
முரசொலி தலையங்கம்!
28.09.2026
மாண்பு இழந்த முதலமைச்சர்!
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக வந்த முதலமைச்சர் விஜய் பேசி இருக்கும் பேச்சுகள் அவர் எந்தளவுக்கு மாண்பு இழந்தவராக இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அரசியலமைப்புச் சட்டப்படி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டவரின் பேச்சும், உடல்மொழியும் அருவெறுப்பாக இருக்கிறது.
பத்து நிமிட உரையில் நாற்பது முறை தி.மு.க.வை கரித்துக் கொட்டி இருக்கிறார் விஜய். சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். நரகலை எடுத்து பொதுமக்கள் மீது வீசுகிறார். சாதனைகள் என்று சொல்லிக் கொள்ள ஏதுமில்லாத கார- ணத்தால் அதற்காகவே ஜெம் வீரமணி வழக்கை எடுத்து வந்து அவிழ்த்து விட்டுள்ளார் விஜய்.
உங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது. உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யுங்கள். சட்டத்தின் முன்னால் நிறுத்துங்கள். தண்டனை வாங்கித் தாருங்கள். இந்தக் குற்றத்தை மறைத்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீதும் நடவ- டிக்கை எடுப்பதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறது. அதனைச் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு, மதுராந்தகம் தேர்தலுக்கும் ஜெம் வீரமணிக்கும் என்ன தொடர்பு? இந்த தேர்தலில் இந்த பிரச்னையை வைத்து அவதூறு கிளப்ப வேண்டும் என்று காத்திருந்துள்ளார் விஜய். இதை விட கெட்ட எண்ணம் என்ன இருக்க முடியும்?
ஜெம் வீரமணி செய்த செயல்கள் மனிதத்தன்மைக்கு விரோதம் ஆனவை. எது உச்சபட்ச தண்டனையோ அதை அவருக்கு வழங்க வேண்டும். அதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதனைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அறிக்கை விட்டுவிட்டார்கள், முதலமைச்சர் விஜய்யைத் தவிர.
ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 25 ஆம் தேதி மதுராந்தகம் தேர்தல் பரப்புரையில் பேசுவதற்கு முன்பு வரை இது பற்றி விஜய் பேசினாரா என்றால் இல்லை. கண்டிக்கவில்லை. அதைச் செய்யாமல் ஒரு மாத காலம் வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டு, இடைத்தேர்தலுக்காக எதற்காக திறக்க வேண்டும்?
இவர் ஆட்சிக்கு வந்து தான் நடவடிக்கை எடுத்தாராம். இதை விட பச்சைப் பொய் இருக்க முடியாது. எஃப்.ஐ. ஆர். பதிவு செய்ததே தி.மு.க. ஆட்சியில் தான். 2025 அக்டோபர் 6 ஆம் தேதி புகார் வருகிறது. அக்டோபர் 7 ஆம் தேதியன்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுவிட்டது. சிறுமி யார் என்று கண்டுபிடிக்க இயலாத நிலையில், ” இது தொடர்பாக ஏதேனும் ஆதாரமோ சாட்சியங்களோ கிடைக்கப் பெற்றால் மேற்காண் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தான் காவல் உதவி ஆணையர் 19.2.2026 அன்று அறிக்கை கொடுத்துள்ளார். அடுத்து தேர்தல் வந்துவிட்டது. தேர்தல் நடைமுறைகள் வந்துவிட்டது. மே 10 ஆம் தேதி விஜய், முதலமைச்சர் ஆகிவிட்டார். காவல் துறை அவர் வசம் தான் இருக்கிறது. இவர் என்ன நடவடிக்கை எடுத்தார்?
•இது குறித்து முழுமையான விசாரணை நடத்தினாரா? இல்லை!
•19.2.2026 அன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை திரும்பப் பெற்றாரா விஜய்? இல்லை!
•மேல் விசாரணைக்கு உத்தரவிட்டாரா? இல்லை!
•ஜூன் 19 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை முடித்து வைக்கத் தான் வாதிட்டார் த.வெ.க. அரசின் வழக்கறிஞர். இதுவும் உண்மைதானே? *த.வெ.க. அரசின் வழக்கறிஞர் வாதங்களை போக்சோ நீதிமன்றம் ஏற்கவில்லை. அதன்பிறகு தான் கடுமையான உத்தரவுகளை போக்சோ நீதிமன்றமே பிறப்பிக்கிறது.
•போக்சோ நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கூட த.வெ.க. அரசு செயல்படவில்லை. ஜூன் மாதம் முடிந்து விட்டது. ஜூலை மாதமும் முடிந்துவிட்டது. ஆகஸ்ட் மாதமும் முடியப் போகிறது. என்ன செய்து கொண்டு இருந்தார் போலீஸ் மந்திரி விஜய்? *ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் போக்சோ நீதிமன்றம் தலையில் குட்டுகிறது. அதன்பிறகு தான் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஜெம் வீரமணியைக் கைது செய்கிறது விஜய் அரசு. •ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடந்த பேரங்கள் என்ன? என்று பொது மக்கள் கேட்கிறார்கள். விஜய் பதில் சொல்ல முடியுமா?
*ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஜெம் வீரமணியைக் கைது செய்த போது காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை பெருநகர காவல் மத்தியக் குற்றப்பிரிவு விபச்சாரத் தடுப்புப் பிரிவில் 7.10.2025 அன்று வழக்குப் பதியப்பட்டது" என்று தான் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தான் ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக த.வெ.க. ஆட்சியில் கொடுத்த அறிக்கையே உணர்த்துகிறது.
இதன்பிறகும், 'தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை இல்லை' என்று பொய் பேசலாமா? விஜய் பேசுவதற்கு முன்பே இப்பிரச்னை குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை கொடுத்துவிட்டார். அதுவும் விஜய்க்கு தெரியவில்லை. 'நீங்கள் ஏன் பேசவில்லை?' என்று தி.மு.க. தலைவரைப் பார்த்துக் கேட்கிறார் விஜய். மூன்று நாளைக்கு முன்பே டயலாக் பேப்பரை படிக்கலாம். ஆனால் ஒரு அரசியல் தலைவராக இருப்பவர், அதுவும் முதலமைச்சராக இருப்பவர் மூன்று நிமிடத்- துக்கு முன்பு வரை தனது உரையை படித்துப் பார்க்க வேண்டும். இது கூடவா தெரியாது.
முதலமைச்சர் ஆகி நான்கு மாதம் ஆகிறது. நாட்டு மக்களுக்கு செய்த நன்மை என்று சொல்லி வாக்குக் கேட்க எதுமில்லை. பிஞ்சுக் குழந்தைகளைச் சீரழித்த ஒரு கேவலமான புகாரை நம்பி இடைத்தேர்தலில் வாக்கு கேட்க வருகிறார் விஜய். இதைவிடக் கேவலம் இருக்க முடியுமா?
“சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கை அரசியலாக்க வேண்டாம்” என்று அன்றைய தினம் காலையில் தான் சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. அதன்பிறகும் மாலையில் ஒரு முதலமைச்சர் பேசுகிறார் என்றால் அவருக்கு எதுவுமே தெரியவில்லையா? அல்லது 'நம்மை யார் கேட்பது?' என்ற மமதையா?
கட்டிய மனைவி கொடுத்த புகாரையே, 'அது வொர்த் இல்லை' என்று பொதுக்கூட்டத்தில் கமெண்ட் அடித்தவர் இவர். தனது ரசிகையைச் சீரழித்த எம்.எல்.ஏ.வைக் காப்பாற்றியவர். த.வெ.க. நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்கள் டி.ஜி.பி. அலுவலகம் வரை வந்து கொண்டு தான் இருக்கின்றன. இதில் எல்லாம் நியாயமான எந்த நடவடிக்கையும் எடுக்கத் துப்பு இல்லாதவர் கிளிசரின் கண்ணீரை மதுராந்தகத்தில் வடிக்கிறார்.
குதிரை பேரத்தை விட குமட்டுகிறது விஜய்யின் மதுராந்தகம் உரை.






