முரசொலி தலையங்கம்

“மார்ச் 1 : இந்திய அரசியல் வரலாற்றில் புதிய விடியலுக்கான நாளாக அமையப்போகிறது” - முரசொலி தலையங்கம் !

அகில இந்திய அணிச் சேர்க்கைக்கான அச்சார நாளாகவும் அது அமையப் போகிறது. இதற்கு முன்னோட்டமான பல நிகழ்வுகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எழுகின்றன.

“மார்ச் 1 :  இந்திய அரசியல் வரலாற்றில் புதிய விடியலுக்கான நாளாக அமையப்போகிறது” - முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒற்றுமையே வெற்றியைத் தரும்!

ஒற்றுமையின் குரலை அகில இந்திய அளவில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒலிக்கத் தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

மார்ச் 1 - திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள். அதனையொட்டிய மாபெரும் பொதுக் கூட்டத்துக்கு அகில இந்தியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது தி.மு.க. காங்கிரசு கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, உ.பி.யின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வீ ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

“மார்ச் 1 :  இந்திய அரசியல் வரலாற்றில் புதிய விடியலுக்கான நாளாக அமையப்போகிறது” - முரசொலி தலையங்கம் !

இதனையொட்டி தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அகில இந்திய அரசியல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. "நம்முடைய தலைவரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியமான விழாவாக மாற இருக்கிறது என்பதில் ஐயமில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான மாற்றங்களை விளைவிக்கப் போகும் மகத்தான பல்வேறு செயல்களுக்கு தொடக்கமாகவும் அமையப் போகிறது. இந்தியாவின் புதிய விடியலுக்கான பிறந்தநாளாகவும் அமையப்போகிறது” என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்கள்.

அகில இந்திய அணிச் சேர்க்கைக்கான அச்சார நாளாகவும் அது அமையப் போகிறது. இதற்கு முன்னோட்டமான பல நிகழ்வுகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எழுகின்றன. “எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரசையும் உள்ளடக்கிய வலுவான கூட்டணியை உருவாக்கினால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை எளிதில் வீழ்த்தி விடலாம்” என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

“மார்ச் 1 :  இந்திய அரசியல் வரலாற்றில் புதிய விடியலுக்கான நாளாக அமையப்போகிறது” - முரசொலி தலையங்கம் !

பீகார் தலைநகர் பாட்னாவில் இந்திய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்த விழா ஒன்றில் பங்கேற்று பேசிய ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார், பா.ஜ.க. ஆட்சியில் மதவாத பதற்றங்கள் அதிகரித்து விட்டதாக குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமைப் பயணம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பதாகக் கூறினார்.

நாட்டின் சுதந்திரத்தில் பங்களிப்பு இல்லாதவர்கள் இப்போது வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள் என்றும், அரசுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை ஒடுக்குவதற்கு புலனாய்வு அமைப்புகளை பயன் படுத்துகின்றனர் என்றும் நிதிஷ் குமார் சாடினார். பா.ஜ.க.வின் பிடியிலிருந்து நாட்டை மீட்க எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தாயாராக வேண்டும் என்றும், எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரசையும் உள்ளடக்கிய வலுவான உருவாக்கினால் பா.ஜ.க.வை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் என்றும் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

“மார்ச் 1 :  இந்திய அரசியல் வரலாற்றில் புதிய விடியலுக்கான நாளாக அமையப்போகிறது” - முரசொலி தலையங்கம் !

நிதிஷ் குமாரின் கருத்து குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "மக்களவைத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியது அவசியம்” என்றார். 'எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் ஒருங்கிணைக்க வேண்டும்' என்ற நிதிஷ் குமாரின் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது என்றும், காங்கிரஸுடன் இணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணி பா.ஜ.க.வை வீழ்த்தும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு வரும் 24 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சட்டீஸ்கரில் நடைபெற உள்ளதாகவும், இந்த மாநாட்டில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

“அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசு கட்சிக்கு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை காங்கிரசு கட்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது." என்றும் வேணுகோபால் சொல்லி இருக்கிறார்.

ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)

அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதற்கான கடமை சரத்பவார், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் யெச்சூரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கைகளில் உள்ளது என்று ப.சிதம்பரம் சொல்லி இருக்கிறார்.

வராத கட்சித் தலைவர்கள் பற்றி ராகுல் காந்தியிடம் கேட்டபோது, 'அவர்கள் தேர்தலின் போது வருவார்கள்' என்று சொன்னார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்று ராகுல் சொல்லி வருகிறார். ‘எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பா.ஜ.க.வையும் மோடியையும் வீழ்த்தமுடியும். அதற்கு கட்சிகளிடம் ஒரு திட்டம் இருக்க வேண்டும். வலது, இடது என்பதைத் தாண்டி அமைதி மற்றும் ஒற்றுமைக்காக ஒன்றிணைய வேண்டும். சரியான எதிர்க்கட்சிகளால் பாசிசத்தை நிச்சயமாக தோற்கடிக்க முடியும்” என்று ராகுல் இப்போது சொல்லி இருக்கிறார்.

“மார்ச் 1 :  இந்திய அரசியல் வரலாற்றில் புதிய விடியலுக்கான நாளாக அமையப்போகிறது” - முரசொலி தலையங்கம் !

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே சேலம் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியை மேடையில் வைத்துக் கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதைச் சொன்னார்கள். “ராகுல் காந்தி அவர்களே! தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாகத் திரட்டி ஓரணியாக ஆக்கி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிட்டோம். அதனால் தான் மகத்தான வெற்றியை பெற முடிந்தது. முழுமையான வெற்றியை பெற முடிந்தது. அதுபோல நீங்களும் அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்று சேருங்கள். அதுதான் என்னுடைய கோரிக்கை” என்று தி.மு.க. தலைவர் அவர்கள் அப்போது சொன்னார்கள். இதை அனைத்துத் தலைவர்களும் இப்போது சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.

இதுவே வெற்றியின் முதல்படி.

banner

Related Stories

Related Stories