முரசொலி தலையங்கம்

சிறப்பு திட்டங்கள்தான் இல்லை, தமிழ்நாட்டு நிதி கூட முறையான ஒதுக்கப்படவில்லை -அமித்ஷாவை விமர்சித்த முரசொலி

சிறப்பு திட்டங்கள்தான் இல்லை, தமிழ்நாட்டு நிதி கூட முறையான ஒதுக்கப்படவில்லை -அமித்ஷாவை விமர்சித்த முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (15-06-23)

அமித்ஷாக்கள் அறிக! 3

தஞ்சாவூர் - திருவாரூர், மதுரை - இராமேஸ்வரம் உள்பட தமிழகத்திலுள்ள மீட்டர்கேஜ் ரயில்பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதை களாக மாற்றிட அனுமதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

* தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் பயன்பெறும் வகையில், சென்னை – புதுடெல்லி 'ஏழைகளின் ரதம்' முழு ஏ.சி. வசதியுடன், வாரம் ஒருமுறை செல்லும் அதிவேக விரைவு ரயில், சென்னை - கோவை விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, மதுரை - திருப்பதி விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, சென்னை - மங்களூர் விரைவு ரயில் வாரம் மூன்று முறை செல்வது, சென்னை - திருவனந்தபுரம் அதிவேக விரைவு ரயில் தினமும் செல்வது, சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, சென்னை எழும்பூர் - நாகர்கோயில் விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, புதுச்சேரி - புவனேஸ்வர் விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, சென்னை - பிளாஸ்பூர் விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது, பெங்களூரு - டார்பங்கா விரைவு ரயில் வாரம் ஒருமுறை செல்வது. சென்னை - இராமேசுவரம் அகல ரயில் பாதையில் தினமும் செல்லும் புதிய ரயில் எனப் பல்வேறு புதிய ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

சிறப்பு திட்டங்கள்தான் இல்லை, தமிழ்நாட்டு நிதி கூட முறையான ஒதுக்கப்படவில்லை -அமித்ஷாவை விமர்சித்த முரசொலி

பயண தூரம் நீட்டிக்கப்பட்ட ரயில்கள் சென்னை வாரணாசி விரைவு ரயில் வாரம் நான்கு நாள்கள் செல்வது, இரண்டு நாள்கள் சாப்ரா வரையிலும், ஜெய்ப்பூர் - சென்னை விரைவு ரயில் கோவை வரையிலும், திருச்சி - கும்பகோணம் பயணிகள் ரயில் மயிலாடுதுறை வரையிலும், மைசூர் - கும்பகோணம் விரைவு ரயில் மயிலாடுதுறை வரையிலும், திருச்சி - தஞ்சாவூர் பயணிகள் ரயில் மயிலாடுதுறை வரையிலும், மதுரை மானாமதுரை பயணிகள் ரயில் ராமேஸ்வரம் வரையிலும், இவ்வாறாக, இதுவரை இல்லா அளவுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் ரயில் போக்குவரத்து வசதிகள் தமிழகத்தில் பெருகியுள்ளன.

1,828 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 90 ரயில்வே மேம்பாலங்களைக் கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதித்து, இதுவரை 19 கோடி ரூபாய் செலவில் மதுரை எல்லீஸ் நகர் மேம்பாலம், 9 கோடியே 50 லட்சம் ரூபாய் செல வில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே மேம்பாலம், 16 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு அருகே ஊத்துக்குளி மற்றும் திம்மநாயக்கன் பாளையம் அருகே இரண்டு மேம்பாலங்கள், 18 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மற்றும் ஓமலூர் அருகே இரண்டு மேம்பாலங்கள், 29 கோடி ரூபாய் செலவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம், திருப்பத்தூர் மற்றும் அரக்கோணம் அருகே மூன்று மேம்பாலங்கள், 40 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் சென்னை கத்திவாக்கம் மற்றும் மடுவங்கரை அருகே இரண்டு மேம்பாலங்கள்: 32 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் மற்றும் வாளாங்குளம் அருகே இரண்டு மேம்பாலங்கள், 7 கோடி ரூபாய் செலவில் மதுரை மாவட்டம் கோவில்பட்டி அருகே மேம்பாலம், 11 கோடி ரூபாய் செலவில் திருச்சி பாலக்கரை மேம்பாலம். 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கரூர் நகரில் மேம்பாலம்; 9 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மதுரை கூடல்நகர் அருகே மேம்பாலம், 17 கோடி ரூபாய் செலவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மேம்பாலம் என 223 கோடி ரூபாய் செலவில் 18 ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய இரயில்வே மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

* ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நீதியுதவியுடன், ரூ.14,400 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம்.

* தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை யாகிய ரூ.1,330 கோடி மதிப்பீட்டிலான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* 57 கோடி ரூபாய் செலவில் 6 ஹெக்டேர் நிலப்பரப்பில், தூத்துக்குடி துறைமுகத்தில் 9வது தளம் அமைக்கப்பட்டு, 14.07.2008 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

* திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. * ரூ.245 கோடி முதலீட்டில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் சென்னையில் 31.12.2008 தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு திட்டங்கள்தான் இல்லை, தமிழ்நாட்டு நிதி கூட முறையான ஒதுக்கப்படவில்லை -அமித்ஷாவை விமர்சித்த முரசொலி

* ஆசியாவிலேயே முதலாவதாகச் சென்னைக்கு அருகில் பலவகை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம்.

* சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.).

* திருப்பெரும்புதூரில் 4,821 ஏக்கர் நிலப்பரப்பில் இந்திய வானூர்தி ஆணையத்தின்மூலம் புதிதாக மற்றுமொரு பன்னாட்டு விமான நிலையம் ‘கிரீன்பீல்டு விமான நிலையம்' என்னும் பெயரில் அமைத்திட ஒப்புதல் தரப்பட்டது.

* அதி நவீன விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் மேம் படுத்தப்பட்டுள்ளது. 128 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் மதுரை விமான நிலையத்தினை விரிவாக்கி, நவீனமயமாக்கிடும் நோக்கில் ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் கட்டுவதற்கும், கூடுதல் விமான நிறுத்துத்தளம் அமைப்பதற்கும் 26.04.2008 அன்று அடிக்கல் நாட்டப் பட்டு. பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

* ஒன்றிய அரசின் உதவியுடன் கோவை விமான நிலைய விரிவாக்கம், வேலூர் விமான நிலைய மேம்பாடு ஆகியவற்றுடன், தூத்துக்குடியில் புதிதாக விமான நிலையம் அமைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.

- இவை அனைத்தும் 2004-2009 ஆட்சிக் காலத்தில் செய்து தரப்பட்ட பணிகள் ஆகும். இதில் இருப்பவை பெரும்பாலும் சிறப்புத் திட்டங்கள்தான். சாலைகள், ரயில் பாதைகளை வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் என்று சொன்னால் மற்றவை அனைத்தும் தமிழ்நாட்டுக்காக சிறப்பாகச் செய்து தரப்பட்ட சிறப்புத் திட்டங்கள் ஆகும். இது போலத்தான் என்னென்ன செய்துள்ளீர்கள் என்று கேட்கிறோம்.

ஆனால், ஏராளமான நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளதாக புள்ளிவிபரம் சொல்லி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அவர்கள். அதுவாவது சரியானதா? முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. அதனையும் காண்போம்.

தொடரும்..

banner

Related Stories

Related Stories