முரசொலி தலையங்கம்

”உயிர்கள் பலியான நேரத்திலும் விஷம அரசியல் செய்யும் பழனிசாமி”.. முரசொலி கடும் தாக்கு!

விஷச் சாராயம் அருந்தி உயிர்கள் பலியான நேரத்திலும் விஷம அரசியல் செய்கிறார் பழனிசாமி.

”உயிர்கள் பலியான நேரத்திலும் விஷம அரசியல் செய்யும் பழனிசாமி”.. முரசொலி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (19-05-2023)

விஷச் சாராயமும் விஷம அரசியலும் 1

விஷச் சாராயம் அருந்தி உயிர்கள் பலியான நேரத்திலும் விஷம அரசியல் செய்கிறார் பழனிசாமி. இறந்த உயிர்களைப் பார்த்துவிட்டு. அவருக்கு சோகம் வரவில்லை. கொக்கரித்திருக்கிறார். தி.மு.க. ஆட்சி இரண்டு ஆண்டுகளாக எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லையாம். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாசலில் நின்று கொண்டு ‘வீல்வீல்' என்று கத்தி இருக்கிறார் பழனிசாமி. கள்ளச்சாரா யம், போலி மதுபான விற்பனையில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்.

"எங்கள் ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தோம். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விட்டார்கள். கள்ளச்சாராயம்தான் ஓடுகிறது” என்று பொய்களை அவிழ்த்துவிட்ட பழனிசாமி, மதுவுக்கு எதிரான சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதும் பாய்ந்திருக்கிறார். அவர்கள் எங்கே போனார்கள் என்று கேட்கிறார். இவரைப் போல பிணவரசியல் செய்ய வரவில்லை என்று வருந்தி இருக்கிறார் பழனிசாமி.

பத்து ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராய மரணமே நடக்க வில்லை என்கிறார் பழனிசாமி. 2020ஆம் ஆண்டு பழனிசாமி முதல மைச்சராக இருந்தபோது கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20. NCRB அறிக்கை சொல்கிறது. இவர்தான் சட்டையை மடித்துவிட்டுக் கொண்டு கையையும் வாயையும் உருட்டுகிறார்.

2020 ஏப்ரல் 13 அன்று கொரோனாவுக்கு பலி 11தான். ஆனால் கள்ளச்சாராயத்துக்கு பலி 13 என்று செய்திகள் வெளியான ஆட்சி பழனிசாமி ஆட்சி. நாகையில் கள்ளச்சாராயம் விற்றதாக அ.தி.மு.க. பெண் பிரமுகரே கைது ஆனார் 2019 பழனிசாமி ஆட்சியில். நாகை எடகுடி வடபாதி கிராமத்தின் வீட்டின் பின்புறம் உள்ள வைக்கோல் போரில் 47 கேன்களை பதுக்கி வைத்திருந்தார் அஞ்சம்மா. இவரிடம் இருந்து 1645 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, வைத்தீஸ்வரன் கோவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். சாராய உற்பத்தி செய்துள்ளார்.

”உயிர்கள் பலியான நேரத்திலும் விஷம அரசியல் செய்யும் பழனிசாமி”.. முரசொலி கடும் தாக்கு!

சாராய பாக்கெட்டுகளை சாலைகளில் போட்டு பொதுமக்கள் போராட் டம் நடத்தியது பழனிசாமி ஆட்சியில். திருவாரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் 4 பேர் பலியானதும் 2018 பழனிசாமி ஆட்சி யில்தான். இவற்றை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து போக்கு காட்டுகிறார்.

இந்தச் சம்பவம் பற்றிய செய்தி கிடைத்ததும் உடனடியாக விழுப்புரம் மாவட்டத்துக்குச் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு பவர்களைப் பார்த்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கினார். சிகிச்சை பெற்று வருபவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரணை நடத்த சி.பி. சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார் முதலமைச்சர். 'கள்ளச்சாராய விற்பனையை முழுமையாகத் தடுப்போம். இந்த விற்பனையைக் கண்காணிக்கத் தவறியவர்கள் மீதும் இந்த அரசு தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும்' என்று ஊடகங்களுக்கு முன்னால் | உறுதி அளித்தார் முதலமைச்சர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய காவல்துறை உயரதிகாரி முதல் மதுவிலக்கு ஆய்வாளர் வரை அனைவரையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளது அரசு. சாராய வியாபாரிகள், தொழிற்சாலைக்கு வைத்திருந்ததைக் கொடுத்தவர்கள் எனப் பலரும் கைதாகி இருக்கிறார்கள்.

உயரதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டிய முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு வாரமும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இப்படி வேகமான நடவடிக்கை களை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. இதை அறிந்து கொள்ள முனைய வில்லை பழனிசாமி. கட்டுப்படுத்துவதற்கு அவர் கைவசம் ஆலோச னைகள் இருந்தால் சொல்லலாம். அதைவிட்டுப் பேசுகிறார்.

முதலில் என்ன விவகாரம் என்றே பழனிசாமி அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அதனைக் குடித்து இந்த மரணங்கள் ஏற்படவில்லை. எனவே இது கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்த மரணங்கள் அல்ல. இது குறித்து காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு விளக்கமான அறிக்கையைக் கொடுத்திருக்கிறார்.

”உயிர்கள் பலியான நேரத்திலும் விஷம அரசியல் செய்யும் பழனிசாமி”.. முரசொலி கடும் தாக்கு!

* பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை போலீஸார் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி இருந்தார்கள். உயிர்ப்பலிக்குக் காரணம் கள்ளச் சாராயம் அல்ல.

மெத்தனால் கலந்த விஷச்சாராயம் என்பது தெரிய வந்துள்ளது.

* இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல. ஆலைகளில் பயன் படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் ஆகும்.

* தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப் பட்டதாலும், அண்டை மாநிலங்களுக்கு கள்ளச் சாராயம் கடத்தப்படுவது தீவிரமாகக் கண்காணிக்கப் படுவதாலும் சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில் தொழிற்சாலைகளில் இருந்து விஷச்சாராயத்தைத் திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது - என்பதை விளக்கமாக டி.ஜி.பி. சொல்லி இருக்கிறார்.

சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச் சாராயமும். மரக்காணத்தில் விற்கப் பட்ட விஷச்சாராயமும் ஒரே இடத்தில் இருந்து வந்துள்ளது. இதனைக் கொடுத்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எந்தத் தொழிற்சாலையில் இருந்து வந்ததோ அவர்களும் கைது செய்யப்பட்டு விட்டார்கள். ஆனாலும் பழனிசாமி, கள்ளச்சாராயம் என்கிறார்.

- தொடரும்

banner

Related Stories

Related Stories