முரசொலி தலையங்கம்

"பில்கிஸ் பானு:குழுவில் இருந்த 10 பேரில் 5 பேர் பாஜக-வினர்" -தலைமை நீதிபதியிடம் புகாரளித்த 134 அதிகாரிகள்

பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்தவை இந்தியச் சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்குவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் 134 பேர் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

"பில்கிஸ் பானு:குழுவில் இருந்த 10 பேரில் 5 பேர் பாஜக-வினர்" -தலைமை நீதிபதியிடம் புகாரளித்த 134 அதிகாரிகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்தது..?

குஜராத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்தவை இந்தியச் சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்குவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் 134 பேர் கடிதம் எழுதி இருக்கிறார்கள். 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 52 யாத்திரீகர்கள் பலியானார்கள். இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த எரிப்பை நடத்தியதாக செய்தி பரவியது.

"பில்கிஸ் பானு:குழுவில் இருந்த 10 பேரில் 5 பேர் பாஜக-வினர்" -தலைமை நீதிபதியிடம் புகாரளித்த 134 அதிகாரிகள்

இதனால் இசுலாமியர்களுக்கு எதிரான பெரும் வன்முறை அரங்கேற்றப்பட்டது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் வீடுகள், சொத்துகள் சூறையாடப்பட்டன. இதில் கொல்லப்பட்டவர்களில் பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் 14 பேர். இதில் பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை சுலேஹா, சுவற்றில் அடித்துக் கொல்லப்பட்டார். அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் பில்கிஸ் பானு. அவர் உட்பட 4 பெண்கள் பாலியல் வன்முறையால் சீரழிக்கப்பட்டார்கள். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

"பில்கிஸ் பானு:குழுவில் இருந்த 10 பேரில் 5 பேர் பாஜக-வினர்" -தலைமை நீதிபதியிடம் புகாரளித்த 134 அதிகாரிகள்

ஜஸ்வந்த்பாய், கோவிந்தபாய், ஷைலேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசவர் பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பசுபாய் வோஹானியா, ராகபோய் சோனி, மிதேஷ் பட், ரமேஷ் சந்தனா ஆகிய 11 பேர் மீது மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனையை சி.பி.ஐ. நீதிமன்றம் விதித்தது.

இவர்கள் கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 15 அன்று இவர்கள் 11 பேரையும் விடுவித்து இருக்கிறது குஜராத் மாநில அரசு. நீண்ட காலம் சிறையில் இருந்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களை விடுதலை செய்துள்ளது அம்மாநில அரசு.

இவர்களது விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள். இது சட்டபூர்வமானதாக இருந்தாலும் தார்மீக ரீதியானதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

UU Lalit
UU Lalit

11 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்கக் கோரி ஒன்றிய அரசுக்கும். குஜராத் மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில்தான், 'அரசியலமைப்பு நடத்தைக் குழு' என்ற தலைப்பில் பகிரங்க கடிதம் ஒன்றை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்பமை யு.யு.லலித் அவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் அனுப்பி இருக்கிறார்கள்.

"பில்கிஸ் பானு:குழுவில் இருந்த 10 பேரில் 5 பேர் பாஜக-வினர்" -தலைமை நீதிபதியிடம் புகாரளித்த 134 அதிகாரிகள்

"இவர்களை விடுதலை செய்தது பயங்கரமான தவறு. வழக்கின் குற்றவாளிகள் கும்பல் பாலியல் வன்முறை கொடுமைக் குற்றத்துக்காகவும், கொலைக் குற்றத்துக்காகவும் தண்டனை பெற்றவர்கள். அது மட்டுமின்றி வழக்கின் ஆதாரங்களையும், சாட்சியங்களையும் அழிப்பதற்காக முயற்சித்தவர்கள். இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா மாநில அரசுதான் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டுமே தவிர, இதற்கு சம்பந்தமில்லாத குஜராத் மாநில அரசுக்கு இம்முடிவை எடுக்க உரிமை இல்லை.

முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று முடிவெடுக்கும் குழுவில் இருந்த 10 பேரில் 5 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். இது பாரபட்சமற்ற தன்மை மற்றும் சுதந்திரமான நடைமுறையின் மீது முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.

"பில்கிஸ் பானு:குழுவில் இருந்த 10 பேரில் 5 பேர் பாஜக-வினர்" -தலைமை நீதிபதியிடம் புகாரளித்த 134 அதிகாரிகள்

பில்கிஸ் பானுவின் குடும்பத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இது ஏற்படுத்தும். குஜராத் மாநில அரசின் முடிவைத் திருத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உண்டு. அதனை உச்சநீதிமன்றம் செய்ய வேண்டும்" என்று 134 அதிகாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

சில நாட்களுக்கு முன்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் க.கனகராஜ் அவர்கள், 'பில்கிஸ் பானு பேசுகிறேன்' என்ற தலைப்பில் உருக்கமான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அது சமூக வலைதளங்களில் மிகப்பரவலாக பரவியது.

"பில்கிஸ் பானு:குழுவில் இருந்த 10 பேரில் 5 பேர் பாஜக-வினர்" -தலைமை நீதிபதியிடம் புகாரளித்த 134 அதிகாரிகள்

"எந்த தாய்க்கும் நேரக்கூடாத துயரத்தை நான் அனுபவித்தேன். அய்யோ, நினைக்கவே மனம் இப்போதும் பதறுகிறதே. எனது மூன்று வயது மகளின் காலைப் பிடித்து அருகில் இருந்த பாறையில் அவளது தலையை ஓங்கி அடித்து கொன்றார்கள். கர்ப்பிணிப் பெண் என்று பாராமல் என்னை பலரும் வல்லுறவு செய்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை பெற்று இருந்த எனது சித்தப்பா மகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

விலங்கினங்கள் கூட ஈன்ற ஒரு பெண் விலங்கோடு உடனடியாக உறவு கொள்ளாது என்று கேட்டிருந்தேன். ஓட முடியாத நிலையிலிருந்த அப்போது தான் ஈன்றெடுத்த மான் குட்டியை பசியில் இருக்கும் புலி கூட தின்னாது என்று பார்த்திருக்கிறேன். ஆனால் அந்தக் கயவர்களைப் பொறுத்தவரை அனைத்தும் பொய்யாய்ப் போனது. நானும் கொல்லப்பட்டு விட்டதாகவே நினைத்து அவர்கள் சென்றுவிட்டார்கள். ஆனால் எனக்கு உயிர் இருந்தது. என்னோடு 7 வயது, 4 வயதுச் சிறுவர்கள் மட்டும் உயிர் பிழைத்திருந்தார்கள். அதாவது, எங்கள் குடும்பத்தில் 14 பேர் கொல்லப்பட்டு விட்டார்கள்.

"பில்கிஸ் பானு:குழுவில் இருந்த 10 பேரில் 5 பேர் பாஜக-வினர்" -தலைமை நீதிபதியிடம் புகாரளித்த 134 அதிகாரிகள்

இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டார்கள். எனக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும். வீடும். அரசு வேலையும் தர உத்தரவிட்டது நீதிமன்றம். நிதி மட்டுமே கொடுத்தார்கள். வீடும், அரசு வேலையும் தரவில்லை. ஆனால், எனக்கு நம்பிக்கை எஞ்சியிருந்தது. முன்னே நின்ற தடைக்கற்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் நீதித்துறை விலக்கி, தகர்த்து நீதி வழங்கியிருக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்தேன். அந்த நம்பிக்கையில்தான் இப்போது அமிலம் ஊற்றப்பட்டிருக்கிறது.

குற்றவாளிகள் மகிழ்ச்சியாக வெளியில் வந்துவிட்டார்கள். நான் 20 ஆண்டுகளாக நிரந்தரமாக தங்க இடமில்லாமல் அலைந்துக் கொண்டு இருக்கிறேன். அகதிக்குக் கூட முகாம் உண்டு. எனக்கு காந்தி பிறந்த பூமியில் அதுவும் இல்லை. அவர்கள் ஊரில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். நான் மறைந்து வாழ்கிறேன்.

என் தாய் நாடு நீதிமறுக்கப்பட்டவர்களின் தேசமாகவும், நீதி மறுப்போர் ஆளும் காடாகவும் மாறிவிடக் கூடாது" என்று சொல்வதாக எழுதி இருந்தார். பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்தது இந்தியாவின் மனச்சாட்சியை தட்டி எழுப்புகிறது!

banner

Related Stories

Related Stories