முரசொலி தலையங்கம்

“ஆரியத்துக்கு வேட்டு வைத்ததுதான் ‘திராவிடத்தின்’ தொடக்கம்.. ஆளுநருக்கு அதுதான் கலக்கம்..” - முரசொலி !

சூத்திரன் என்ற சொல்லாடல் ஆதியில் இருந்தது என்பதற்கு ‘மநுஸ்மிருதி’ ஆதாரம் ஒன்றே போதும். மன்னராட்சி காலத்தில் தமிழ் மன்னர்களையே ஏமாற்றி வைத்திருந்தது ஆரியம்.

“ஆரியத்துக்கு வேட்டு வைத்ததுதான் ‘திராவிடத்தின்’ தொடக்கம்.. ஆளுநருக்கு அதுதான் கலக்கம்..” - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திராவிடப் பண் பாடுவோம் -2

‘திராவிடம்’ என்ற சொல் குறித்த புரிதல் ஆளுநருக்கு இல்லை. இதனை வெற்று முழக்கமாக அவர் நினைக்கிறார். இது வெற்றி முழக்கமாக 100 ஆண்டுகளாக இருக்கிறது. இரா.இராகவய்யங்கார், தான் எழுதிய ‘தமிழ் வரலாறு’ நூலில், “வடமொழியாளர், த்ரமிளர் எனத் தமிழ்மொழியாளரையும், த்ரமிளம், த்ராவிடம் என அவர் நாட்டினரையும் மொழியினரையுங் குறித்தனர் என்பது உண்மை” என்கிறார். இச்சொல்லை அடிமைப்படுத்தும் சொல்லாக ஆரியம் பயன்படுத்தியது. அதனையே அரசியல் சொல்லாக மாற்றினார் தந்தை பெரியார்.

‘எவ்வினையு மோப்புதலாற் றிராவிட மென்றியல் பாடை’ என்று காஞ்சிபுராணத்தில் வருகிறது திராவிடம். “........ வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்கிறார் தாயுமானவர். இப்படி தமிழ் இலக்கியத்தில் உள்ளதுதான் திராவிடம் என்ற சொல் ஆகும். தமிழ் என்ற மொழியையும், ஒரு தேசத்தையும் குறிப்பதுதான் திராவிடம் என்ற சொல் என்று சதுரகராதி, யாழ்ப்பாண அகராதி, தரங்கம்பாடி அகராதி ஆகியவை சொல்கின்றன. சத்தியகுலத்தைச் சேர்ந்த அடித்தட்டு மனிதனாக திராவிடரை அடையாளப்படுத்துகிறது யாழ்ப்பாணம் அகராதி. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெயரகராதியும் இதையே சொல்கிறது. ‘ஆந்திர கருநாடக தேசங்களுக்குத் தெற்கேயுள்ள தேசம்’ என்கிறது.

அபிதானசிந்தாமணியைத் தொகுத்த ஆ.சிங்காரவேலு, ‘தமிழ், ஆந்திரம், கன்னடம், மகாராஷ்டிரம், கூர்ச்சரம் - தட்சிணத்திலிருந்து கன்னியாகுமரி ஈறாக உள்ள தேசம்’ என்கிறார். ‘தமிழுக்கு ஆரியரிட்ட ஒரு பெயர்’ என்று சொன்னதும் இவர்தான். திராவிடம் என்றால் தமிழ் மொழி என்கிறது இலக்கியச் சொல்லகராதி. இதனையே நா.கதிரை வேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதியும், வெள்ளிவிழாப் பேரகராதியும் உறுதி செய்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொடகு, கோடா ஆகிய தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்கிறது மதுரைத் தமிழ்ப் பேரகராதி. நான்கு சாதியில் ஒன்று என்கிறது இந்நூல்."

“ஆரியத்துக்கு வேட்டு வைத்ததுதான் ‘திராவிடத்தின்’ தொடக்கம்.. ஆளுநருக்கு அதுதான் கலக்கம்..” - முரசொலி !

“தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கும் திராவிட மொழிகளில் முக்கியமானவை. ஆரியர் முற்காலத்தில் தென்னாடு சென்ற தஸ்யுக்களைத் திராவிடரென அழைத்து வந்தனரென்றும், அதிலிருந்தே அவரது மொழி திராவிடமெனும் பெயர் பெற்றதென்றும் திராவிடத்தின் திரி சொல்லாகக் கால அளவில் முறையே திராமிட, திராமிள, தமிள, தமிழ் என மாறிற்றென்றும் சிலர் கருதினர்” என்கிறது தமிழ்நாட்டுக் கலைக் களஞ்சியம். Dravidian - திராவிடர், திராவிட மொழி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளின் குழுவில் ஒரு மொழி. திராவிட, திராவிட இனத்துக்குரிய, திராவிடருக்குரிய - என்கிறது சென்னைப் பல்கலைக் கழக அகராதி.

செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியத்தில் செந்தமிழ் செம்மல் இரா.இளங்குமரனார், திராவிடம் என்பதை தமிழ் என்பதைச் சொல்ல முடியாத ஆரியர் த்ரமிள, த்ரமிடம், திராவிடம் என்றனர். தமிழ் என்பதற்குரிய ழ அல்லது ழகர ஒற்று ஆங்கிலத்திலோ வடமொழியிலோ இல்லை என்கிறார். இப்படி வரலாற்றின் தொடர்ச்சியாக இடமாக, இனமாக, மொழியாக, அரசியலாக, கொள்கையாக இருந்து வரும் சொல்தான் திராவிடம் ஆகும்.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

அத்திலக வாசனைபோல் அனைத்துலக இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே – - உன்

சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து

வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே - என்ற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலிலும் ‘திராவிட நல் திருநாடும்’ இருக்கிறது.

“ஆரியத்துக்கு வேட்டு வைத்ததுதான் ‘திராவிடத்தின்’ தொடக்கம்.. ஆளுநருக்கு அதுதான் கலக்கம்..” - முரசொலி !

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே

பாரத பாக்ய விதாதா.

பஞ்சாப சிந்து குஜராத மராத்தா

திராவிட உத்கல வங்கா.

விந்திய இமாசல யமுனா கங்கா

உச்சல ஜலதி தரங்கா.

தவ சுப நாமே ஜாகே,

தவ சுப ஆஷிஷ மாகே,

ஜாஹே தவ ஜெய காதா.

ஜன கண மங்கள தாயக ஜெயஹே

பாரத பாக்ய விதாதா.

ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,

ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே. - என்ற நாட்டுப் பண்ணிலும் திராவிட இருக்கிறது.

எதை வைத்து காலாவதி ஆகிவிட்டது என்கிறார் ஆளுநர்?

தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் சூத்திரர்கள் என்ற கருதுகோளை விதைத்தது மனு. அதன் 10 ஆவது அத்தியாயம் 44 ஆவது சூத்திரத்தில் தமிழகம் என்பது திராவிடம் என்றே அழைக்கப்படுகிறது. ‘’பெளண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தநதம், கசம் இத்தேசங்களை யாண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திரராய்விட்டார்கள்” என்கிறது மனு.

“ஆரியத்துக்கு வேட்டு வைத்ததுதான் ‘திராவிடத்தின்’ தொடக்கம்.. ஆளுநருக்கு அதுதான் கலக்கம்..” - முரசொலி !

யார் சூத்திரர் என்றும் எட்டாவது அத்தியாயம் 415 ஆவது சூத்திரத்தில் கீழ்மைத் தன்மைகள் அனைத்தையும் பொருத்தி அடையாளப்படுத்தியதும் மனுவே.

சூத்திரர்கள் என்ற இழிவுபடுத்தப்பட்டவர்கள் திராவிடர்கள். தமிழர்களே, திராவிடர்கள் என அழைக்கப்பட்டார்கள். அதனால்தான் சூத்திரர் கழகம் - திராவிடர் கழகம் என்ற இரண்டில் எந்தப் பெயரை வைக்கலாம் என்ற போது திராவிடர் கழகம் என்ற பெயரைத் தேர்வு செய்ததாக பெரியார் சொல்கிறார். திராவிடர் கழகம் என்ற பெயர் சூட்டாமல் போனால், சூத்திரர் கழகம் என்றே தான் வைத்திருப்பேன் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

சூத்திரன் என்ற சொல்லாடல் ஆதியில் இருந்தது என்பதற்கு ‘மநுஸ்மிருதி’ ஆதாரம் ஒன்றே போதும். அதனை நீட்டத் தேவையில்லை. அந்த சூத்திரர் பழி, எல்லா நூற்றாண்டுகளிலும் தொடர்ந்தது. மன்னராட்சி காலத்தில் தமிழ் மன்னர்களையே ஏமாற்றி வைத்திருந்தது ஆரியம். காலனியாதிக்க காலத்திலும் கரைந்து போகாமல் காத்துக் கொண்டது ஆரியம். இதற்கு வேட்டு வைத்ததுதான் ‘திராவிடத்தின்’ தொடக்கம். ஆளுநருக்கு அதுதான் கலக்கம்.

– தொடரும்..

banner

Related Stories

Related Stories