கடந்த 40 நாட்களாக இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வந்தது.

இருநாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் கற்கள், கம்பி மற்றும் ஆணி பதித்த ஆயுதங்களால் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தாக்கிக் கொண்டனர். இருப்பினும், இரு படைகளும் கை சண்டை போடுவது அல்லது கற்கள் மற்றும் கட்டைகளைப் பயன்படுத்தி அந்த பகுதியில் ஒருவருக்கொருவர் தாக்குவது இதுவே முதல் முறை அல்ல.

இந்தியா மற்றும் சீனாவின் உயர்மட்ட இராணுவப் பிரதிநிதிகள் எல்.ஏ.சி (Line of Actual Control) விவகாரம் குறித்து தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்தியபோதும், எல்லையில் இருநாட்டு வீரர்களும் மோசமாக மோதிக்கொண்டனர். இதில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். 20 வீரர்கள் என்பது 20 குடும்பங்கள்.

“சவால்கள் விடுத்து இந்தியாவை காவு கொடுத்துவிடாதீர்கள் பிரதமரே!” : இந்தியா - சீனா மோதலுக்குப் பின்னே..!

பிரதமர் மோடியின் வெற்று எச்சரிக்கைகளால் இராணுவ வீரர்களின் குருதியின் வெப்பத்தில் குளிர்காய நினைக்கக்கூடாது; இராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் கண்ணீரில் கரை சேர நினைத்தால் கரைந்துபோவார்.

சீனாவிடம் மோதுவது புத்திசாலித்தனமான செயலாக இருக்க முடியாது. வரலாறுகள் அதையே காட்டுகின்றன. பிரதமர் மோடி எச்சரிக்கை என்ற பெயரில் சவால்களை விடுத்து இந்தியர்களின் வாழ்க்கையோடு கபடி விளையாடக் கூடாது.

பிரதமர் மோடி, தன் சாதுர்யத்தால் ஏற்கனவே இந்தியாவின் பொருளாதாரத்தை புதைத்துவிட்டார். வேலையில்லாத் திண்டாட்டம்; கொரோனாவில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மக்களை கடும் துயரத்திற்கு ஆளாக்கியதோடு; இனிமேல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற பெயரில் இந்தியாவை காவு கொடுத்துவிடாதீர்கள் பிரதமரே!

சிந்தித்து செயல்படுங்கள்! பலமுறை சீனா சென்றால் மட்டும் போதாது; பேச்சுவார்த்தையில் உங்கள் நட்பை உறுதி செய்யுங்கள்!

- அஜெய் வேலு

banner

Related Stories

Related Stories