முரசொலி தலையங்கம்

“ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டு.. அது கலாச்சாரத்தோடு கலந்தது” : PETA-க்கு முரசொலி பதிலடி!

ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டு.. அது கலாச்சாரத்தோடும் கலந்தது"

“ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டு.. அது கலாச்சாரத்தோடு கலந்தது” : PETA-க்கு முரசொலி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஏறு தழுவுதல் நடக்கட்டும்!

ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, சல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு என்று பல பெயர்களில் அழைக்கப்படும் தமிழர்களின் மரபுவழி விளையாட்டு குறித்து உச்சநீதிமன்றத்தில் மாபெரும் விவாதம் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு வலுவானதாக அமைந்துள்ளது.

இது ஏதோ மதுரையில் மட்டும் நடக்கும் போட்டியைப் போல சுருக்கிப் பார்த்து சிலர் விமர்சனம் செய்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளிலும்-, திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரிலும் - நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தத்திலும்,- சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கூலமேட்டிலும்-, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்திலும், - புதுகோட்டை மாவட்டம் நார்த்தார் மலையிலும், - திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம், புதூர், தேனீ மலையிலும்மற்றும் தேனி, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் நடைபெறும் தமிழகம் தழுவிய போட்டிவிழா ஆகும்.

“ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டு.. அது கலாச்சாரத்தோடு கலந்தது” : PETA-க்கு முரசொலி பதிலடி!

பழந்தமிழ் இலக்கியங்களில் ஏறு தழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்று வருகிறது. சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உள்ளது.

சங்க இலக்கியமான கலித்தொகையில்

“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆய மகள்.

அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத

நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து

நைவாரா ஆய மகள் தோள்-” - என்றுரைக்கிறது.

அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது இறைவனையும் அரசனையும் வாழ்த்துகின்றனர். பண்டைக் காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது.

“ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டு.. அது கலாச்சாரத்தோடு கலந்தது” : PETA-க்கு முரசொலி பதிலடி!

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக் கட்டு’ என ஆனது.

இதே போன்ற விளையாட்டுகள் மற்ற சில மாநிலங்களிலும் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மஞ்சுவிரட்டு, கர்நாடகாவில் இருக்கும் கம்பாலா, மகாராஷ்டிராவில் இருக்கும் சக்கடி ஆகிய போட்டிகளை நடத்த தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

“ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டு.. அது கலாச்சாரத்தோடு கலந்தது” : PETA-க்கு முரசொலி பதிலடி!

இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று 2018 ஆம் ஆண்டு இரண்டு நீதிபதிகள் அமர்வு கூறியதால் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வின் முன் இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது. ‘’அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னரே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வான ஜல்லிக்கட்டு, அதற்கான விதிமுறை பின்பற்றப்பட்டு நடத்தப்பட்டு வருவதால், ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு போட்டி அல்ல, அது விவசாயிகளின் வாழ்வோடும், கலாச்சாரத்தோடும் கலந்தது” என்று தமிழக அரசு அழுத்தமாகக் கூறி இருக்கிறது.

“ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டு.. அது கலாச்சாரத்தோடு கலந்தது” : PETA-க்கு முரசொலி பதிலடி!

‘’ஜல்லிக்கட்டு போட்டிகள் சட்டப்படிதான் நடக்கிறது. அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசுதான் செய்து தருகிறது” என்றும் விளக்கம் அளித்துள்ளது தமிழக அரசு. விலங்குகளை மதிப்பதில்லை என்ற பீட்டா அமைப்பினரின் வாதத்துக்கும் விரிவான பதில் தரப்பட்டுள்ளது. ‘’விலங்குகளை அதிகமான மதிக்கிறோம். இப்போட்டியில் கலந்து கொள்ளும் விலங்குகள் ஆண்டுதோறும் அக்குடும்பங்களால் முறையாக, மிகுந்த கவனத்தோடு வளர்க்கப்படுகின்றன. போட்டி முடிந்ததும் அதே ஈடுபாட்டுடன் வளர்க்கப்படுகின்றன” என்றும் அரசு வாதங்களை வைத்துள்ளது.

‘’டிக்கெட் விற்பனை இன்றி ஜல்லிக்கட்டு நடைபெறும்போது, அதனை வணிக நோக்கம் என எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்?” என்று மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ‘’குதிரை பந்தயம், யானை ஓட்டம் உள்ளிட்டவை எந்த விதிமுறைப்படி அனுமதிக்கப்படுகிறது” எனவும் நீதிபதிகள் வினவினர். ‘’அந்தந்த மாநில சட்டப் பேரவைகள் எடுக்கும் முடிவே சிறந்தது” என்றும் நீதிபதிகள் கருத்துக் கூறி இருக்கிறார்கள்.

“ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டு.. அது கலாச்சாரத்தோடு கலந்தது” : PETA-க்கு முரசொலி பதிலடி!

‘‘ஜல்லிக்கட்டு காளைகளைத் திடீரென இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கான முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவைதானே பயன்படுத்தப்படுகிறது. நாய்களுக்கான போட்டிகள் நடத்தப் படுகிறது. அதை துன்புறுத்தலாக நாம் எடுத்துக் கொள்ள முடியுமா? இதற்காக நாய்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவைதானே பயன்படுத்தப்படுகிறது.

இந்த போட்டிக்காக காளைகள் தனியாக பழக்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனியாக பயிற்சி அளிப்பதோடு, அந்த காளைகளை தங்கள் சொந்த குடும்ப உறுப்பினராகவே பாவிக்கின்றனர். ஆனால் காளைகளுக்கு கொடுமை இழைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது” என்றும் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

காளைகளைத் துன்புறுத்தாமல் போட்டிகள் நடைபெறலாம் என்ற தொனியில் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

- முரசொலி தலையங்கம்., (02.12.2022).

banner

Related Stories

Related Stories