முரசொலி தலையங்கம்

இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் தமிழ்நாடு : பாராட்டு விழாவைப் போல் நடந்த மகளிர் உரிமை மாநாடு - முரசொலி!

இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் ஆட்சியாக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சி நடைபெற்று வருவதையும் மனப்பூர்வமாக வழிமொழிந்திருக்கிறார்கள்.

இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் தமிழ்நாடு : பாராட்டு விழாவைப் போல் நடந்த மகளிர் உரிமை மாநாடு - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (18-10-2023)

'இந்தியா' பாராட்டிய தமிழ்நாடு!

திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி சார்பில் - கழக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. ஏற்பாட்டில் நடந்த மகளிர் உரிமை மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து வருகை தந்த பல்வேறு கட்சித் தலைவர்கள், தமிழ்நாட்டைக் கொண்டாடினார்கள்.

திராவிட இயக்கம் - தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தமிழினத் தலைவர் கலைஞர் - திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை பாராட்டிப் பேசினார்கள். இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் ஆட்சியாக தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களது ஆட்சி அமைந்திருந்ததையும் – இப்போது மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சி நடைபெற்று வருவதையும் மனப்பூர்வமாக வழிமொழிந்திருக்கிறார்கள்.

அன்னை சோனியா காந்தி அம்மையார் பேசும் போது, ''பெண்களின் முன்னேற்றத்திற்கு அண்ணா, கலைஞர் அரசுகளே முன்னெடுப்புகளை மேற் கொண்டன. இந்தியாவுக்கே அண்ணா, கலைஞர் ஆட்சிகள் ஒளிவிளக்காக திகழ் கின்றன. ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் ஆட்சியில்தான் காவல் துறையில் பெண்கள் நியமிக்கப்பட்டனர். இன்று காவல்துறையில் நான்கில் ஒரு பங்கினர் பெண் காவலர்கள் தி.மு.க. ஆட்சியில்தான் இருக்கிறார்கள். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பெண்கள் முன்னேற்றத்திற்கு தி.மு.க. அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் ஏராளம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தாய்-சேய் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது" என்று வரிசையாக அடுக்கினார்.

ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி பேசும் போது, '' இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் என தி.மு.க. அரசின் திட்டங்கள் மகத்தானவை. கட்சி, மதம் என பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவாக மகளிர் நலதிட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய கொடை யாகும். பெண் சிசு கொலை, பாலியல் தொல்லை, குடும்ப வன்முறை, வரதட்சனை என பல்வேறு அடக்கு முறைகளை பெண்கள் சந்தித்தனர். பெண்கள் சந்தித்த அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கலைஞர். அவர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்" என்று குறிப்பிட்டார்.

இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் தமிழ்நாடு : பாராட்டு விழாவைப் போல் நடந்த மகளிர் உரிமை மாநாடு - முரசொலி!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசும் போது, '' நூறு ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற புத்தகத்தை எழுதினார். சமூக மாற்றத்திற்கான புரட்சி இங்கே தான் உருவானது. ஆனால் நூறு ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதும் பெண் ஏன் அடிமையாயிருக்கிறாள் என்றே கேட்கும் நிலை உள்ளது. சமூக, பொருளா தார அடிப்படையில் பெண்கள் அடிமை யாக்கப்பட்டதற்கு எதிராக ஏராளமான கட்டுரைகளை எழுதியவர் பெரியார். அவர் வழியில் அண்ணா, கலைஞர் ஆகியோர் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். சமூக மாற்றத்திற்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது" என்று குறிப்பிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சுபாஷினி அலி பேசும் போது, ''சுதந்திரத்திற்கு முன்பே மனுவுக்கு எதிராக குரல் கொடுத்த இயக்கம் தமிழ்நாட்டின் நீதிக்கட்சி ஆகும். சமத்து வத்திற்கான போராட்டம் தமிழ்நாட்டில் தான் துவங்கியது. அதனை வழி நடத்தியவர் பெரியார். 1954ம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க. நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பெண்களுக்கு சொத்தில் உரிமை உள்ளிட்ட பல அரிய திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க.அரசு தான் கொண்டு வந்தது. சமூக நீதி, பாலின நீதி, பொருளாதார நீதி ஆகி யவை மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானது. சமத்துவ முழக்கத் திற்காக 'முரசொலி'யைக் கொண்டு வந்த மிகச்சிறந்த பத்திரிகையாளர் முத்தமிழறிஞர் கலைஞர்" என்று குறிப்பிட்டார்.

தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, ''பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களை நினைவு கூர்ந்து என் உரையை துவக்குகிறேன். தமிழ் நாட்டின் உரிமைக்காக தமிழின் உரிமைக் காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. எப் போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. கூட்டாட்சிக்காக தமிழ்நாடு குரல் கொடுத்து வருவதை பாராட்ட கடமைப் பட்டுள்ளேன். தமிழுக்கும் மராட்டிக்கும் இரண்டு ஒற்றுமைகள் உள்ளன. ஒன்று தமிழிலும் மராட்டியிலும் ல, ள, ழ உள்ளன. இது மிகச்சிறப்பு. இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்களில் மிகவும் சிரத்தையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பது பாராட்டுக் குரியது. தமிழ்நாட்டில் பெண்கள் நலனுக்காக நிறைவேற்றி வரும் திட்டங்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்" என்றார்.

இந்திய கம்யூ.கட்சியின் ஆனி ராஜா பேசும் போது, ''மக்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் சிறப்பான வெற்றி கண்டவர் கலைஞர். பாலின சமத்துவம், மகளிர் உரிமைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் ரெட் சல்யூட். கலைஞர் நூற்றாண்டு விழா மட்டுமல்ல, அவரது வாழ்க்கையே கொண்டாடப்பட வேண்டிய விழாதான். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான உரிமை களை கலைஞரும் தி.மு.க.வும் பெற்றுத் தந்திருக்கிறது" என்றார்.

இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் தமிழ்நாடு : பாராட்டு விழாவைப் போல் நடந்த மகளிர் உரிமை மாநாடு - முரசொலி!

சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான டிம்பிள் யாதவ் பேசும் போது, ''தமிழ்நாட்டின் சிறந்த அடையாளமாக திகழ்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர். சுதந்திர தின விழாவில் மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்தவர். சமூக நீதிக்காக இடைவிடாத போராட்டம் மேற் கொண்டவர். மகளிர் உரிமை, பாலின சமநிலை, பெண்களுக்கு சொத்தில் உரிமை என பல்வேறு திட்டங்களிலும் சமாஜ்வாதி கட்சி அரசுக்கு தமிழ்நாடுதான் முன்மாதிரி. பெண்கள் உரிமைகளுக்காக நாடாளு மன்றத்திலும் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது" என்றார்.

பீகார் அமைச்சர் லெஷி சிங் பேசும் போது, '' தமிழ்நாட்டைப் போலவே பீகாரிலும் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நிதிஷ் குமார் அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்காலத்தில் பெண்கள் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார்'' என்றார்.

திரிணாமூல் காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் சுஷ்மிதா தேவ் பேசும் போது, ''தமிழ்நாட்டில் மிக நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். சமூக நீதி, சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கலைஞர். மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ் நாட்டின் தி.மு.க. அரசு முன்னணியில் உள்ளது" என்றார்.

இப்படி ஒட்டுமொத்த 'இந்தியா'வும் தமிழ்நாட்டுக்கு எடுத்த பாராட்டுவிழாவைப் போல அமைந்திருந்தது மகளிர் உரிமை மாநாடு.

banner

Related Stories

Related Stories