முரசொலி தலையங்கம்

இஸ்ரேல் -பாலஸ்தீனத்துக்கு இடையே போர் நடக்க காரணம் என்ன? : உண்மையை விளக்கும் முரசொலி!

இவ்வளவு பெரிய தாக்குதலை ஹமாஸ் தொடுக்கும் என இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லை.

இஸ்ரேல் -பாலஸ்தீனத்துக்கு இடையே போர் நடக்க காரணம் என்ன? : உண்மையை விளக்கும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (16-10-2023)

இஸ்ரேல் -பாலஸ்தீனத்துக்கு இடையில் நடப்பது; ஆக்கிரமிப்பாளருக்கும் ஆக்கிரமிப்பை எதிர்ப்பவருக்கும் இடையே நடக்கும் போர்!

புலம்பெயர்ந்து வந்திருந்த யூதர்கள் நலனுக்காக உருவாக்கித் தரப்பட்ட நாடு இஸ்ரேல். அதுவும் பாலஸ்தீனத்தில் இருந்து பிரித்து உருவாக்கித் தரப்பட்டது. எப்போதுமே சும்மா கிடைத்த மாட்டைத் தானே பல்லைப் பிடித்துப் பார்ப்பார்கள். இருக்க இடம் கொடுத்தால், படுக்க இடம் கேட்பார்கள். அப்படி, எந்த பாலஸ்தீனத்தில் இருந்து ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுத்தார்களோ, அந்த பாலஸ் தீனத்தையே ஆக்கிரமித்தது இஸ்ரேல். ஆக்கிரமிப்பையே தொழிலாக வைத்துக் கொண்டும் வருகிறது இஸ்ரேல். இதனை அமைதியாக அல்ல, அச்சுறுத்தும் வகையில் செய்து வருகிறது அந்த நாடு.

பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு தனிநாடு என்ற பிரிட்டனின் திட்டத்துக்கு சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பும் 1922-ல் ஒப்புதல் வழங்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்த யூதர்களில் 90 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே குடியமர்த்தப்படுகிறார்கள்.

1948 வரை பாலஸ்தீனம் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்தது. 1948-ஆம் ஆண்டு மே 14–ஆம் தேதி பிரிட்டன் அதிகாரபூர்வமாக பாலஸ்தீனிலிருந்து வெளியேறியது. இஸ்ரேல் என்கிற தேசம் உருவாகிவிட்டதாக யூதர்கள் அறிவித்துவிட்டார்கள். ஆம், ஒரு தனிநாடாக இஸ்ரேல் உருவாகி விட்டது. பாலஸ்தீனத்தில் இசுலாமியப் படுகொலைகள், அகதிகளாகத் துரத்தப்படுதல் என .. இப்ப­டி அந்த நிலப்பரப்பே ரத்தச் சகதியாக இருப்பதற்கு இஸ்ரேல் தான் முக்கியக் காரணம்.

இஸ்ரேல் -பாலஸ்தீனத்துக்கு இடையே போர் நடக்க காரணம் என்ன? : உண்மையை விளக்கும் முரசொலி!

வலுக்கட்டாயமாக பாலஸ்தீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இஸ்ரேல் விழுங்கியது. அங்கு தங்கள் மக்களைக் கொண்டு போய் குடியேற்றினார்கள். இந்தச் சூழலில் பாலஸ்தீனத்தின் வரைபடம் என்பதே கடுகு போலத் தேய்ந்தது. இஸ்ரே­லின் வரைபடம் கொழுத்தது. இன்றைய இஸ்ரேலின் பரப்பளவு 21 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். பாலஸ்தீனத்தின் பகுதி என்பது 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்தான்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமைப்பு ரீதியாக எதிர்க்குரல் கொடுத்தார் யாசர் அராபத். 1958 ஆம் ஆண்டு ‘அல் பத்தா’ என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். பின்னர் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகவும் அவர் ஆனார். 1974 ஆம் ஆண்டு ஐ.நா. சபையில் புகுந்து உரையாற்றும் அளவுக்கு அவரது செல்வாக்கு உயர்ந்தது. ‘ஒரு கையில் ஒலியமரக் கிளையும் இன்னொரு கையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளன. எது வேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்க வேண்டும்’ என்றார் யாசர் அராபத். அவராலும் மிக நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இஸ்ரேலுடன் சமரசம் செய்து கொண்டார். அதன் பிறகும் அவரை நிம்மதியாக அவர்கள் இருக்கவிடவில்லை. இறுதிக்காலத்தில் மிகுந்த நெருக்கடியை இஸ்ரேல் அவருக்குக் கொடுத்தது. பின்னர் உயிர் துறந்தார் அராபத்.

இதற்கிடையில் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் உருவானது­தன் ‘ஹமாஸ்’ இயக்­ம் ஆகும். காசாவை தங்களது ஆளுகையில் வைத்துள்ளார்கள் ஹமாஸ் இயக்கத்தினர். இது தான் இப்போது போர்க்களமாகக் காட்சி அளிக்கிறது. மிகத் தொடர்ச்சியாக பாலஸ்தீனத்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வந்தது.

கடந்த ஆண்டு கிழக்கு ஜெருசலேமில் கூடியிருந்த பாலஸ்தீனர்களை நோக்கி இஸ்ரேல் ராணு­ம் கொடூரமான தாக்குதலை நடத்தியது. இந்த ஆண்டு மட்டும் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டனர். அப்போதும் உலக நாடுகள் அமைதியாக இருந்தன. இஸ்ரேல் போர் தொடுக்கும் போதெல்லாம் அமைதியாக இருக்கும் உலகநாடுகள், ஹமாஸ் போர் தொடுத்ததும் அறிவுரை சொல்ல வந்து விடுகின்றன, ,‘வலிமையானவன் சொல்வதே வேதம்’ என்ற அடிப்படையில்!

இஸ்ரேல் -பாலஸ்தீனத்துக்கு இடையே போர் நடக்க காரணம் என்ன? : உண்மையை விளக்கும் முரசொலி!

இப்போதும், ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக இஸ்ரேல், பல்வேறு சிறுசிறு தாக்குதலைத் தொடுத்து வந்துள்ளது. இதற்கு எதிர்வினையாக இவ்வளவு பெரிய தாக்குதலை ஹமாஸ் தொடுக்கும் என இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லை.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து நாட்டைப் பாதுகாக்கும். நாங்கள் யுத்தம் செய்கிறோம். அதில் நாங்களே வெல்வோம். எங்களின் எதிரி யோசித்துக்கூட பார்த்திராத விலையைக் கொடுக்கப்போகிறார்கள். எங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி, காசா நகரில் ஹமாஸ் தீவிரவாதிகள் செயல்படும் அனைத்து இடங்களையும் அழிப்போம். இந்தப் போர் நீண்ட காலம் நடக்கும்” என்று ஆவேசமாகச் சொல்லி இருக்கிறார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நார்வே, பிரான்ஸ், ஸ்பெயின், போலந்து, உக்ரைன், பிரேசில் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று இந்தியப் பிரதமரும் அறிவித்திருக்கிறார்.

பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ், “பாலஸ் தீனத்துக்குள் அத்துமீறிக் குடியேறுபவர்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய ராணுவ பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை என்பது பாலஸ்தீனியர்களுக்கு உண்டு” என்று தெரிவித்திருக்கிறார். இரான், சிரியா, சவுதி அரேபியா, ஏமன், கத்தார், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இவர்களை ஆதரித்திருக்கிறார்கள்.

“பாலஸ்தீன மக்களின் நிலம், சுயராஜ்யம் மற்றும் அவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமைக்கான நீண்ட கால ஆதரவை காங்கிரஸ் அளித்துள்ளது. அதன்படி எங்கள் ஆதரவு தொடரும். இரு தரப்பினரும் தங்களது போரை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்ற காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியக் கமிட்டி தீர்மானம் மிகமிக முக்கியமானது. ஒன்றிய பா.ஜ.க. எடுத்துள்ள முடிவு அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது.

– தொடரும்

banner

Related Stories

Related Stories