முரசொலி தலையங்கம்

ஆளுநர் ஆர்.என்.ரவி பஞ்சாப் தீர்ப்பைப் படித்துத் திருந்தவும் : முரசொலி கடும் தாக்கு!

தேவையில்லாத சக்கைகளைப் படிப்பதை நிறுத்திவிட்டு, இதைப் படிக்கட்டும் ஆளுநர். திருந்தட்டும் ஆளுநர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி பஞ்சாப் தீர்ப்பைப் படித்துத் திருந்தவும் : முரசொலி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் தீர்ப்பைப் படித்துத் திருந்தவும்!

தமிழ்நாடு ஆளுநர் ரவி என்னவெல்லாம் சொல்லி வந்தாரோ, அவை அனைத்தும் அபத்தக் களஞ்சியம் என்பதை பஞ்சாப் மாநிலம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

* ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். அவர் பெயரளவில் தான் மாநிலத்தின் தலைவராக இருக்கிறார். ஆளுநர் என்பவருக்கு அரசியல் சட்டப்படி சில அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. அந்த அதிகாரங்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைகள் சட்டமியற்றும் வழக்கமான பணிகளை முறியடித்துவிட முடியாது.

* அரசியல் சட்டத்தின் 200 ஆவது பிரிவின் படி ஒரு சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் கூடிய விரைவில் அந்த முடிவை எடுக்க வேண்டும். முடிவு எடுக்காமல் காலதாமதம் செய்வதோ, அதனை அப்படியே நிறுத்தி வைப்பதோ முடியாது. எந்த செயல்பாடும் இல்லாமல் சட்டமுன்வடிவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மறுபரிசீலனை செய்ய சட்டமன்றத்துக்கு அவர் அனுப்பி வைக்கலாம். திருத்தம் செய்தோ - திருத்தம் செய்யாமலோ மீண்டும் அந்த சட்டமுன்வடிவை அரசு ஆளுநருக்கு அனுப்பி வைக்கலாம். அப்படி மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் சட்டமுன் வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதைத் தவிர வேறு வழியில்லை.

* மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டமுன்வடிவுகளை 'நிறுத்தி வைக்கிறேன்' என்று சொல்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபையின் சட்டமியற்றும் செயல்பாட்டை தடுப்பது போல் அமைந்து விடும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் தான் உள்ளது.

இவை அனைத்தும் பஞ்சாப் மாநில ஆளுநரின் நடத்தை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு கூறிய தீர்ப்பின் உள்ளடக்கம் ஆகும். இதே போன்ற ஒரு வழக்கு தான் கேரள ஆளுநருக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. அப்போதும் நீதிபதிகள், '' பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளோம். அதனை ஆளுநரின் செயலாளர் படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று சொல்லி இருக்கிறார்கள். இதே போன்றது தான் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கும். அதிலும் இப்படித்தான் தீர்ப்பு வரும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி பஞ்சாப் தீர்ப்பைப் படித்துத் திருந்தவும் : முரசொலி கடும் தாக்கு!

கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநர் ரவி என்ன சொன்னார் தெரியுமா? 'கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்' என்று பேசினார். மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்கள் மத்தியில் இப்படி பேசினார்.

ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும். அதனைத் தான் ரவி இது வரை செய்து வருகிறார். மாநிலத்தின் கவர்னராக இல்லாமல், இந்த மாநிலத்தின் மன்னராக அவர் நினைத்துக் கொள்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி பஞ்சாப் தீர்ப்பைப் படித்துத் திருந்தவும் : முரசொலி கடும் தாக்கு!

''... The Governor, as an unelected Head of the State, is entrusted with certain constitutional powers. However, this power cannot be used to thwart the normal course of lawmaking by the State Legislatures. Consequently, if the Governor decides to withhold assent under the substantive part of Article 200, the logical course of action is to pursue the course indicated in the first provision of remitting the Bill to the state legislature for reconsideration. In other words, the power to withhold assent under the substantive part of Article 200 must be read together with the consequential course of action to be adopted by the Governor under the first proviso. If the first proviso is not read in juxtaposition to the power to withhold assent conferred by the substantive part of Article 200, the Governor as the unelected Head of State would be in a position to virtually veto the functioning of the legislative domain by a duly elected legislature by simply declaring that assent is withheld without any further recourse. Such a course of action would be contrary to fundamental principles of a constitutional democracy based on a Parliamentary pattern of governance. Therefore, when the Governor decides to withhold assent under the substantive part of Article 200, the course of action which is to be followed is that which is indicated in the first proviso. The Governor is under Article 168 a part of the legislature and is bound by the constitutional regime" - என்று தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது அந்தத் தீர்ப்பில். பக்கம் 16. வரிசை எண் 25.

'கிடப்பில் போடவும் கூடாது, நிறுத்தி வைக்கவும் கூடாது, அதற்கான எந்த உரிமையும் தகுதியும் ஆளுநர்களுக்குக் கிடையாது' என்று சொல்லி இருக்கிறது உச்சநீதிமன்றம். தேவையில்லாத சக்கைகளைப் படிப்பதை நிறுத்திவிட்டு, இதைப் படிக்கட்டும் ஆளுநர். திருந்தட்டும் ஆளுநர்.

banner

Related Stories

Related Stories