முரசொலி தலையங்கம்

“தனது ஆட்சியில் ஒழுங்காக எதையும் தர வக்கற்றவர், இப்போது பேசுகிறாரா?” - பழனிசாமி மீது முரசொலி தாக்கு!

ஆண்டு தோறும் முறையாக பொங்கல் பரிசுகள் வழங்காதவர் பழனிசாமி. மக்கள் இதனை மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி என்று முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

“தனது ஆட்சியில் ஒழுங்காக எதையும் தர வக்கற்றவர், இப்போது பேசுகிறாரா?” - பழனிசாமி மீது முரசொலி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

06.01.2025

முதலமைச்சரின் பொங்கல் பரிசு!

தமிழ்நாட்டு மக்கள் அனைவர் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கும் வகையில் பொங்கல் பரிசு அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை என்ற முதலமைச்சரின் அறிவிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தையே மகிழ்ச்சிக்குரியதாக மாற்றி இருக்கிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட இப்பரிசுத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்கள்.

அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக இத்தொகை கிடைக்கும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினரும் இவர்களோடு சேர்த்து பயன் பெறுவார்கள்.

ஏற்கனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சேர்த்து 3 ஆயிரம் ரூபாயும் தரப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு ஆகியவை அனைத்தும் மொத்தமாக ரூ.6,937 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட இருக்கிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கல் தொடங்கிவிட்டது. பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசு, பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேட்டி சேலைகளை அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

“தனது ஆட்சியில் ஒழுங்காக எதையும் தர வக்கற்றவர், இப்போது பேசுகிறாரா?” - பழனிசாமி மீது முரசொலி தாக்கு!

திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் போது, மகிழ்ச்சி பொங்கி வருகிறது. அதற்கான பரிசுகளை ஆண்டு தோறும் வழங்கி வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

2021 ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

2022 ஆம் ஆண்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் தரப்பட்டது. 1,297 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2.15 கோடி மக்கள் பயன்பெற்றார்கள்.

2023 ஆம் ஆண்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு தரப்பட்டது. அத்துடன் ஆயிரம் ரூபாய் பணம் தரப்பட்டது.

2024 ஆம் ஆண்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு தரப்பட்டது. அத்துடன் ஆயிரம் ரூபாய் பணம் தரப்பட்டது.

2025 ஆம் ஆண்டு 1.94 கோடி அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு தரப்பட்டது. ஒவ்வொரு பொங்கல் திருநாளும் கருணைப் பொங்கலாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த ஆண்டும் 3 ஆயிரம் ரூபாய் பணத்துடன் பொருட்களும் வழங்கப்பட உள்ளன.

பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் தரப்போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, '5 ஆயிரம் கொடுங்கள்' என்று சொல்லி தனது முந்திரிக்கொட்டைத் தனத்தைக் காட்டிக் கொண்டார். தான் ஆட்சியில் இருந்த காலத்தில் ஒழுங்காக எதையும் தர வக்கற்ற பழனிசாமி, இப்போது வாய் நீளம் காட்டினார்.

“தனது ஆட்சியில் ஒழுங்காக எதையும் தர வக்கற்றவர், இப்போது பேசுகிறாரா?” - பழனிசாமி மீது முரசொலி தாக்கு!

* 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை 2012 ஆம் ஆண்டு நிறுத்தி விட்டார்கள்

* 2013 ஆம் ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 ரூபாயில் ஒரு கிலோ பச்சரிசியும், 4 ரூபாயில் ஒரு கிலோ சர்க்கரையும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக கொடுக்கப்பட்டது இத்துடன் ரூ.100 ரொக்கத் தொகையும் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.160 மதிப்பு.

* 2014 ஆம் ஆண்டும் இதே தொகுப்புதான் தரப்பட்டது.

* 2015 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

* 2016 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 100 வழங்கப்பட்டது.

* 2017 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்படவில்லை.

* 2018 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்படவில்லை.

* 2019 ஆம் ஆண்டு அதுவரை 100ரூபாய் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டுவந்த நிலையில் வரவிருந்த நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து 1000 ரூபாய் கொடுக்கப்பட்டது.

* 2020 ஆம் ஆண்டும் அதே 1000ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

* 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக 2500 ரூபாய் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

இதுதான் பழனிசாமியின் ஆட்சி காலம் ஆகும். ஆண்டு தோறும் முறையாக பொங்கல் பரிசுகள் வழங்காதவர் பழனிசாமி. மக்கள் இதனை மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி.

'ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்” என்று இதனைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் அவர்கள் செய்தி வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். “உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டு உள்ளது” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

வளர்ச்சி மிகு நாட்டை மகிழ்ச்சி மிகு நாடாக ஆக்கிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories