முரசொலி தலையங்கம்

பா.ஜ.க.வின் பொருளாதாரத் தோலை உரித்துக் காட்டிய நிர்மலா சீதாராமனின் கணவர் : முரசொலி!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகர் சொல்வது இப்போது வெளியிடப்பட்டு இருக்கும் நிதிநிலை அறிக்கையையும் சேர்த்துத்தான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

பா.ஜ.க.வின் பொருளாதாரத் தோலை உரித்துக் காட்டிய  நிர்மலா சீதாராமனின் கணவர் : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (07-02-2024)

நிதி அமைச்சருக்குஅவர் கணவரே பதிலளிக்கிறார் – 2

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகர் எழுதுகிறார்..

* சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செல்லாப் பண நடவடிக்கை கொடுத்த அடியிலிருந்து இன்னும் மீளவில்லை.

* கிராமப் புறங்களின் துன்பம் இடை வெளியின்றித் தொடர்கிறது.

* ஆளும் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் 2022-23ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஏற்பட்ட 13.5% வளர்ச்சியானது திறமையாகப் பொருளாதாரம் கையாளப்பட்டதன் விளைவென்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால், உண்மையில் அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் பொருளாதாரம் இருந்த படுபாதாளத்திலிருந்து பார்க்கும் போதுதான் 13.5% என்கிற விகிதம் கவர்ச்சியாகத் தோன்றுகிறது என்கிற உண்மையைப் பூசி மெழுகிவிட்டுத்தான் அவர்கள் பெருமை பேசுகிறார்கள்.

* பொருளாதாரம் கொரோனா பெருந் தொற்றுக் காலத்திற்கு முன்பிருந்த நிலைக்கு இன்னமும் திரும்பவில்லை என்கிற உண்மையை நாட்டு மக்கள் பார்த்து விடக் கூடாது என அவர்கள் நினைக்கிறார்கள்.

* பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பேயும் கூட பொருளாதாரத்தின் வேகம் குறைந்திருந்தது என்பதை நாம் மறக்க வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள்.

* தொழில் முனைவோர் நாட்டிற்குள் முதலீடு செய்யத் தயாரில்லை.

* மூலதனம் நாட்டின் எல்லைகளைக் கடந்து இரக்கமில்லாமல் பறந்து கொண்டிருக்கிறது.

* மக்கள் இது போன்று எப்போதும் வாழ்ந்ததில்லை. பாலாறும் தேனாறும் ஓடும் ஒரு பொற்காலத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்று அரசுகள் பிரகடனம் செய்யும்போது நாம் அவற்றின் உள்நோக்கத்தைச் சந்தேகிக்க வேண்டும். இப்படி அறிவிப்பதின் மூலம் அவர்கள் மக்களின் பொதுக் கருத்தை வளைக்க நினைக்கிறார்கள், மோசமான நிர்வாகத்திலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப நாட்டையே இரைச்சலிலும், கண்கவர் காட்சிகளிலும் மூழ்கடிக்கிறார்கள் என்று நாம் நிச்சயமாக நம்பலாம்.

* நாம் சுபமான நாட்களில் வாழ்வதாகவும் (அச்சே தின்) தற்போது ஒரு அமிர்த காலத்தில் இருப்பதாகவும் அரசு, குறிப்பாகப் பிரதமரும் அவரின் அதிகார வர்க்க அடிமைகளும், திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர். அவர்கள் தம் பெருமையாகச் சொல்லுவதெல்லாம் எவ்வளவு பொய்யானவை, தவறான தோற்றம் தருபவை.

பா.ஜ.க.வின் பொருளாதாரத் தோலை உரித்துக் காட்டிய  நிர்மலா சீதாராமனின் கணவர் : முரசொலி!

* பான்ச் பிரான், அம்ரித் கால், ஆத்மநிர்பார் பாரத், டிஜிட்டல் இந்தியா, விஸ்வகுரு என முடிவில்லாமல் எழுப்பப்படும் இரைச்சல்களும் கூட நம் தேசிய வாழ்வின் பவித்திரமான ஒவ்வொரு தருணத்தையும் ஒரு மாபெரும் சர்க்கஸாக மாற்றி, சிறுமைப்படுத்தி அவற்றின் உள்ளார்ந்த பொருளை அழிப்பதற்கான முயற்சிதான். இது மோடி ஆட்சியின் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. இத்தகைய சர்க்கஸுகள் திரும்பத் திரும்ப நடத்தப்பட்டு, சகஜமாக்கப்பட்டு விட்டதால் நாடு அவற்றுடன் வாழப் பழகிவிட்டது போலவே தோன்றுகிறது.

- என்று வரிசையாக வரிசைப்படுத்தி பா.ஜ.க.வின் பொருளாதாரத் தோலை உரித்துக் காட்டி இருக்கிறார் பரகால பிரபாகர்.

“மோடி ராஜ்ஜியத்தின் நம்ப முடியாத அளவிலான திறமையின்மைதான் இந்தியாவின் பொருளாதாரத் துயரங்களுக்குக் காரணம். தீர்க்கமான சிந்தனையின் அடிப்படையிலான ஒரு கோர்வையான பொருளாதாரத்

தத்துவத்தை அது உருவாக்க முடியவில்லை. பொதுத்துறையின் சொத்துக்களை விற்பதே பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற எளிய சிந்தனையை அது விற்க முனைகிறது. பொதுத்துறையைத் தொடர்ந்து நடத்துவதற்கான, வலுவான உண்மையான சீர்திருத்தங்கள் செய்வதை அது தவிர்க்கிறது” என்று குற்றம் சாட்டுகிறார் பரகால பிரபாகர்.

“ஒரு புறத்தில் சந்தை சார்ந்த நவதாராளமயக் கொள்கையைக் கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்தப் ‘புதிய இந்தியா’, மறுபுறத்தில் தேசத்தின் சொத்துக்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு வேண்டிய தொழில்துறை நண்பர்களுக்கு மலிவான விலைக்குக் கொடுத்து வருகிறது. சமீபத்தில் வெளியான அதிரடியான ஹிண்டென்பெர்க் அறிக்கை கவுதம் அதானி குழுமத்திற்கு மோடி அரசிடம் இருக்கும் நெருக்கமான உறவு குறித்து சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதனால் எழுந்த சந்தேகக் காற்றை அரசு தூய்மை செய்யுமா என இன்னமும் நாடு காத்திருக்கிறது. ஒரு முறையான, ஒழுங்குபடுத்தப்பட்ட பொருளாதாரப் பார்வையும், திறமையான பொருளாதார ஆலோசகர்களும் இந்த அரசுக்கு இல்லாத காரணத்தினால் ‘புதிய இந்தியா’ சூனியக்காரப் பொருளாதார நிபுணர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டி இருக்கிறார் அவர்.

“பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பிருந்த அடிமட்ட வளர்ச்சி அளவைக் கூட இது வரை பொருளாதாரம் எட்டவில்லை. பொருளாதாரத்தை இப்படிச் சின்னாபின்னமாக்கிய ஆளும்கட்சி அரசியல் தகிடுதத்தத்தில் தான் ஒரு மேதை என்பதை நிரூபித்து விட்டது” என்று நிதி அமைச்சர் நிர்மலா

சீதாராமனின் கணவர் பரகால பிரபாகர் சொல்வது இப்போது வெளியிடப்பட்டு இருக்கும் நிதிநிலை அறிக்கையையும் சேர்த்துத்தான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

banner

Related Stories

Related Stories