முரசொலி தலையங்கம்

“வாஜ்­பாயின் பாஜக ஆட்­சி­யை கவிழ்த்­ததே ஜெய­ல­லிதா என்­பது மோடிக்கு தெரி­யுமா?”-முரசொலி நெத்தியடி கேள்வி!

வாஜ்பாய் அரசைக் கவித்த ஜெயலலிதாவைத் தான் புகழ்ந்து தள்ளுகிறார் மோடி என முரசொலி விமர்சித்துள்ளது.

“வாஜ்­பாயின் பாஜக ஆட்­சி­யை கவிழ்த்­ததே ஜெய­ல­லிதா என்­பது மோடிக்கு தெரி­யுமா?”-முரசொலி நெத்தியடி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அந்த மோடியா ? இந்த லேடியா ? - 1

இரண்டு மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. இரண்டு முறை வெற்றி பெற்று பிரதமர் ஆனவர், தனது பத்தாண்டு காலச் சாதனைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு இன்னொரு கட்சித் தலைவர்களான எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்து விட்டுச் சென்றுள்ளார். தனது ஆட்சியில் சொல்லிக் கொள்ள ஏதும் இல்லாததால் அவருக்கு ஊன்றிக் கொள்ள எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தேவைப்பட்டுள்ளார்கள்!

அடுத்த பிரதமராக ஜெயலலிதா ஏதோ போட்டியிடப் போவது போல அவரைப் புகழத் தொடங்கி இருக்கிறார் மோடி. "வளர்ச்சியை உருவாக்கியது குஜராத் மோடியா? இந்த லேடியா?” என்று மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜக.வைத் தோற்கடித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவைப் பாராட்டி பேசத் தொடங்கி இருக்கிறார் மோடி. அவருக்கு கடந்த காலமே மறந்து விட்டது போலும்!

2016 சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு எதிராக இதே மோடிதான் பிரச்சாரம் செய்தார். அப்போது ஓசூரில் பொதுக்- கூட்டம் பேசிய மோடி, அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் மலிந்த ஆட்சி என்று குற்றம் சாட்டினார்.

"பா.ஜ.க.வுக்கு அனைவரும் வாக்களியுங்கள். ஒவ்வொரு முறையும் அம்மாவிடம் (ஜெயலலிதா) கோபித்துக் கொண்டு அய்யாவுக்கு (கலைஞர்) வாக்களிப்பீர்கள். அல்லது அய்யாவிடம் கோபித்துக் கொண்டு அம்மாவுக்கு வாக்களிப்பீர்கள். மாற்று சக்தி இல்லை. ஒரு முறை கிணற்றில் விழுந்தால் அடுத்த முறை ஏரியில் விழுவீர்கள். இப்போது பா.ஜ.க. என்ற மாற்று சக்தி உங்களுக்கு கிடைத்துவிட்டது. இப்போதைய ஆட்சியில் (அ.தி.மு.க.) லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாடே இதனால் பாதிக்கப்பட்டுவிட்டது. லஞ்சம் வாங்குபவர்கள் கையில் ஆட்சி இருக்கிறது” என்று பேசினார் அன்றைய மோடி.

“வாஜ்­பாயின் பாஜக ஆட்­சி­யை கவிழ்த்­ததே ஜெய­ல­லிதா என்­பது மோடிக்கு தெரி­யுமா?”-முரசொலி நெத்தியடி கேள்வி!

அத்தகைய ஜெயலலிதாவைத்தான் சிறந்த ஆட்சி கொடுத்ததாக இப்போது புகழ்கிறார் பிரதமர் மோடி. 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இங்கே பரப்புரை செய்ய வந்த அமித்ஷா, 'அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்' என்று பேசினார். திருச்சியில் பேசிய அமித்ஷா, ஜெயலலிதாவை கடுமையாகத் தாக்கினார். "இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம் ஜெயலலிதாவின் அரசாங்கம்தான்” என்றார். "மே 16 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுங்கள் என்று மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.

"அ.தி.மு.க. அரசு, தமிழகத்துக்கு ஒன்றிய அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை நிராகரித்தும், செயல்படுத்தாமலும் கிடப்பில் போட்டுள்ளது. இதனால், தமிழகம் வளர்ச்சி காணாமல் ஊழல் மலிந்து காணப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்” என்று பட்டுக்கோட்டையில் பேசினார் அமித்ஷா. "இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த ஜெயலலிதாவின் அரசாங்கத்தை மக்கள் மாற்றி, பா.ஜ.க.வுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்” என்றுதான் போகும் இடமெல்லாம் பேசினார். அன்று பேசியதற்கு எதிராக இன்று பேசுகிறார்கள்.

அண்ணாமலையிடம் கேட்டால் தெரியுமே ஜெயலலிதாவைப் பற்றி. 1991--96 ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. அவரது ஆட்சிகாலம் ஊழலில் மிக மோசமான காலக்கட்டமாக இருந்ததா என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகை கேட்கிறது. அப்போது அண்ணாமலை, “தமிழகத்தில் பல நிர்வாகங்கள் ஊழல் மலிந்தன. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுள்ளனர். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது. ஊழலில் நம்பர் ஒன் என்று சொல்வேன்,” என்றார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குப் போனவர் - பதவியை இழந்தவர் ஜெயலலிதா மட்டும்தான். அவரது பெயரைச் சொல்லாமல் சொல்லி இருந்தார் அண்ணாமலை. இந்தப் பேட்டிக்கு எதிராக அ.தி.மு.க. கொந்தளித்ததே. அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் போடப்பட்டதே. இது பிரதமர் மோடிக்குத் தெரியாதா?

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குப் போனவர் - பதவியை இழந்தவர் ஜெயலலிதா மட்டும்தான். அவரது பெயரைச் சொல்லாமல் சொல்லி இருந்தார் அண்ணாமலை. இந்தப் பேட்டிக்கு எதிராக அ.தி.மு.க. கொந்தளித்ததே. அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் போடப்பட்டதே. இது பிரதமர் மோடிக்குத் தெரியாதா?

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உடைப்புக்கு அடிப்படையாக அமைந்ததே, ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று அண்ணாமலை சொன்னதால்தானே? இது கூடத் தெரியாமல் அண்ணாமலை நடத்திய விழாவில், அண்ணாமலை தலையில் மண்ணை போட்டுவிட்டாரே பிரதமர்.

“வாஜ்­பாயின் பாஜக ஆட்­சி­யை கவிழ்த்­ததே ஜெய­ல­லிதா என்­பது மோடிக்கு தெரி­யுமா?”-முரசொலி நெத்தியடி கேள்வி!

வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்த்ததே ஜெயலலிதா என்பது மோடிக்கு தெரியுமா? 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அ.தி.மு.க. கூட்டணியில்தான் பா.ஜ.க. இருந்தது. அமைச்சரவை அமைக்குமாறு வாஜ்பாய்க்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்த பிறகும், பா.ஜ.க.வுக்கு ஆதரவுக் கடிதத்தை ஜெயலலிதா தரவில்லை. யார் யாருக்கு என்ன துறை வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா நிபந்தனை விதித்தார். அதனை வாஜ்பாய் ஏற்கவில்லை. 'அ.தி.மு.க. கூட்டணிக்கு நிதி துறையை ஒதுக்குவதில் பிரச்சினை இருக்கிறது' என்று வாஜ்பாய் வெளிப்படையாக பேட்டியே கொடுத்தார். இரண்டு கட்சிக்கும் பேச்சுவார்த்தை நடந்தது.

‘ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருகிறோம். ஆதரவுக் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம். ஆனால் அமைச்சரவையில் சேர மாட்டோம்' என்று ஜெயலலிதா அறிக்கை விட்டார். சில மாதங்கள் கழித்ததும் ஜெயலலிதா இறங்கி வந்து அமைச்சரவையில் சேர்ந்து கொண்டார். தம்பிதுரை, சேடப்பட்டி முத்தையா, ஆர்.கே.குமார், கடம்பூர் ஜனார்த்தனம் ஆகியோர் அமைச்சர்கள் ஆனார்கள். அமைச்சரவையில் இணைந்த பிறகும் பா.ஜ.க.வுக்கு அவர் கொடுத்த குடைச்சல்கள் அதிகம்.

ஓராண்டுகள் கழிந்த நிலையில், பா.ஜ.க. அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெற்றார் ஜெயலலிதா. அ.தி.மு.க. சார்பில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் திடீரென பதவி விலகினார்கள். கடற்படை ராணுவத் தளபதி விஷ்ணு பகவத்தை டிஸ்மிஸ் செய்த காரணத்தை எனக்குச் சொல்லவில்லை என்று சொன்னார் ஜெயலலிதா. அமைச்சரவையில் இருந்து ஜார்ஜ் பெர்னாண்டஸை நீக்கச் சொன்னார். அ.தி.மு.க. அமைச்சர்கள் இல்லாமலேயே அமைச்சரவைக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டிய கூத்தெல்லாம் அப்போது நடந்தது. மாற்று அரசை அமைக்கப் போவதாகச் சொல்லி டெல்லிக்கு ஜெயலலிதா போனார். வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்க டெல்லி சென்றார் ஜெயலலிதா. குடியரசுத் தலைவரைச் சந்தித்து பா.ஜ.க. ஆட்சிக்கு தந்த ஆதரவை திரும்பப் பெறுவதாகக் கடிதம் கொடுத்தார்.

இதனால் வாஜ்பாய் அரசு, பெரும்பான்மையை இழந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். 17.4.1999 அன்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. வாஜ்பாய் அரசைக் கவித்த ஜெயலலிதாவைத் தான் புகழ்ந்து தள்ளுகிறார் மோடி.

- தொடரும்

- முரசொலி தலையங்கம்

01.03.2024

banner

Related Stories

Related Stories