முரசொலி தலையங்கம்

இந்து - இந்தி - இந்தியா.. மழுங்கி வரும் பா.ஜ.கவின் ஒற்றை எதேச்சதிகாரம்: முரசொலி தாக்கு!

பா.ஜ.க.வின் ஒற்றை எதேச்சதிகார மேலாண்மை முனை மழுங்குவது இதனால்தான்.

இந்து - இந்தி - இந்தியா.. மழுங்கி வரும் பா.ஜ.கவின் ஒற்றை எதேச்சதிகாரம்: முரசொலி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (17-05-2023)

கர்நாடகாவும் வழிகாட்டியது 2

எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இலவசங்களை அள்ளி இறைத்தது கர்நாடக பா.ஜ.க. 'இலவசங்கள்தான் வளர்ச்சிக்கு தடை' என்று அதே கர்நாடகாவில் பிரச்சாரமும் செய்தார் பிரதமர்.

* ஏழைக் குடும்பங்களுக்கு தினமும் அரை லிட்டர் பால்

* ஆண்டுக்கு 3 சமையல் கியாஸ் சிலிண்டர் இலவசம்

* 5 கிலோ சிறுதானியங்கள் இலவசம்

* அடல் ஆகாரகேந்திரா சார்பில் குறைந்தவிலையில் உணவு.

* படித்த இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை

* மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை என்று அறிவித்தது கர்நாடக பா.ஜ.க.

கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் (வங்கிகள், பள்ளி - கல்லூரிகள், தொழில்துறை நிறுவனங்கள்) அனைவருக் கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் மற்றும் ராம்நகராவில் ராமர் கோவில் கட்டப்படும், பெங்களூர் மெட்ரோ விரிவாக்கம் என பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் கடந்த மார்ச் மாதம் பசவராஜ் பொம்மை வெளியிட்டார். ஆனால் முந்தைய சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை பா.ஜ.க. ஆட்சி என்று கர்நாடக காங்கிரசு கட்சி குற்றம் சாட்டியது.

காதில் பூ வைத்தபடி சட்டமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பங்கெடுத்தார். “கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியில் அளித்த எந்த திட்டங்களையும் இதுவரை நிறைவேற்றவில்லை... அதேபோல், கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்றாமல் மக்களை பா.ஜ.க. அரசு ஏமாற்றிவிட்டதை சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காதில் பூ வைத்துக்கொண்டு அவை நடவடிக்கையில் பங்கேற் கிறோம்” என்று சித்தராமையா சொன்னார்.

இந்து - இந்தி - இந்தியா.. மழுங்கி வரும் பா.ஜ.கவின் ஒற்றை எதேச்சதிகாரம்: முரசொலி தாக்கு!

2018 தேர்தல் அறிக்கையில் 600 வாக்குறுதிகளை அளித்த பா.ஜ.க. அதில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியிருப்பதாகவும் சித்தராமையா சொன் னார். இது மட்டுமல்ல, அகில இந்திய அளவில் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி களும் கர்நாடக தேர்தலில் விவாதப் பொருள் ஆனது.

2014 ஆம் ஆண்டு இந்திய அளவில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.. பல வாக்கு றுதிகளை அளித்தது. அதில் முக்கியமான வாக்குறுதிகளை 2023 ஆம் ஆண்டு வரைக்கும் நிறைவேற்ற வில்லை.

* ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை

* வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கறுப்புப்பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம்.

* விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆகும்.

* 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும்.

* வளர்ச்சியில் மூன்னேறும்.

* அனைத்துப் பொருள்களும்

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

* இறக்குமதியே இருக்காது.

* இந்தியா மீது அந்நிய நாடுகள் தாக்குதல் நடத்தாது.

* மாநிலங்கள் மறுமலர்ச்சி பெறும்.

*கறுப்புப் பணம் ஒழியும்.

* கள்ளநோட்டு இருக்காது.

* வாராக்கடனை வசூலித்து முடிப்பேன்.

* அவசியப் பொருட்களின் விலையை முழுமையாகக் கட்டுப்படுத்துவேன்.

* அரசியல் தலையீடு இல்லாமல் புலனாய்வு அமைப்புகள் செயல்படும்.

* எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்.

* அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

* பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வரி நடைமுறை எளிமைப்படுத்தப்படும்.

* மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி அதிகாரம் வழங்கப்படும்

இவை அனைத்தும் மோடி கொடுத்த வாக்குறுதிகள். இதில் எதையெல் லாம் நிறைவேற்றிக் காட்டினேன் என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிடவே இல்லை. மாறாக, அழுகாச்சி காவியம் பாடினார்.

இந்து - இந்தி - இந்தியா.. மழுங்கி வரும் பா.ஜ.கவின் ஒற்றை எதேச்சதிகாரம்: முரசொலி தாக்கு!

“நான் நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறேன். ஆனால் என்னை குழி தோண்டி புதைப்பதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது. எனக்கு கல் லறை தோண்டுவதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது. அதைப் பற்றியே சிந்திக்கிறது. ஆனால் இந்திய மக்களின் ஆசி எனக்கு உள்ளது” என்று மாண் டியா மாவட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி. அதா வது தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய மிதப்பில் இப்படி பேசினார் பிரதமர். ஆனால் கர்நாடகாவில் ஆசி இல்லை என்பதை அம்மாநில மக்கள் தங்களது தேர்தல் முடிவுகளின் மூலமாகக் காட்டி விட்டார்கள்.

பா.ஜ.க. அடைந்து வரும் தொடர் தோல்விகளே கர்நாடகாவிலும் தொடர்ந் துள்ளது. கடந்த ஏழு ஆண்டு காலத்தில் பல்வேறு மாநில சட்டசபைத் தேர்த லில் பா.ஜ.க. தோல்வியை அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தோல்வி, கேரளா வில் தோல்வி, பீகாரில் தோல்வி,மேற்கு வங்கத்தில் தோல்வி, ஜார்கண்ட் மாநிலத்தில் தோல்வி, ஒடிசாவில் தோல்வி, சட்டீஸ்கரிலும் தோல்வி, தெலுங் கானாவில் தோல்வி, ஆந்திராவில் தோல்வி. பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு முறை தோல்வி, டெல்லியில் இரண்டு முறை தோல்வி, ராஜஸ்தானில் தோல்வி என சட்டமன்றத் தேர்தல்களில் தோற்ற கட்சிதான் பா.ஜ.க.

மத்தியப் பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் மிசோரத்திலும், நாகாலாந் திலும், மேகாலயாவிலும் குதிரைப் பேரத்தின் மூலமாக ஆட்சியில் அமர்ந்துள் ளது பா.ஜ.க.

முழுபலத்துடன் ஆட்சியில் இருப்பது உத்திரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், அருணாசலப்பிரதேசம், அசாம், மணிப்பூர், கோவா, உத்தர காண்ட் ஆகிய மாநிலங்கள் மட்டும் தான். இதை வைத்துத்தான் பா.ஜ.க.வை வடமாநிலக் கட்சி மட்டுமே என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் சொல்வார்.

தென்மாநிலங்கள் முழுக்க பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தென் மாநிலங்களுக்கு எந்தத் திட்டமும் வராததற்குக் காரணம். 'இவர்கள்தான் நமக்கு வாக்களிப்பது இல்லையே' என்ற எண்ணம்தான். மானம் போகும் அளவுக்கு கேவலப்படுத்திய பிறகும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்காமல் இருப்பதற்கும் இந்த மனோபாவம் தான் காரணம். அதற் காக வடமாநிலங்களை செழிக்க வைத்துவிட்டார்களா என்றால் அதுவும் இல்லை. இந்து இந்தி இந்தியா என்று பேசினால் வடமாநிலத்துக்கு போதும் என்று நினைக்கிறது பா.ஜ.க. ஆனால், தென்னகத்தில் மண்ணும் மக்களும் பண் பாடும் பேசியாக வேண்டும். பா.ஜ.க.வின் ஒற்றை எதேச்சதிகார மேலாண்மை முனை மழுங்குவது இதனால்தான்.

'திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது’ என்று தி.மு.க. தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். 'இந்தியா முழுமைக்கும்' என்று சொல்லும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதையே கர்நாடக தேர்தல் முடிவுகள் சொல்லி இருக்கின்றன.

banner

Related Stories

Related Stories