முரசொலி தலையங்கம்

”முதலீடுகளை ஈர்ப்பதிலும் முதல் அமைச்சராக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி பாராட்டு

4 ஆண்டுகளில், 32.82 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில், ரூபாய் 10.63 லட்சம் கோடிமுதலீடுகளை ஈர்த்து இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

”முதலீடுகளை ஈர்ப்பதிலும் முதல் அமைச்சராக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி பாராட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (10-09-2025)

முதலீடுகளின் முதல்வர்!

அனைத்திலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலீடுகளை ஈர்ப்பதிலும் முதல் அமைச்சராக உயர்ந்து நிற்கிறார். ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சென்று வந்த பயணமானது முதலீடுகளை ஈர்க்கும் வெற்றிப் பயணமாக அமைந்துவிட்டது.

‘‘மன நிறைவோடு திரும்பியிருக்கிறேன். மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் மேற்கொண்ட என்னுடைய பயணங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இந்தப் பயணம் அமைந்திருக்கிறது. இந்தப் பயணத்தில் தான், மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மொத்தம் 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். இதன் மூலமாக, 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. மொத்தமாக 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்வந்து இருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் 17 நிறுவனங்களும், மற்ற மாநிலங்களை நோக்கி செல்லாமல், தமிழ்நாட்டிலேயே தங்களுடைய தொழிலை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர். அதனால் தான் இது முழுமையான வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டு ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டி வருகின்றனர். பல்வேறு தொழில் நிறுவனங்கள் இங்கு உருவாக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ற சூழலை முதலில் முதலமைச்சர் அவர்கள் உருவாக்கினார்கள். அமைதியான மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. ஒரு துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. அரசின் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இருக்கிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டை கவனம் பெறும் மாநிலமாக உயர்த்தி இருக்கின்றன. இந்த அடிப்படையில் இந்தியாவின் கவனத்தை, உலகின் கவனத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது.

ஒரு தொழில் தொடங்குவதாக இருந்தால் அந்தத் தொழில் மூலமாக ஏற்றுமதி - இறக்குமதி எவ்வளவு என்று முதலமைச்சர் கணக்கிடுவது இல்லை. அந்தத் தொழில் நகரில் உருவாகிறதா? கிராமத்தில் உருவாகிறதா?எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? அந்த வட்டாரத்தைச் சேர்ந்த எத்தனை பேருக்கு இதனால் பயன்? பெண்களுக்கு எத்தனை விழுக்காடு வேலை கிடைக்கும்? அந்தத் தொழில் நிறுவனத்தால் அந்த வட்டாரம், மாவட்டம் எத்தகைய வளர்ச்சியைப் பெறும்? அந்த வட்டாரத்தில் இருக்கும் சமூக மக்களின் வளர்ச்சி எவ்வளவு கூடும்? என்பதை நோக்கமாக வைத்து ஒரு தொழிற்சாலை, நிறுவனத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்குகிறார். இதனைத்தான் திராவிட மாடல் என்று சொல்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், மின்னணுவியல் ஆகிய பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்குகிறது. எனவே மூலதனம் அதிகம் உள்ள தொழில்களையும், வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தும் தொழில்களை ஈர்ப்பதில் முதலமைச்சர் கவனமாக இருக்கிறார். 130க்கும் மேற்பட்ட ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளது.

”முதலீடுகளை ஈர்ப்பதிலும் முதல் அமைச்சராக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி பாராட்டு

தொழில்கள் ஒரே இடத்தில் குவியாமல், பரவலாக ஆக்கி இருக்கிறார் முதலமைச்சர். கடந்த நான்கு ஆண்டுகளில் தூத்துக்குடியில் நியோ டைடல் பார்க், மதுரையில் டைடல் பார்க், நெல்லையில் எரிசக்தித் திட்டங்கள், விருதுநகரில் ஜவுளி பூங்கா, தூத்துக்குடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன. தூத்துக்குடியைப் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மையமாக அரசு வளர்த்து வருகிறது. தூத்துக்குடியில் விண்வெளி பூங்கா, கப்பல் கட்டுமான நிறுவனம், ஏற்றுமதி மையம், நெல்லையில் உணவு பதப்படுத்துதல் மண்டலப் பிரிவு ஆகிய அறிவிப்புகளை கடந்த மாதம் செய்துள்ளார் முதலமைச்சர். இப்படி பரவலான வளர்ச்சியை உருவாக்கி உள்ளார் முதலமைச்சர்.

தமிழ்நாட்டை நோக்கி, பல்வேறு உலக நிறுவனங்கள் படையெடுக்கக் காரணம், இங்கு அவர்களது நிறுவனங்களுக்குத் தேவையான தகுதியான மனித சக்திகள் கிடைக்கின்றன. பள்ளி மாணவர்களின் திறன்களை அரசு மேம்படுத்தி வருகிறது. கல்லூரி மாணவர்களின் திறமையும், இளைஞர்களின் திறமையும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளிக் கல்வியில் ரோபோடிக்ஸ், தரவு அறிவு மற்றும் நிதித் திட்டமிடுதல் ஆகியவற்றை இணைக்கப் போவதாக அரசு சொல்லி இருக்கிறது. எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை குழந்தைகள் பெறுவதுடன் இன்றைய சவால்களையும் எதிர்கொள்ள இயலும் வகையில் பள்ளிப் படிப்புகள் உருவாக்கப்படுகின்றன.

வளர்ந்து வரும் புதிய பாடங்கள், தொழில்நுட்பங்கள், அறிவியல் ஆராய்ச்சிகள் ஆகியவற்றுக்கு ஏற்ப உயர் கல்வியில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. கற்பித்தல் முறைகள் மாற்றப்பட்டுள்ளன. ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல், தொழில் 4.0 ஆகியவற்றுக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு தனது பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளது. எனவே பல்வேறு திறமைகளுடன் மாணவர்கள் வெளியே வருகிறார்கள். முதலமைச்சரின் கனவுத்திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தில் இதுவரை 44 லட்சம் மாணவர்கள் மேம்பட்ட பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். இது போன்ற தகவல்கள்தான் உலக நிறுவனங்களை ஈர்க்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில், 32.82 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில், ரூபாய் 10.63 லட்சம் கோடிமுதலீடுகளை ஈர்த்து இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது, இதுவரை யாரும் செய்யாத சாதனை ஆகும். இது, இதுவரை எந்த மாநிலமும் செய்யாத சாதனை ஆகும். எந்த முதலமைச்சரும் எட்டாத சாதனை ஆகும்.

ஒரு தொழிற்சாலை வருவதன் மூலம் அதனைச் சுற்றியுள்ள வட்டாரம், மாவட்டம், சமூகம் வளர்கிறது. மாநிலம் செழிக்கிறது. செழிப்பை உருவாக்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories