முரசொலி தலையங்கம்

“கூச்சமில்லாமல் திரும்பத் திரும்பச் சொன்னால் என்ன செய்வது?” : ஆளுநரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ தலையங்கம்!

அவதூறு வரலாற்றை கூச்சமில்லாமல் திரும்பத் திரும்பச் சொன்னால் என்ன செய்வது?

“கூச்சமில்லாமல் திரும்பத் திரும்பச் சொன்னால் என்ன செய்வது?” : ஆளுநரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

எத்தனை தடவை பதில் சொன்னாலும் அதனை உள்வாங்கிக் கொள்ளாமல் அதே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் என்ன செய்வது? அதுவும் ஆளுநர் போன்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் இத்தகைய அவதூறு வரலாற்றை கூச்சமில்லாமல் தொடர்ந்து சொல்லி வருவது மிகுந்த கண்டனத்துக்கு உரியது.

நேற்றைய தினம் மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒரு பட்டமளிப்பு விழாவைக் கூட ஒழுங்காக, முறையாக எப்படி நடத்துவது என்று தெரியாத நிலையில் அது நடந்து முடிந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களின் இணைவேந்தரான - உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் பொன்முடி அந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருக்கிறார். ஏனென்றால், பட்டமளிப்பு விழாவுக்கான நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.

“கூச்சமில்லாமல் திரும்பத் திரும்பச் சொன்னால் என்ன செய்வது?” : ஆளுநரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ தலையங்கம்!

பல்கலைக்கழகங்களின் இணைவேந்தருக்கு மேலாக, ஒன்றிய அமைச்சரை கௌரவ விருந்தினராக அழைத்துள்ளது மிகத்தவறானது ஆகும். அதனைச்சுட்டிக்காட்டிய பிறகும் திருத்திக் கொள்ளவில்லை. வெளிப்படையாக கண்டித்த பிறகும், திருத்திக் கொள்ள முன்வரவில்லை. இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால், ‘நாங்கள் செய்வது தான் சட்டம்’ என்ற போக்கே ஆகும்.

இந்த அடிப்படையில் தான், ‘நான் பேசுவது தான் வரலாறு’ என்ற அடிப்படையிலும் ஆளுநர் பேசி வருகிறார். வேலூர் விழாவில் தனது வாய்க்கு வந்ததை வரலாறாக ஆளுநர் அவர்கள் பேசினார்கள். இதற்கு விரிவான விளக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் அளித்தார்கள். ‘திராவிடர்’ என்ற அடையாளம் ஆங்கிலேயர் காலத்துக்கு முந்தியது என்பதை மனு, மகாபாரத உதாரணங்களுடன் அவரது அறிக்கை சுட்டிக் காட்டியது. இதனை உணர்ந்து தனது பேச்சை திரும்பப் பெற்றிருக்க வேண்டும் ஆளுநர். அவர் அதைச் செய்யவில்லை. ஆனால், வேலூரில் பேசிய அதே கருத்தை மதுரையிலும் சொல்லி இருக்கிறார்.

அவர் ஏன் இதனைப் பேசி வருகிறார் என்ற பூனைக்குட்டி மதுரையில் வெளியில் வந்துவிட்டது. இந்தியாவில் பிரிவினையை விதைத்தவர்கள் ஆரியர்கள் என்பது வரலாற்று அரிச்சுவடிப் பாடம் ஆகும். அதனை மாற்ற முயற்சிக்கிறார் ஆளுநர்.

“கூச்சமில்லாமல் திரும்பத் திரும்பச் சொன்னால் என்ன செய்வது?” : ஆளுநரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ தலையங்கம்!

அதற்காகத்தான் அவராக வரலாறுகளைத் திரித்துச் சொல்லிக் கொண்டு வருகிறார். ஆங்கிலேயர்கள்தான் எல்லாப் பிரிவினைக்கும் காரணம் என்று சொல்லி பதிய வைத்துவிட்டால், ஆரியர்களை புனிதப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்.

“இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்கும் வகையில் தெற்கே இருந்தவர்கள் திராவிடர் என்றும், வடக்கே இருந்தவர்கள் ஆரியர்கள் என்றும் ஆங்கிலேயர் பிரித்தனர். ஆங்கிலேயர் இந்தியாவின் வரலாற்றை எவ்வாறு மாற்றினர் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்று மதுரையில் பேசி இருக்கிறார் ஆளுநர்.

ஆளுநர்க்கு திராவிடர்களைப் பற்றி மட்டுமல்ல, ஆரியர்களைப் பற்றியும் தெரியவில்லை. “ஆரிய என்ற சொல் சமஸ்கிருதத்திலும் அம்மொழியிலிருந்து சென்ற பெரும்பாலான இந்திய மொழிகளிலும், ‘சுதந்திரமாகப் பிறந்த’, ‘உயர்குணம் படைத்த’, அல்லது ‘மூன்று மேல்சாதிகளில் ஒருவர்’ ஆகிய பொருள்களில் வழங்கப்படுகின்றன. வேறுபல சொற்களைப் போலவே இச்சொல்லின் பொருளும் நூற்றாண்டுகள் தோறும் மாறி வந்தது” என்று எழுதி இருக்கிறார் இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான டி.டி.கோசாம்பி.

(பண்டைய இந்திய அதன் பண்பாடும் நாகரிகங்கள் பற்றிய வரலாறு) மிகப்பூர்வ நிலையில் ஒரு இனமாகத் திரண்டெழுந்த சிறு கூட்டத்தைக் குறித்த சொல் என்று அதனை அவர் சொல்வார். இந்தியாவின் உச்சநிலை என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்டது என்று சிலர் இன்னமும் சொல்லி வருகிறார்கள்.

“கூச்சமில்லாமல் திரும்பத் திரும்பச் சொன்னால் என்ன செய்வது?” : ஆளுநரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ தலையங்கம்!

அதை வைத்து சிந்து மக்கள் ஆரியர்களே என்றும் பொய் சொல்லி வருகிறார்கள். பிரிட்டிஷார் வந்துதான் ஆரியர்கள் என்று பிரித்தார்கள் என்றால், சில வகையறாக்கள் சொல்லும் இத்தகைய ஆரியப் பெருமையும் தவறானது என்று ஆகிவிடும். பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட ‘ஆரியர்கள்’ சிந்துச் சமவெளி மக்களாக எப்படி இருந்திருக்க முடியும்? எதையோ சொல்வதாக நினைத்து எதையாவது சொன்னால் இப்படித்தான் சேம் சைடு கோல் போட வேண்டி வரும்!?

“சற்று வெளுப்பாக இருந்த ஆரியர்களுக்கும், கறுப்பாக இருந்த விரோதிகளுக்கும் இடையே காணப்பட்ட நிறவேற்றுமை ஒன்றே ரிக் வேத காலத்தின் சாதி வேறுபாட்டைக் குறித்தது. ஆரியர்களுக்கும், பூர்வீக மக்களுக்கும் நிகழ்ந்த இனக்கலப்பால் வளர்ச்சியுற்ற நிபுணர்களின் ஒரு புதிய வர்க்கம் முடிவில் எல்லா ஆரியச் சடங்குகளுக்கும் ஏகபோக உரிமை கொண்டாடியது” என்று எழுதுகிறார் டி.டி.கோசாம்பி. இதுதான் இந்தியச் சமூக அமைப்பை மொத்தமாகப் பிரித்து எழுதிய ஆதிக்க - ஆரிய வர்க்கம் ஆகும்.

‘இந்தியப் பிரிவினை அமைப்பு என்பது படுக்கை அமைப்பு கொண்டது அல்ல. செங்குத்தானது’ என்று சொல்வார் டாக்டர் அம்பேத்கர். நீயும் நானும் வேறு வேறு என்பதல்ல இந்தியப் பிரிவினை. நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்பது ஆகும். இத்தகைய படிநிலைப்பட்ட சாதியமைப்பு பிரிவினைதான் இந்தியாவின் வளர்ச்சிக்கு அன்று முதல் இன்று வரை தடையாக இருக்கிறது.

“கூச்சமில்லாமல் திரும்பத் திரும்பச் சொன்னால் என்ன செய்வது?” : ஆளுநரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ தலையங்கம்!

இதனை உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல. ரிக் வேதத்திலுள்ள (10.90) புருஷ சூக்தம் எனப்படும் படைப்பின் பாடலில் பிரிவினை முதலில் தோற்றுவிக்கப்பட்டு விட்டது. குலத்தாழ்ச்சி உயர்ச்சி ஆகிய அனைத்தும் இதில் இருந்து உருவானதுதான். ஆரியர் நீங்கலான மற்றவர்க்கு அனைத்துத் தடைகளும் இருந்தது. படிக்கவும் தடை இருந்தது.,படிப்பைத் தராதே என்று இருந்தது. இதனை மாற்றி ‘அனைவரும் படிக்கலாம்’ என்று சொன்னதுதான் பிரிட்டிஷ் ஆட்சி. பிரிட்டிஷார் மீதான இவர்களது கோபத்துக்கு உண்மையான காரணம் இதுதான்.

எல்லார்க்கும் பொதுவான கல்வி, பொதுவான கோவில், பொதுவான நீதிமன்றம், பொதுவான ரயில், பொதுவான சினிமா தியேட்டர், பொதுவான ஹோட்டல் என்று உருவாக்கினார்களே என்ற ஆத்திரத்தில்தான் பிரிட்டிஷார் மீது தங்களது வன்மத்தை விதைத்து வருகிறார்கள். (பிரிட்டிஷாரின் அரசியல் அடிமைத்தனத்தை, பொருளாதாரச் சுரண்டலை இங்கு நாம் சொல்லவில்லை!)

‘கவர்னர் பதவியே பிரிட்டிஷார் உருவாக்கியதுதான்’ என்று நினைவூட்டி இருக்கிறார் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு. ஐ.பி.எஸ். வேலையை உருவாக்கியதும் அவர்கள் தான்!

banner

Related Stories

Related Stories