முரசொலி தலையங்கம்

‘வாரிசு அரசியல்’ என்ற மொண்ணைக் கத்தியை வைத்து கம்பு சுத்தி வரும் அமித்ஷா.. முரசொலி விளாசல்!

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பா.ஜ.க. பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறது.

‘வாரிசு அரசியல்’ என்ற மொண்ணைக் கத்தியை வைத்து கம்பு சுத்தி வரும் அமித்ஷா.. முரசொலி விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (14-04-2023)

பா.ஜ.க.வின் வாரிசு அரசியல்!

காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி ஒரு கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டு வருகிறார். ‘அதானி குழுமத்துக்கு 20 ஆயிரம் கோடி முதலீடு வந்ததே. இது யாருடைய பினாமி பணம்?’ என்பதுதான் ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி ஆகும். இதற்கு பா.ஜ.க. தலைமை பதில் அளிக்கவில்லை. ‘எப்போதெல்லாம் பிரதமர் வெளிநாடு செல்கிறாரோ, அப்போதெல்லாம் அந்த நாட்டில் அதானி தொழில் தொடங்குவதன் மர்மம் என்ன?’ என்பதும் ராகுல் கேட்டு வரும் கேள்விகள். இதற்கு பிரதமரும் பதில் அளிக்கவில்லை. மற்ற ஒன்றிய அமைச்சர்களும் பதில் அளிக்கவில்லை. நாடாளுமன்றத்தையே செயல்பட விடாமல் தடுத்துவிட்டார்கள்.

ஆனாலும் மக்கள் மன்றத்தில் இந்தக் கேள்வியானது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவற்றுக்கு பதில் அளிக்க மறுக்கும் பா.ஜ.க. தலைமையானது, ‘வாரிசு அரசியல்’ என்ற மொண்ணைக் கத்தியை நீட்டுகிறது.

பிரதமரும், உள்துறை அமைச்சரும் தங்கள் கட்சி வாரிசு அரசியலுக்கு எதிரானது என்று பேசி இருக்கிறார்கள். ‘காங்கிரசு கட்சிக்கு ஒரே நோக்கம் வாரிசு அரசியல்தான்’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருக்கிறார். பா.ஜ.க.வில் கோலோச்சும் வாரிசுகள் குறித்து பலமுறை எழுதி இருக்கிறோம்.

« வேத்பிரகாஷ் கோயல், ஒன்றிய அமைச்சராக இருந்தார். அவரது மனைவி சந்திரகாந்த் கோயல், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர்களது மகன் தான் இன்றைய ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் ஆவார்!

«தேபேந்திர பிரதான், முன்பு ஒன்றிய அமைச்சராக இருந்தார். அவரது மகன் தான் இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான்.

‘வாரிசு அரசியல்’ என்ற மொண்ணைக் கத்தியை வைத்து கம்பு சுத்தி வரும் அமித்ஷா.. முரசொலி விளாசல்!

«முன்னாள் ஒன்றிய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகனான ஜோதிராதியத்ய சிந்தியா, இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.

«கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எஸ்.ஆர்.பொம்மை அவர்களின் மகன் தான் இன்று கர்நாடக முதலமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மை.

«இமாசலப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர் பிரேம்குமார் துமால். அவரது மகனான அனுராக் தாகூர், இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.

«கைலாஷ் விஜய்வர்க்கியா என்பவர் பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளராக இருந்தார். அவரது மகன் தான் இன்று மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஆகாஷ் விஜய்வர்க்கியா.

«மத்தியபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வீரேந்திர சக்லேச்சாவின் மகன் ஓம் பிரகாஷ் சக்லேச்சா இன்று மத்திய பிரதேசத்தில் அமைச்சராக இருக்கிறார்.

«ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சரான வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங், இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

«ர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

«மேனகா காந்தி மகன் வருண் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

‘வாரிசு அரசியல்’ என்ற மொண்ணைக் கத்தியை வைத்து கம்பு சுத்தி வரும் அமித்ஷா.. முரசொலி விளாசல்!

«முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிசிர் அதிகாரியின் மகன் தான் இன்று மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.

«முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

«உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண்சிங்கின் மகன் ராஜ்வீர் சிங், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

«ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மகன் பங்கஜ் சிங், உ.பி.மாநில எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

«முன்னாள் ஒன்றிய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் ப்ரீத்தம் முண்டே, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

«முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.பி.தாகூரின் மகன் விவேக் தாகூர் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்.

– இவை எல்லாம்தான் வாரிசு அரசியலுக்கு எதிராக போராடும் பா.ஜ.க.வின் வீரம் ஆகும்.

இந்த வாரத்தில் நடந்த இரண்டு செய்திகள் என்ன தெரியுமா?

ஒன்று : பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்து மறைந்த சுஸ்மா சுவராஜ் அவர்களின் மகள் பன்சூரி ஸ்வராஜ்க்கு பா.ஜ.க.வில் டெல்லி மாநில சட்டப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கடந்த 7 ஆம் தேதி தரப்பட்டுள்ளது. பிரதமருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பன்சூரி நன்றி தெரிவித்து இருக்கிறார்.

இரண்டு: கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அதில் போட்டியிட இருக்கும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதிலும் வாரிசுகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பது அமித்ஷாவுக்குத் தெரியுமா?

‘வாரிசு அரசியல்’ என்ற மொண்ணைக் கத்தியை வைத்து கம்பு சுத்தி வரும் அமித்ஷா.. முரசொலி விளாசல்!

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவில் தொகுதி தரப்பட்டுள்ளது. அமைச்சர் ஆனந்த் சிங் தன்மகன் சித்தார்த் சிங் என்பவருக்கு விஜயநகர் மாவட்டம் ஓசப்பேட்டை தொகுதியை வாங்கிக் கொடுத்துள்ளார்.

பெலகாவி மாவட்டம் ஹூக்கேரி தொகுதியில் போட்டியிடும் நிகில் கட்டி, மறைந்த அமைச்சர் உமேஷ் கட்டியின் மகன் ஆவார். உமேஷ் கட்டியின் சகோதரரான ரமேஷ் கட்டி, சிக்கோடி மாவட்டம் சடலகா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் துணை சபாநாயகர் ஆனந்த் சந்திரசேகர் மாமனியின் மனைவி ரத்னா மாமனி, சௌவ் தத்தி எல்லம்மா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்தவர்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர்தான் வாரிசு அரசியலுக்கு எதிரான யுத்தம் நடத்துகிறாராம்.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பா.ஜ.க. பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறது. அதைத் திசை திருப்ப இதைக் கையில் எடுத்துள்ளார்கள் என்பதையும் நாட்டு மக்கள் அறிவார்கள்!

banner

Related Stories

Related Stories