உணர்வோசை

‘திராவிட அறிவுக் கருவூலம்’ இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

பேரறிஞர் அண்ணாவின் வெள்ளை நிழல் என்றும், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அன்பு உள்ளம் இவரே என்றும் தமிழ்கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்டுவரும் “இனமான பேராசிரியரின் பிறந்ததினம் இன்று.

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

ஒரு புயற்பொழுதில்

கலைஞரும் நீயும்

இரு கரங்களாகக்

காத்திராவிட்டால்

திராவிட தீபம்

அணைந்து போயிருக்கும்!

- கவிக்கோ அப்துல் ரகுமானின் இந்த வரிகள் சுட்டிக்காட்டும் பெருந்தகை இனமான பேராசியர் க.அன்பழகன் அவர்கள்.

ஆரூரில் நடைபெற்ற இஸ்லாமியர் விழா ஒன்று. நூறு பேர் மட்டுமே அமர்ந்திடக் கூடிய சிறிய மண்டபம். பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்தக் கூட்டத்தில் அந்த இளைஞரை அறிமுகப்படுத்தி, உரையாற்றிடவும், அழைக்கிறார். ஒல்லியான உருவம். ஒளியுமிழும் கண்கள். ஓடைப்புனலெனக் கருத்துக்கள் பெருகிடும் உரை.

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

மண்டபத்திற்குள்ளும், வெளியிலும் குழுமியிருந்தோர் வியப்பால் விழிகளை வரிந்து நிற்கின்றனர். அந்த இளங்குருத்துத்தான் பேராசிரியர் க.அன்பழகன் என்று, பேராசிரியரை தான் முதன்முதலில் சந்தித்ததை இவ்வாறு விவரிக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார். சுவர்ணம்பாள் தம்பதியருக்கு திசம்பர் 1922 ஆம் ஆண்டு டிசம்பர் 19ந் தேதி பிறந்த பேராசிரியரின் இயற்பெயர் இராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹனர்ஸ் படிப்பை படித்தவர் இது கலைமுதுவர் பட்டத்திற்கு இணையானது.

பெரியாரிடம் சுயமரியாதையைக் கற்றிருந்த ராமையா, தனித்தமிழில் பெயர் சூட்ட விரும்பி, தனது பெயரை `அன்பழகன்' என மாற்றிக்கொண்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்த அன்பழகன், அதன்பிறகு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பேராசிரியராக இருந்த போதும், இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த அன்பழகனை, அண்ணா `பேராசிரியர் தம்பி!' என்று அழைத்து வந்தார். அதுவே அவரது நிரந்தரப் பட்டமாகிப் போனது.

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

பேராசிரியரை எப்படி அடையாளம் கண்டார் பேரறிஞர் அண்ணா!. இந்த கேள்விக்கு பேராசிரியரே இவ்வாறு பதிலளிக்கிறார்.

“ பேரறிஞர் அண்ணாவை நேரில் கண்டு உரையாடுமுன், அவரது இந்தி எதிர்ப்பு உரையை மாயூரம் நகரப் பூங்காவில் 1938ல் கேட்ட மாணவன் நான். அந்த கூட்டத்திற்கு என் தந்தையாரோடு சென்றிருந்தேன். ஒலி பெருக்கி இல்லாமலெ- மூன்று பக்கமும் திரும்பித் திரும்பி - சில நேரத்தில் குதிகாலையும் உயர்த்தி- அடுக்கு மொழியில் தொடர் தொடராக எழுச்சியூட்டும் வகையில் அவர் பேசிய தோற்றம் இன்றும் காட்சியாக நிற்கிறது.

பின்னர் என் தந்தையார் நடத்திய கூட்டங்களில் பேச ஆண்டுக்கு ஒருமுறை அண்ணா வருவார். வேறு தகுந்த வசதி அமையாத நிலையில் எங்கள் வீட்டிலேயே சிறிய இடத்தில் தங்குவார்கள். 1941ல் தென்னிந்திய நல உரிமைச்சங்க மாநாட்டில் நான் பேசியதைக் கேட்டு என்னை பாராட்டி அவர் பேசும்போதும் குறிப்பிட்டு என்னை ஊக்கப்படுத்தினார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரை ஒரு தனி வரலாற்றை படைத்தது. அங்கு அவர் தங்கியிருந்த நாட்களில்தான் மாணவர்கள் அவரிடம் உரையாடி ஐயங்கள் நீங்கி இயக்கத்தில் நேரடி தொடர்பு கொண்டனர்.

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

ஆம்! அண்ணணைக் கண்ட தம்பியாக- சில ஆண்டுகள் அவரைப் பார்த்துப் பார்த்துப் பழகியே- பின்னர் உரையாடும் உரிமையை எடுத்துக் கொண்டவன் நான்! முதல் சந்திப்பு- முழுமையான சந்திப்பு - அவர் உரைகளைக் கேட்ட அந்த நிகழ்ச்சியில்தாம்! ” என்கிறார் இனமான பேராசிரியர்.

அண்ணாவின் தம்பியாக, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்று பேரறிஞர் அண்ணாவுடன் சிறைச்சாலையில் கருத்தோவியங்களை பகிர்ந்து கொண்டவர் பேராசிரியர். சிறையில் அடைபட்டவர்கள் படிக்கிறார்கள். எழுதுகிறார்கள். ஓவியங்களையும் வரைகிறார்கள்.

பேரறிஞர் அண்ணா, ஓவியம் வரைகிறார். இதைப்பார்த்து பேராசிரியரும் ஓவியம் வரைகிறார். இதுகுறித்து பேரறிஞர் அண்ணா தனது சிறைக்குறிப்புகளில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“ஓவியம் வரைவதிலே ஒரு தனி மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது. நான் வரைந்த தோற்றுப்போன இராணுவத் தலைவன் படத்தை அன்பழகன் பார்த்துவிட்டு “நன்றாகத்தான் இருக்கிறது என்று பாராட்டுவார்கள்- இதை எழுதியது ஏழு வயதுச் சிறுவன் என்று கீழே குறிப்பெழுதினால்” என்று நகைச்சுவை ததும்பக் கூறினார்.

ஆனால், இன்று அன்பழகனே ஓவியம் வரையத் தொடங்கி விட்டார். திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா? அதனால் அவர் தீட்டத் தொடங்கிய முதல் ஓவியமும் திருவள்ளுவரே தான் என்று எழுதியுள்ளார் பேரறிஞர் அண்ணா.

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

பேராசிரியர் அன்பழகனை ஏன் இனமான பேராசிரியர் என்கிறோம்?. தமிழர், தமிழர் வாழ்வு, தமிழரின் நலன், தமிழ் இனத்தின் வாழ்வு என தமிழுக்காகவும், தமிழினத்திற்காகவும் ஓயாது தன் குரலை ஓங்கி ஒலித்தும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞருடன் இணைந்து தமிழர் நலனில் முன்னணி வகித்து பாடுபட்டதாலும் இனமான பேராசிரியரானார் க. அன்பழகன் அவர்கள்.

“ மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கையை ஆதரிக்கும் மதம் வேதம் சாத்திரம் இவற்றையெல்லாம் பொதுமக்கள் பின்பற்றக் கூடாது. வருணாசிரமம் என்ற கொடுமையான கட்டுப்பாட்டையும் சமுதாய முறையில் காணப்படும் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் பஞ்சமர் முதலிய சாதிப் பிரிவுகளையும் மக்கள் எற்றுக் கொள்ளக்கூடாது. தீண்டாமை ஒழித்து எல்லா இடங்களிலும் மக்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தினார் இனமான பேராசிரியர்.

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்த நல் முத்தாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அணிகலனாக திகழும் பேராசிரியரை, முத்தமிழறிஞர் கலைஞர் தன் அண்ணணாகவே கருதினார். திராவிட இயக்கத்தின் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க.,வை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முத்தமிழ்அறிஞர் கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டு 75 ஆண்டுகள் ஈரம் காயாத வெள்ளைஉள்ளத்துடன் நட்பு பாராட்டிய பேராசிரியரின் அருங்குணம் என்பது நறுமலரின் வாசம்.

தி.மு.கவில் மூத்தவராக இருந்தபோதும் இளையவரான முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமையை ஏற்றுக்கொண்டதைப் பற்றிக் கேட்டதற்கு,” அவர் என்னைவிட வயதில் சிறியவர்தான்; ஆனால் கட்சித் தலைவருக்கு உரியபடி அவரால் இருக்கமுடிகிறது; அதனால் அவரை தி.மு.கவின் தலைவராக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என வெள்ளை மனதுடன் சொன்னவர் பேராசிரியர்!

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

பேராசிரியர் பெருந்தகையின் பொன்விழா ஆண்டில் அவர்குறித்து முத்தமிழறிஞர் கூறியது இதோ...

“30 ஆண்டுகளுக்கு முன்னர், திருவாருரில் “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” என்ற ஒரு மாணவர் அமைப்பினைத் தொடங்கினேன். சேலம், இராசிபுரம் போன்ற ஊர்களில் அதற்குக் கிளைகள் அமைந்தன. அப்போது நாட்டில் ஏற்பட்டிருந்த இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கங்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு உணர்ச்சியும், எழுச்சியும் ஊட்டிடத் தக்கவிதத்தில் இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது.

இதனுடைய முதலாவது ஆண்டுவிழாவினை 1943 -ஆம் ஆண்டு திருவாரூரில் நடத்தினேன். முக்கிய சொற்பொழிவாளராக அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வகுப்பு மாணராயிருந்த ஒருவரை அழைத்தேன். ஒல்லியான, மெலிந்த உருவம் என்றாலும் துல்லியமான செந்தமிழ்ப் பேச்சு, அணை உடைந்த வெள்ளமெனத் தடைபடா அருவி நடை, தன்மானக் கருத்துக்கள், தமிழ் முழக்கம்- இவைகளால் எங்களையெல்லாம் ஈர்த்துத் தன்வயமாக்கிக் கொண்டார், அந்த சொற்பொழிவாளர். அவர்தாம் இன்றைய தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள்.

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

என்னைவிட ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளே மூத்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு, கல்லிலும் முள்ளிலும் நடந்து, அல்லும் பகலும் சுற்றிச் சுழன்று, கண்ணீரும், செந்நீரும் சிந்தி இந்தக் கழகத்தை வளர்த்த பெரும் தொண்டர்களின் வரிசையில் அவருக்கு ஒரு சிறப்பான இடமுண்டு என்பதனை நாடு நன்கு அறியும். நெஞ்சத்தில் தோன்றும் கருத்துக்களை அஞ்சாமல் எடுத்துரைத்து- யாரிடம் பேசுகிறோம், அவர்கள் என்ன சொல்வார்கள்? என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பதில் அவர் ஒரு தனித்தன்மை கொண்டவர்.

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

அவர் மாத்திரமல்லாமல், அவர் தந்தையாரே கல்யாணசுந்தரம் என்ற தம் பெயரை மணவழகனார் என்று மாற்றிக் கொண்டு தன்மான இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தகையாளர் ஆவார். பேராசிரியர் அவர்களின் இளவல்களான புலவர் திருமாறன், அறிவழகன், பால கிருஷ்ணன் ஆகிய அனைவரும் இந்த இயக்கத்திற்காகத் தங்களை அற்பணித்துக் கொண்டவர்கள். அனைத்திற்கும் மேலாக இவருடைய அருமைத் துணைவியார் திருமதி. வெற்றிச்செல்வி அவர்கள் இன்று நம்மிடையே இல்லையென்றாலும் அவர்கள் இந்த இயக்கத்திலே முழுமையாக ஈடுபட்டுப் போராட்டங்களில் பங்குபெற்றுக் குறிப்பிடத்தக்கதோர் இடத்தைப் பெற்றவர்கள் ஆவார்கள்.

இப்படிப்பட்ட தன்மான உணர்வுகளையே குறிக்கோளாகக் கொண்ட தமிழ் குடும்பத்தின் முன்னவர் பொதுத் தொண்டிலேதான் வாழ்வில் பெரும் பகுதியை கழித்து வரும் அன்பாளர் பொன்விழா வயதடைந்தார் என்கின்ற சிறப்பான செய்தியினை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். அவர் மேலும் பல்லாண்டுகள் தொடர்ந்து தூய தொண்டாற்றி, எங்கள் இலட்சியப் பயணத்தில் இடையறாது நடைபோட விரும்பி, மனமார வாழ்த்துகின்றேன்” என்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.

படிப்பை முடித்தபின் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றிய பேராசியர், தி.மு.க தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரையிலான அதன் வளர்ச்சியைக் கண்டுகொண்டிருப்பவர் பேராசிரியர் அன்பழகன். 1977 ல் திமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போராசிரியர், மறையும் வரை அப்பொறுப்பில் இருந்தார்.

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக ஒருமுறையும் சட்டமன்ற உறுப்பினராக 9 முறையும் நாடாளுமன்ற உறுப்பினராக ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன். 1977-ம் ஆண்டு முதல் தற்போது வரை, தி.மு.கவின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். தி.மு.க ஆட்சிக் காலங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை, நிதித்துறை, கல்வித்துறை முதலானவற்றிற்கு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழர் வாழ்வில் புத்தொளி சிறக்க, புதுவாழ்வு என்னும் இதழை நடத்தியவர். அழகுராணி, இன-மொழி வாழ்வுரிமைப் போர், உரிமை வாழ்வு, தமிழர் திருமணமும் இனமானமும், தமிழினக்காவலர் கலைஞர், தமிழ்க்கடல், தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி, தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார், தொண்டா? துவேஷமா?,

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

நீங்களும் பேச்சாளர் ஆகலாம், வகுப்புரிமைப் போராட்டம், வளரும் கிளர்ச்சி, டாக்டர் நாயர் காலத்திலிருந்து 1953 வரை திராவிட இயக்கத்தின் வரலாறு, வாழ்க திராவிடம் , விடுதலைக் கவிஞர், விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் பேராசிரியர்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் உட்பட தமிழர்களின் உரிமை காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டவர். ஈழத்தமிழருக்கு தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தவர் என்னும் சிறப்புக்கும் சொந்தக்காரர் இனமான பேராசிரியர்.

வஞ்சகமும், துரோகமும் நிலைகொண்டுள்ள அரசியலில் ஒரே கட்சி, ஒரே தலைவன் என்ற கொள்கையில் தன் வாழ்நாளெல்லாம் முத்தமிழறிஞர் கலைஞரின் நிழலாக வலம் வந்த பேராசியரை பிசிராந்தையார் என்றும், கலைஞரை கோப்பெருஞ்சோழன் என்றும் அன்றைய தமிழ் இலக்கிய உலகமே அழைத்தது.

நாங்கள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். இதோ கலைஞரின் சொல்லோவியம்...

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

“நான் கழகத்தின் தலைவர். அவர் பொதுச்செயலாளர்! இருவரும் கலந்தே முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கழக சட்டதிட்டம். எங்களுக்கு விதிமுறைகளை வகுத்துக் கொடுத்து இருந்தாலும் நாங்கள் இருவரும் சேர்ந்து முக்கியமான முடிவுகளை எடுத்திட தலைமை நிர்வாகக் குழுவையோ, செயற்குழு, பொதுக்குழுக்களையோதான் கூட்டுகிறோம்.

எங்கள் உறவை வெட்டி முறித்திடக் கூட வீணர்கள் எண்ணினார்கள்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் நாங்கள் என்பதை எங்கள் சகோதரப் பாசத்தின் வாயிலாக வெளிப்படுத்துவது மட்டுமல்ல, தமிழ் இனமும் நாடும் வாழ இந்தக் கழகம் வாழவேண்டும் என்று நாங்கள் வாழும் வரையிலும் இணைந்து நின்றே இலட்சியப் பயணம் வகுத்திடுவோம்!”

19.12.1981 அன்று பேராசிரியரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘எதிரொலி’ இதழ் வெளியிட்ட சிறப்பு மலரில் முத்தமிழறிஞர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தமிழின மீட்சி இயக்கத்தின் அச்சாணியாக விளங்கும் பேராசிரியர், முத்தமிழறிஞர் கலைஞருக்கு பிறகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை தலைவராக ஏற்கிறார். எமர்ஜென்சி கொடுமையில் சிறைச்சாலைக்கு சென்று விடுதலையானதும், தளபதி மு.க.ஸ்டாலினை வரவேற்று கழகத்தின் தளபதியாக அழகுபார்த்தவர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள். அவர்தான் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் என்று முன்மொழிகிறார். கலைஞரின் வழியில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கழத்தின் செயல்பாடுகளை பேராசிரியரின் வழிகாட்டுதலின்படியே செயல்படுத்தி வருகிறார்.

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

'தம்பி மு.க.ஸ்டாலினுக்கு தலைமைக்கான தகுதி இருக்கிறது' என்று முதலில் சொன்னவரும் பேராசிரியர் தான். தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது வளர்ச்சியில் பேராசிரியருக்கும் பெரும் பங்குண்டு.

‘திராவிட அறிவுக் கருவூலம்’  இனமான பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்ததினம் இன்று!

பெரியாரை விடக் கூடுதலான ஆண்டுகள் கலைஞர் வாழ்ந்தார். கலைஞரை விட கூடுதலான ஆண்டுகள் வாழ்ந்தார் பேராசிரியர். நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் பெருந்தலைவராம் பேராசிரியர் மறைந்தும் அவர் புகழ் வாழ்க வாழ்கவே!

banner

Related Stories

Related Stories