முரசொலி தலையங்கம்

“நாடாளுமன்றத்திலேயே பேசக்கூடாது என்பதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசின் ஜனநாயகமா?” - சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ !

“அனைவரும் வாயை மூடிக்கொண்டு பேசவும்” என்றும் சொல்லலாம். அல்லது, “வாயை மூடிக் கொண்டு இருக்கவும்” என்றும் சொல்லலாம். “வாயை மூடிக்கொண்டு பார்க்கவும்” என்றும் சொல்லலாம்.

“நாடாளுமன்றத்திலேயே பேசக்கூடாது என்பதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசின் ஜனநாயகமா?” - சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“நாடாளுமன்றத்தில்- வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலைக் கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்து தல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படுகின்றன. முட்டாள் தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் - போன்ற வார்த்தைகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் பேசும் போது இவற்றைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் இன்னும் என்னென்ன சொற்களைப் பயன்படுத்தக் கூடாது... பட்டியலிடலாம்... பெட்ரோல் - டீசல், சிலிண்டர் விலை, வேலையின்மை, குதிரை பேரம், அசாம் வெள்ளம், கருப்புப்பணம் ஒழிப்பு, மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமைச் சட்டம், 15 லட்சம், வருமானம் இரண்டு மடங்கு இரட்டிப்பு ஆகும், அதானி, அம்பானி, ஆர்.எஸ்.எஸ்., மாநில சுயாட்சி, கூட்டாட்சி, வகுப்புவாதம், மதவாதம், வரிச்சலுகைகள், வெளி நாட்டுப்பயணம், தினமும் ஒரு உடை, காவி ஆகிய வார்த்தைகளையும் பயன்படுத்தக் கூடாது என்று பட்டியலிடலாம்.

Modi
Modi

இறுதியாக, “அனைவரும் வாயை மூடிக்கொண்டு பேசவும்” என்றும் சொல்லலாம். அல்லது, “வாயை மூடிக் கொண்டு இருக்கவும்” என்றும் சொல்லலாம். “வாயை மூடிக்கொண்டு பார்க்கவும்” என்றும் சொல்லலாம்.

“ஊழல்” என்ற வார்த்தையை நாடாளுமன்றத்தில் உச்சரிக்கக் கூடாது என அறிவித்திருக்கிறது ஆளும் பா.ஜ.க. அரசு. ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்? ‘ஊழல்' என்ற வார்த்தையை ஒழிக்க வேண்டும். வறுமை என்பதை ஒழிக்க என்ன செய்யவேண்டும்? வறுமை என்ற வார்த்தையை ஒழித்துவிட வேண்டும்! சாதியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்? சாதி என்ற வார்த்தையை ஒழித்து விட வேண்டும்! அந்த மாதிரிதான் ஊழலை ஒழிக்க ‘ஊழல்’ என்ற வார்த்தையை ஒழித்துவிட்டால் போதுமானது!

Nikkei Asian Review
Nikkei Asian Review

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, ஜூலை 16, 17 ஆகிய தேதிகளில் அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளின் பட்டியலை, மக்களவை மற்றும் மாநிலங்களவைச் செயலகங்கள் வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஊழல், குற்றவாளி, துரோகம், ஏமாற்றம், கண்துடைப்பு, பாலியல் வன்முறை, கபடநாடகம், திறமையற்ற, கோழைத்தனம், அவமானம், துஷ்பிரயோகம், முதலைக் கண்ணீர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள புதிய விதிமுறைப் புத்தகத்தில் இவ்விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாடாளுமன்றத்திலேயே பேசக்கூடாது என்பதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசின் ஜனநாயகமா?” - சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ !

நாடாளுமன்றத்தில் நீக்கப்பட்ட வார்த்தைகளைத்தான் பட்டியலிட்டுள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளார்கள். “பேசாதே, பேசினால் நீக்குவோம்” என்பதுதான் இன்றைய பா.ஜ.க.வின் ஜனநாயகமாக அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு வழக்குப் போடமுடியாது என்று ஒரு மரபு உண்டு. அந்த அளவுக்கு உயர்ந்தபட்ச ஜனநாயகம் உள்ள அமைப்புதான் நாடாளுமன்றம் ஆகும். அந்த நாடாளுமன்றத்திலேயே இதைப் பற்றி எல்லாம் பேசக் கூடாது என்பது என்ன வகையிலான ஜனநாயகம்?

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மோடி அரசின் உண்மைத் தன்மையை விவரிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகள், நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானவை என அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, உலக போதகரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றும் அவர் கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார்.

“நாடாளுமன்றத்திலேயே பேசக்கூடாது என்பதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசின் ஜனநாயகமா?” - சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ !

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, “உட்காருங்கள்... உட்காருங்கள். அன்புடன் பேசுங்கள் என்பதே அனுமதிக்கப்பட்டுள்ள வார்த்தைகளா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற மரபுகளை மீறிய வார்த்தைகள் பட்டியலில் ‘சங்கி’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்றும், இந்தியாவை பா.ஜ.க.வினர் எப்படிச் சீரழித்து வருகின்றனர் என்பதை விவரிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் ஒன்றிய அரசு தடை செய்துள்ளதாகவும் மஹுவா மொய்த்ரா விமர்சித்துள்ளார்.

“நெறிபிறழ்ந்த சொற்கள் பற்றிக் கவலையில்லை, உங்கள் பெயர்களே போதும்!” என்று சொல்லி இருக்கிறார், மார்க்சிஸ்ட் உறுப்பினர் சு.வெங்கடேசன். இந்தியக் குடியரசு நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மாபெரும் மன்றம்தான் இந்திய நாடாளுமன்றம். இங்கு அனைத்தையும் பேசி - பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு - அதிலிருந்து தேர்ந்த சட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மிக முக்கியமான நோக்கம் என்பது, வாக்காளர்களின் சிந்தனையை மக்கள் மன்றத்தில் பதிய வைப்பது ஆகும். பார்லிமெண்ட் என்ற சொற்களின் மூலங்கள் என்பவை கலந்துரையாடல், சொற்பொழிவு, பேசுதல், விவாதம் ஆகியவை கொண்டதே ஆகும்.

“நாடாளுமன்றத்திலேயே பேசக்கூடாது என்பதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசின் ஜனநாயகமா?” - சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ !

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்படுகிறார் என்றால் அங்கு சுற்றுலாவாக அல்ல. தொகுதி மக்களின் கருத்தைச் சொல்வதற்காக அனுப்பி வைக்கப்படுகிறார். அவர்முன் ஒலிபெருக்கி வைக்கப்பட்டு இருப்பது காட்சிப் பொருளாக அல்ல, பயன்படுத்த வேண்டிய பொருளாகத்தான் வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பேச முடியாது, நீங்கள் எதைப் பேசினாலும் தடை செய்வோம்; பதில் சொல்ல மாட்டோம் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலி செய்வது ஆகும். அப்புறம் எதற்காக புதிய கட்டடம் பல்லாயிரம் கோடியில் கட்ட வேண்டும்?

75 ஆவது ஆண்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடும் போது தட்டிப்பறிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தின் பட்டியல்தான் அந்தச் சொற்கள்!

banner

Related Stories

Related Stories