முரசொலி தலையங்கம்

“இசை மேடைகள் தமிழ் இசை மேடைகளாக மலர்தல் வேண்டும்” : பெரியாரின் புகழ்பெற்ற உரையை சுட்டிக்காட்டிய முரசொலி!

இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல் மட்டுமல்ல; தமிழ் வளர்த்தலும்தான் என்பதை மனதில் வைத்து அனைத்துக் கலைஞர்களும், அனைத்து கலை அமைப்புகளும் செயல்பட வேண்டும்!

“இசை மேடைகள் தமிழ் இசை மேடைகளாக மலர்தல் வேண்டும்” : பெரியாரின் புகழ்பெற்ற உரையை சுட்டிக்காட்டிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ் இசை வளர்ப்போம்!

டிசம்பர் இறுதியில் சென்னையில் அதிகமாக இசை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இது காலம்காலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் இசை நிகழ்ச்சிகள் தொடங்கி இருக்கின்றன. மியூசிக் அகாடமி அமைப்பாக இருந்தாலும், தமிழ் இசைச் சங்கமாக இருந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அழைத்து தங்களது நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைக்க அழைத்துள்ளார்கள். அதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் அவர்கள் தமிழ் இசையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசி இருக்கிறார்கள்.

தமிழ் இசைச் சங்க மேடை என்பது தமிழிசை ஒலிக்கும் மேடை ஆகும். மியூசிக் அகாடமி மேடை என்பது கர்நாடக இசை அதிகம் ஒலித்து, காலப்போக்கில் தமிழிசையும் சேர்ந்து ஒலிக்கும் மேடை ஆகும். சென்னையில் முத்தமிழ் பேரவை இயங்கி வருகிறது. இது முழுக்க தமிழ் இசை ஒலிக்கும் அமைப்பு ஆகும். அங்கும் இசை நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கும். இது போல் ஏராளமான இசை அமைப்புகள் உள்ளன. இவை அனைத்துக்கும் சேர்த்துதான் முதலமைச்சர் அவர்கள் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.

“இசை மேடைகள் தமிழ் இசை மேடைகளாக மலர்தல் வேண்டும்” : பெரியாரின் புகழ்பெற்ற உரையை சுட்டிக்காட்டிய முரசொலி!

‘’மியூசிக் அகாடமி போன்ற இசைக்கலை அமைப்புகளும், மன்றங்களும் தமிழ் இசைக்கு, தமிழ்ப்பாடல்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.

‘’தமிழ் இலக்கியத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்களும் இது போன்ற இசை மன்றங்களில் தவறாது ஒலிக்க வேண்டும். பக்தி இசையாக இருந்தாலும், திரையிசையாக இருந்தாலும், மெல்லிசையாக இருந்தாலும், பாப் இசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும் தமிழிசையாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். மொழி இருந்தால்தான் கலை இருக்கும். இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல் மட்டுமல்ல; தமிழ் வளர்த்தலும்தான் என்பதை மனதில் வைத்து அனைத்துக் கலைஞர்களும், அனைத்து கலை அமைப்புகளும் செயல்பட வேண்டும்” என்று முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

* நிர்வாகத்தில் தமிழ்

* நீதிமன்றங்களில் தமிழ்

* ஆட்சியில் தமிழ்

* ஆலயங்களில் தமிழ்

* பள்ளிகளில் தமிழ்

* கல்லூரிகளில் தமிழ்

* நாடகங்களில் தமிழ்

* திரையுலகத்தில் தமிழ்

* பெயர் சூட்டுவதில் தமிழ்

* பெயர்ப்பலகையில் தமிழ் - என எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆதல் வேண்டும். அந்த வரிசையில் இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோள் ஆகும்.

“இசை மேடைகள் தமிழ் இசை மேடைகளாக மலர்தல் வேண்டும்” : பெரியாரின் புகழ்பெற்ற உரையை சுட்டிக்காட்டிய முரசொலி!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் இசை’ என்ற தலைப்பில் 7.2.1944 அன்று மாலை தந்தை பெரியார் பேசினார். இச்சிறப்பு மிகு கூட்டத்துக்கு தலைமை வகித்தவர் தமிழறிஞரும் எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்படுபவருமான கா.சுப்பிரமணியம் அவர்கள்.

‘’தமிழன் தான் நுகரும் இசையை தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதை, தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு என்கிறான் இதை யார் தான் ஆகட்டும் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூறவேண்டும் என்று கேட்கிறேன்! தமிழன், தமிழ் மக்கள் தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். பாட்டு கேட்பவன் தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாதவர்கள் எதற்காக தலையிட வேண்டும்? மற்றவர்கள் அதை மறுக்கவோ, குறை கூறவோ, குற்றம் சொல்லவோ எப்படி உரிமை உடையவர்கள் என்று கேட்கின்றேன்.

‘தமிழனுக்குத் தமிழ் வேண்டும். தமிழ் இசை வேண்டும் என்பது தேசத் துரோகமாகவும் கலைத் துரோகமாகவும், வகுப்பு துவேஷம் என்பதாகவும் எப்படி ஆகும்? எதனால் ஆகும்? தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழன் தன்மானமும், விடுதலை பெற்று வளர்ச்சி அடைய வேண்டுமானால் தமிழன் காரியத்தில் தமிழன் அல்லாதவன் அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஓழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்க வேண்டும்” என்றார். பெரியாரின் மிகமிகப் புகழ்பெற்ற உரைகளில் இதுவும் ஒன்று. இத்தகைய தந்தை பெரியாரின் குரலையே தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒலித்திருக்கிறார்கள்.

“இசை மேடைகள் தமிழ் இசை மேடைகளாக மலர்தல் வேண்டும்” : பெரியாரின் புகழ்பெற்ற உரையை சுட்டிக்காட்டிய முரசொலி!

விண்ணவர் வீணை வீழ்த்தார்

விஞ்சையர் களிந்து சோர்த்தார்

மண்ணவர் மருளின் மாய்த்தார்

சித்தரும் மனத்துள் வைத்தார் -– என்று சீவகனின் இசை நயம் குறித்து சீவகசிந்தாமணி பாட்டு சொல்கிறது. இப்படி கேட்பவர் அனைவரையும் மயக்க வைக்கும் தன்மை கொண்ட தமிழ்ப்பாடல்கள் ஏராளமாக உண்டு.

பல்லாண்டு பல்லாண்டு

பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூற்றாண்டு –- என்று சொல்லும் போதே இசையோடுதான் சொல்ல முடியும். பாவேந்தரின் தமிழ் மொழி உணர்வுப் பாடல்களுக்கு இணையானது எது? மொத்த திருக்குறளையும் இசை வடிவில் அரங்கேற்றம் செய்து விட்டார்கள். எனவே இசைப் பாடல்கள் பல்லாயிரக்கணக்கில் தமிழிலேயே இருக்கின்றன. இப்பாடல்கள் மேடைகள் தோறும் ஒலிக்க வேண்டும். இசை மேடைகள் தமிழ் இசை மேடைகளாக மலர்தல் வேண்டும்.

இசை அமைப்புகள், கலை அமைப்புகள் அதிகம் உருவாக வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்கள். கலையுலகம் இதனைக் கவனிக்கட்டும்!

banner

Related Stories

Related Stories