முரசொலி தலையங்கம்

"தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க பொய் பொய்யாக பேசி வரும் ஆளுநர்" : பட்டியலிட்டு உண்மையை விளக்கிய முரசொலி!

அண்ணாமலை இடத்தை பிடிக்க ஆளுநர் ரவி போட்டி போடுவதாகவே இவை நமக்கு உணர்த்துகின்றன.

"தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க பொய் பொய்யாக பேசி வரும் ஆளுநர்" : பட்டியலிட்டு உண்மையை விளக்கிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொய்ப் பிரமாணம் எடுத்துள்ள ஆளுநர் - 2

*பொய் 9: ராஜ்பவன் காவலர்கள்தான் ஆபத்து ஏற்படாமல் தடுத்தனர்.

உண்மை: இவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. ஆளுநர் மாளிகை பாதுகாப்புக்காக சர்தார் படேல் சாலையில் பணியில் இருந்தவர்கள் சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள்தான். வினோத்தை கைது செய்தவர்கள் தமிழ்நாடு காவல்துறை போலீஸார்தான்.

* பொய் 10: ஆளுநர் மீதான தாக்குதல் போன்ற அனைத்து வழக்குகளிலும் காவல் துறை உண்மையான வழக்குப் பதிவு செய்யவில்லை, சாதாரண சிறிய குற்றங்களாக போலீஸ் மாற்றியது.

உண்மை: J3 Guindy PS Cr. no 735/2023 u/s 436, 353,506(ii) IPC Act 3 of Explosive Substances Act and 4 of TNPPDL Act – ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

* பொய் 11: ஆளுநர் மாளிகை நுழைவில் உள்ள நபர்கள் அவரை மடக்கி பிடித்ததாக ஆளுநர் மாளிகை புகாரில் உள்ளது.

உண்மை: அதுபோன்ற ஒன்று எங்கும் நடைபெறவில்லை. காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து காவலர்கள் மட்டுமே அதை தடுத்து அவர்களிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி உள்ளனர். உடனடியாக ரோந்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பொய் 12: ஆளுநருக்கு வரும் கடுமையான அச்சுறுத்தலை காவல்துறை அலட்சியப்படுத்தியது.

உண்மை: ஆளுநர் மாளிகை என்பது மிகமிக பாதுகாப்பான இடம். 253 காவலர்கள், ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். கூடவே மோப்ப நாய் படை, வெடிகுண்டு நிபுணர்குழு, பேக்கேஜ் ஸ்கேனர் ஆகியவை உள்ளது. ஆளுநர் மாளிகைக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினரும், வெளிப்பகுதியில் தமிழக காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். ஆளுநர் வெளியில் செல்லும் இடங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இவ்வளவு பாதுகாப்பு வேறு எங்கும் இல்லை.

- ஒரு சம்பவத்தில் எத்தனை பொய் சொல்கிறார் ஆளுநர் என்பதை இதன் மூலம் அறியலாம். ராஜ்பவனை FAKE பவன் ஆக்கிவிட்டார் ஆளுநர் ரவி.

"தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க பொய் பொய்யாக பேசி வரும் ஆளுநர்" : பட்டியலிட்டு உண்மையை விளக்கிய முரசொலி!

“ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ்பவனுக்குள் வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்” -– என்று 25.10.2023 இரவு 9.27 மணிக்கு ராஜ்பவன் செய்திக் குறிப்பு கூறுகிறது.

வெடிகுண்டுகள் ஏந்திய விஷமிகள் வரவுமில்லை. அவர்கள் பிரதான வாயில் வழியாக நுழைய முயற்சிக்கவுமில்லை. அவர்கள் பெட்ரோல் குண்டுகளை ராஜ்பவனுக்குள் வீசவும் இல்லை. அவர்கள் தப்பவும் இல்லை. மூன்று வரியில் மொத்தமும் பொய். சம்பவம் நடந்த மதியம் 3 மணிக்கே வினோத் கைது செய்யப்பட்டு விட்டார். ஆனால் இரவு 9.27 மணிக்கு ராஜ்பவன் சொல்கிறது, தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டார்கள் என்று. இதனை விட பொய் மூட்டை இருக்க முடியுமா?

26.10.2023 மதியம் 3.20 மணிக்கு ராஜ்பவன் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடுகிறது. “ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப் போகச் செய்து விட்டது. அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக் கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது” என்கிறது அந்த செய்திக் குறிப்பு. ஏதோ மர்ம சினிமாவைப் போல கதை எழுதுபவர்கள் ராஜ்பவனுக்குள் புகுந்து விட்டார்கள் போல. பி.டி.சாமி கதை மிஞ்சுவதாக இருக்கிறது மர்ம விவரிப்புகள் இருக்கிறது.

‘தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிவிட்டார்கள்’ என்று முதல் நாள் அறிக்கை விட்டதும் ராஜ்பவன்தான். ‘அவசர கதியில் கைது செய்துவிட்டார்கள்’ என்பதும் ராஜ்பவன்தான். ஒருவரை அவசரமாகத்தான் கைது செய்ய முடியும். ஆர அமர கைது செய்ய முடியாது.

25 ஆம் தேதி மதியம் சம்பவம் நடந்துள்ளது. ஆளை சம்பவ இடத்திலேயே கைது செய்து விட்டது காவல் துறை. வழக்கு பதிந்து மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் சென்று ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பும் அனைத்து நடைமுறைகளும் நடந்து விட்டது. அதன்பிறகுதான் 25 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புகாரே அனுப்புகிறார்கள். அதாவது அனைத்து முதல் கட்ட விசாரணையும் முடித்த பிறகு புகார் அனுப்புகிறார்கள். எவ்வளவு வேகம் இந்த மாஜி ஐ.பி.எஸ். அதிகாரியிடம்?!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் ஒரு சம்பவம் நடந்தது. அதிலும் இப்படித்தான் தனது குதர்க்க விளையாட்டை ஆளுநர் செய்தார்.

"தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க பொய் பொய்யாக பேசி வரும் ஆளுநர்" : பட்டியலிட்டு உண்மையை விளக்கிய முரசொலி!

‘கோவை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு வழங்கியதில் ஏன் இந்த காலதாமதம் என்பதுதான் என்னுடைய கேள்வி’ என்று பொத்தாம் பொதுவாக பேசினார். ஒரு தனியார் நிறுவனம், தனது யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் தங்கும் விடுதியை திறந்து வைப்பதற்காக இவரை அழைத்திருக்கிறது. அந்த இடத்தில் போய் இப்படி பேசினார். 2022 அக்டோபர் 23 அன்று காலையில் சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் 26 அன்று காலையில் தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. அதாவது மூன்றாவது நாளே மாற்றப்பட்டு விட்டது. இதனை பெரிய குறையைப் போல அன்று சொல்லி சர்ச்சை கிளப்பினார் ஆளுநர்.

மற்ற மாநிலங்களில் இதுபோல நடந்த சம்பவங்களை எல்லாம் மூன்று, நான்கு மாதங்கள் கழித்து என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்துள்ளார்கள். ஆனால் இங்கே மூன்றாவது நாளே ஒப்படைத்தது அரசு. அதையே பெரிய தாமதம் போல பிரச்சாரம் செய்தார். அதாவது அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதை தனது தொழிலாக வைத்துள்ளார் ஆர்.என்.ரவி.

அமைதியான மாநிலமாக இருக்கிறதே - இந்த அமைதியைக் குலைக்க முடியவில்லையே என்று பா.ஜ.க. கும்பல் நினைப்பதைப் போலவே ஆளுநரும் நினைப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அண்ணாமலை இடத்தை பிடிக்க ஆளுநர் ரவி போட்டி போடுவதாகவே இவை நமக்கு உணர்த்துகின்றன.

banner

Related Stories

Related Stories