முரசொலி தலையங்கம்

“மொழி என்பது வெறும் கருவி அல்ல - நம் குருதி ஆகும்..” மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் ! - முரசொலி

மொழி என்பது வெறும் கருவி அல்ல - நம் குருதி ஆகும். அதனால் தான் மொழிப்போர்த் தியாகிகள் நாளை இன்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

 “மொழி என்பது வெறும் கருவி அல்ல - நம் குருதி ஆகும்..” மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் ! - முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சனவரி 25 - மொழிப்போர்த் தியாகிகள் நாள்! மொழிக்காக மொழியைக் காக்க தமிழ்த் தீரர்கள் தங்களது உயிரையே வழங்கியதன் நினைவாகக் கொண்டாடப்படும் திருநாள்!

அந்தத் தியாகிகளைப் போற்றுவதன் மூலமாக - மொழியைக் காக்கும் உணர்வில் உணர்ச்சியில் நாங்களும் எங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ளோம் என்பதை உலகுக்கு உணர்த்தும் நாள்!

உலகில் எந்த நாட்டு - இனம் - மொழிக்காரர்களும் - தங்கள் மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரையே தந்திருப்பார்களா என்றால் இருக்காது. அதற்காக அவர்களுக்கு மொழிப்பற்று இருக்காது என்பதல்ல பொருள். பற்றைத் தாண்டிய உணர்ச்சி என்பது நம்முடைய இரத்தத்தோடு இணைந்தது ஆகும்.

மொழி என்பது வெறும் கருவி அல்ல - நம் குருதி ஆகும். அதனால் தான் மொழிப்போர்த் தியாகிகள் நாளை இன்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

 “மொழி என்பது வெறும் கருவி அல்ல - நம் குருதி ஆகும்..” மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் ! - முரசொலி

இந்தி மொழியைத் திணிப்பதன் மூலமாக தங்களது மொழியை இந்தியாவின் பொதுமொழியாக்கி - அந்த மொழி பேசுபவர்களை பெரும் பான்மை மனிதர்கள் ஆக்கி - ஆதிக்கம் செலுத்துவதற்கு நினைக்கிறார்கள். அதே நேரத்தில், இந்தி பேசாத மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாகவும் ஆக்கப் பார்க்கிறார்கள்.

இந்தி பேசும் மக்களுக்கே கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம், நிர்வா கம் ஆகியவைகளைத் தாரை வார்க்கப் பார்க்கிறார்கள். மற்ற மொழி பேசுபவர்களை இதில் இருந்து துடைத்தெறியப் பார்க்கிறார்கள்.

இந்தியைப் புகுத்துவது என்பது தமிழை அழிப்பதற்காக மட்டுமல்ல; தமிழ்ப் பண்பாட்டையும் அழிப்பது ஆகும். அதனால்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை. “அரசியல் போராட்டம் அல்ல, பண்பாட்டுப் போராட்டம்" என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். 'இந்தியை அல்ல, எத்தனை மொழிகளைத் திணித்தாலும் தமிழ் அழிந்துவிடாது. ஆனால் தமிழனது பண்பாடு அழிந்து போகும்" என்றார் தந்தை பெரியார். எனவே தான் இது பண்பாட்டுப் படையெடுப்பாகவே பார்க்கப்பட வேண்டியது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்கும் போராட்டமாக பேரறிஞர் அண்ணா அவர்கள் அடையாளப்படுத்தினார்கள்.

 “மொழி என்பது வெறும் கருவி அல்ல - நம் குருதி ஆகும்..” மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் ! - முரசொலி

இந்திய அரசமைப்புச் சட்ட ஏற்பாட்டின்படி இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக இந்தியை உயர்த்தி ஆங்கிலத்துக்கு விடைகொடுக்க இந்திய அரசு முடிவெடுத்த சூழலில் 1963 மே மாதம் மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசினார்கள். “ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி. அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.

இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து உணர்ச்சிப்பூர்வமாக தெரிவிக்கப்படும் எதிர்ப்பை இந்த மசோதா கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை. இந்த எதிர்ப்பு இந்தியாவின் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது" என்று குறிப்பிட்டார்கள்.

இன்றைய தினம் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, மேற்குவங்கத்தில் இருந்தும் இன்னும் சில வடமாநிலங்களில் இருந்தும் வரத் தொடங்கி இருக்கிறது. “எங்களுக்கு ஒரு அண்ணாவும் கலைஞரும் இருந்திருந்தால் நாங்களும் 1965 ஆம் ஆண்டே போராடி இருப்போமே" என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கர்க் சட்டர்ஜி சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார்.

 “மொழி என்பது வெறும் கருவி அல்ல - நம் குருதி ஆகும்..” மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் ! - முரசொலி

ஒற்றை மதம்தான் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிற பா.ஜ.க., ஒற்றை மொழிதான் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறது. இன்றைய தினம் அவர்கள் இந்தியின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் சமஸ்கிருதத்தின் ஆதரவாளர்கள்தான். சமஸ்கிருதத்தைச் சொன்னால் கடுமையாக எதிர்ப்பு வரும் என்பதற்காக முதலில் இந்தியைச் சொல்கிறார்கள். இந்தியை அரியணையில் அமர வைத்துவிட்ட பிறகு சமஸ்கிருதத்தைக் கையில் எடுப்பார்கள். இவர்கள் இதனை 1952 ஆம் ஆண்டே ஜனசங்கத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லி விட்டார்கள்.

இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி என்று சொல்லி விடுவதுதான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் என்பது போன்ற மாயையை உரு வாக்க நினைக்கிறார்கள். இதற்கெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்கள் எப்போதோ பதில் அளித்து விட்டார்கள் மாநிலங்களவையில்.

“இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழி வேண்டும் என்று பலரும் பல விதங்களில் வாதாடினர். இந்தியா 'ஒற்றை நாடு' என்று ஏற் றுக்கொள்வோமானால், இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தியா 'கூட்டாட்சி நாடு'. இந்தியச் சமூகம் பன்மைத்துவம் கொண்டது. ஆகையால் ஒரே ஒரு மொழியைப் பொதுமொழியாக ஏற்பது ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதி இழைப்பது போன்றதாகிவிடும். அது மட்டு மல்ல; சமூகத்தின் பெரும் பகுதி மக்களால் அம்மொழியைப் படிக்க முடியாமல் குறைகள் ஏற்படும்.

 “மொழி என்பது வெறும் கருவி அல்ல - நம் குருதி ஆகும்..” மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் ! - முரசொலி

இந்தியா ஒரே நாடல்ல. இந்தியா பல்வேறு இனக் குழுக்களையும் மொழிக் குடும்பங்களையும் கொண்ட நாடு. இதனாலேயே இந்தியாவை 'துணைக்கண்டம்' என்று அழைக்கிறோம். இதனால்தான், ஒரே மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக நம்மால் ஏற்க முடியவில்லை” என்று பேசி இருக்கிறார் பேரறிஞர் அண்ணா அவர்கள். உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானுடன் இந்தி அடங்கி விடுகிறது என்பதையும் ஆதாரத்துடன் பேசினார் பேரறிஞர்.

வடமாநிலங்களில் இருந்த ஒருசில மொழிகளை இந்தி உள்ளே இழுத்துப் போட்டு அழித்துவிட்டதைப் பார்க்கிறோம். அதே நிலைமையை மற்ற தேசிய மொழிகளுக்கும் பின்பற்றப் பார்க்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர்த்தும் வகையில்...

"மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால் நம்முடைய அடையாளம் போய்விடும். அடையாளம் போய்விட்டால் தமிழன் என்று சொல்லிக் கொள் ளும் தகுதியை இழந்து விடுவோம். தமிழன் என்ற தகுதியை இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை. எனவே மொழியைக் காப்பது நம்முடைய கடமை” என்று பேசி இருக்கிறார்கள். எனவே முடியவில்லை மொழிப்போர்!

மொழிக்காக்க தம் இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு நமது வீரவணக்கம்!

banner

Related Stories

Related Stories