முரசொலி தலையங்கம்

தாயுமானவராய், தந்தையுமானவராய் காட்சி தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முரசொலி புகழாரம் !

தாயுமானவராய், தந்தையுமானவராய் காட்சி தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முரசொலி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (29.08.2024)

அமெரிக்கப் பயணம் வெல்லட்டும் !

ஆகஸ்ட் 28 -- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று ஆறு ஆண்டுகள் முடிவுற்று ஏழாவது ஆண்டு தொடங்குகிறது. அவர் இப்போது இயக்கத்தின் தலைவராக மட்டுமல்ல - தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். முதலமைச்சர் என்ற தகுதியோடு ஆகஸ்ட் 27 ஆம் நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். அவரது ஐந்தாண்டுப் பயணம் எத்தகைய வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம். “எனக்கு உயிரும் -- உணர்வுமாய் - தந்தையும் -தாயுமாய் தலைவருமாய் இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் அமர்ந்திருந்த முதலமைச்சர் நாற்காலியில் என்றாவது ஒருநாள் நான் உட்காருவேன் என்றும் அந்தக் காலத்தில் நினைத்தது இல்லை. ஆனாலும் எனது இலக்கை நான் மிகச் சரியாகத் தீர்மானித்தேன். கழகம்தான் என் களம். திராவிடம்தான் என்னுயிர்க் கொள்கை. தமிழ்நாட்டுக்குச் செய்யும் நன்மையே நமது அன்றாடப் பணி என்பதாக என்னை எனது சிறுவயதில் இருந்து வடிவமைத்துக் கொண்டேன்” என்று சொன்னவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் நாளன்று அவரை இன்னொரு கலைஞராகவே தமிழ்நாடு பார்த்தது. 'நான் கலைஞர் அல்ல' என்று பொதுக்குழுவில் தன்னடக்கத்தோடு தலைவர் அவர்கள் விளக்கம் அளித்தாலும், அவர் தனது செயல்பாட்டால் இரண்டாம் கலைஞராகவே காட்சி அளித்தார். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் நிறைவேற்றிக் காட்டிய திட்டங்களின் மூலமாகத் தாயுமானவராய் காட்சி தருகிறார் முதலமைச்சர் அவர்கள். தனது தலைமைப் பொறுப்புக்குப் பிறகான அனைத்துத் தேர்தல்களிலும் வென்று காட்டி இருப்பதன் மூலமாக அவையத்து முந்தியிருக்கச் செய்த செயல் காரணமாக -- தந்தையுமானவராகக் காட்சி தருகிறார்.

தாயுமானவராய், தந்தையுமானவராய் காட்சி தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முரசொலி புகழாரம் !

இந்த வெற்றிகளுக்கு எல்லாம் முக்கியக் காரணம், தனது உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் தலைவர்களும், அவர் தம் கருத்தியல்களும்தான்.“சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார் - இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா-இயக்கத்தை வழிநடத்துவதில் தமிழினத் தலைவர் கலைஞர்மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர் - ஆகிய நால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள்தான் என்னைச் செதுக்கிய சிற்பிகள்” என்று தலைவர்- மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கடிச் சொல்வார்கள். இவர்கள்தான் கடந்த நூற்றாண்டைக் காத்த காவல் அரண்கள். அவர்கள் வழித்தடம் மாறாமல் செயல்படுவதால்தான், செல்வதால்தான் இன்றைய காவல் அரணாக முதலமைச்சர் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.

தலைமைப் பதவி என்பது தானாகக் கிடைத்துவிடவில்லை. ஐம்பது ஆண்டு கால உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி என்பதை எதிரிகளும் ஒப்புக் கொள்வார்கள். 'பொதுக்குழு' அளித்த தகுதியை 'பொதுமக்கள்' ஒப்புக் கொண்ட தகுதியாக மாற்றிக் காட்டியதில்தான் தளபதியின் தனிச்சிறப்பு அடங்கி இருக்கிறது. கட்சி எல்லைகளைத் தாண்டி, 'அனைவருக்குமான தலைவராக' அவர் போற்றப்படும் அளவுக்கு செயல்பட்டார்கள். அதனால்தான் இந்தியா வியந்து பார்க்கும் தலைவராக உயர்ந்து நிற்கிறார். முதலமைச்சர் பொறுப்பும் சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை. 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான மூன்றாண்டு காலமும் ஒருநாள் கூட ஓய்வில்லாமல் செயல்பட்டுக் கொண்டே இருந்தார். அதனால் கிடைத்தது. முதலமைச்சர் ஆனபிறகும் ஓய்வு கொள்ளவில்லை. 2021 முதல் இன்று வரையும் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்.

தாயுமானவராய், தந்தையுமானவராய் காட்சி தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முரசொலி புகழாரம் !

'நான் எனது சக்திக்கு மீறி உழைத்து வருகிறேன்' என்பதும் அவரது வாக்கு ஆகும். சக்திக்கு மீறி உழைப்பதால்தான் இன்றைய தமிழ்நாடு, இந்தியாவே வியந்து பார்க்கும் தமிழ்நாடாக உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் தமிழ்நாடாக உள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்குகிறது தமிழ்நாடு. அதிகமான தொழிற்சாலைகள் இருக்கும் மாநிலம். பள்ளிக் கல்வியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளோம். இந்தியாவில் 30 விழுக்காடு சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. அனைத்து வளர்ச்சிக் குறியீட்டிலும் முன்னணியில் இருக்கிறோம். பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. மதம், சாதிய மோதல்கள் இல்லாத மாநிலமாக இருக்கிறது. இவை அனைத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இன்னும் வளர்க்க நினைக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அதற்காகவே அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கடந்த மூன்றாண்டு காலத்தில் மட்டும் இதுவரை 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மொத்த மதிப்பு 9 லட்சத்து 99 ஆயிரத்து 93 கோடி ரூபாய். இவற்றின் மூலமாக 18 லட்சத்து 89 ஆயிரத்து 234 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 234 திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டது. 4 லட்சத்து16 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டது. மற்ற ஒப்பந்தங்களும் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரப் போகின்றன. அதிக முதலீடுகளை ஈர்க்கக்கூடிய உயர் தொழிற்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பினை உருவாக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்து, அதன் மூலம், தமிழ்நாட்டினை 2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றிட வேண்டும் என்ற இலக்கினை முன்வைத்துச் செயல்பட்டு வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

தலைவர் ஆவதற்கு முன்பு நடந்த ஈரோடு மண்டல மாநாட்டில் கழகத்துக்காக ஐம்பெரும் முழக்கங்களை தளபதி அவர்கள் அறிவித்தார்கள்.

  • கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம்.

  • தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்.

  • அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்.

  • மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்.

  • வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம்.

-இவை தான் அந்த ஐம்பெரும் முழக்கங்கள். தலைவர் முதலமைச்சரின் இலக்கு பெரிது. அதனால் அவரது உழைப்பும் பெரிதாக இருக்கிறது! அமெரிக்கப் பயணம் வெல்லட்டும் !

banner

Related Stories

Related Stories