முரசொலி தலையங்கம்

“கவலைப்படும் கல்வியாளர்கள்.. சனாதனக் காவலரான ஆளுநர் RN.ரவி சட்டமசோதாக்களை மதிப்பாரா?” - முரசொலி !

ஆளுநர்களாக பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களை அவர்கள் நியமித்துக்கொள்வது கூட அவர்கள் விருப்பம். ஆனால் ஆளுநர் பதவிக்கு வருபவர்கள், பா.ஜ.க.- வாகவே நடந்து கொள்வதுதான் மிகப்பெரிய இழுக்கு.

“கவலைப்படும் கல்வியாளர்கள்.. சனாதனக் காவலரான ஆளுநர் RN.ரவி சட்டமசோதாக்களை  மதிப்பாரா?” - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆளுநர்களின் அரசியல் நியமனங்களால் பல்கலைக் கழகங்கள் நிலைமை மோசமடைந்து வருவது குறித்து ஒரு கல்வியாளர் கவலைப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரல்ல. தமிழருமல்ல. தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழராக இருந்தால் அப்படித்தான் சொல்வார் என்று உடனே உள்நோக்கம் கற்பித்துவிடுவார்கள்.

சொல்லி இருப்பவர் மிராண்டா ஹவுஸ் பேராசிரியரும், டெல்லி பல்கலைக்கழக கல்விக்குழு முன்னாள் உறுப்பினருமான அபாதேவ் ஹபீப். என்ன சொல்லி இருக்கிறார் என்றால்...

“துணைவேந்தர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக மாறிவிட்டன. பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்தான் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு மாநிலங்களில் அமர்ந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை துணை வேந்தர்களாக நியமிக்கின்றனர். பல்கலைக்கழகங்களின் கலாச்சார நடைமுறைகளுக்கு மதிப்பளித்து நியமனங்கள் செய்யப்பட வேண்டும். மாறாக, மாநிலங்களை ஒடுக்கும் நிலை தொடர்ந்தால் இரு அரசுகளுக்கு இடையேயான மோதல் மேலும் அதிகரிக்கும்” என்று சொல்லி இருக்கிறார்.

“கவலைப்படும் கல்வியாளர்கள்.. சனாதனக் காவலரான ஆளுநர் RN.ரவி சட்டமசோதாக்களை  மதிப்பாரா?” - முரசொலி !

ஆளுநர்களாக பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களை அவர்கள் நியமித்துக்கொள்வது கூட அவர்கள் விருப்பம். ஆனால் ஆளுநர் பதவிக்கு வருபவர்கள், பா.ஜ.க.- வாகவே நடந்து கொள்வதுதான் மிகப்பெரிய இழுக்கு. அதாவது அந்த ஆளுநர் பதவிக்கு இழுக்காகும். அது ஒரு நிர்வாகப் பதவி மட்டும்தான்.

இந்திய மாநிலங்களைக் கண்காணிப்பதற்காக கவர்னர் ஜெனரல்களை பிரிட்டிஷ் அரசு வைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு வைத்திருப்பதுதான் இந்த ஆளுநர்கள். அதனை மீறிய அதிகாரங்கள் அவர்களுக்கு இல்லை. இது அரசியலமைப்புச் சட்டத்திலும் உறுதியாகி உள்ளது.

உச்சநீதிமன்றம் தனது பல்வேறு தீர்ப்புகளிலும் இதை உறுதி செய்துள்ளது. அரசியல் சட்ட மேதைகளும் அதனைச் சொல்லி இருக்கிறார்கள். மாநில சுயாட்சி ஆணையங்களும் இதனைச் சொல்லி இருக்கின்றன. ‘மாநில அரசின் கொள்கை முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள்தான் ஆளுநர்கள்' என்பதுதான் திரும்பத் திரும்ப அனைவராலும் வலியுறுத்தப்படுவது ஆகும்.

ஆனால், நடைமுறையில் ஆளுநர்கள், அரசியல்வாதிகளாக நடந்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக பா.ஜ.க. ஆளாத மாநில ஆளுநர்கள், தங்களை இன்னொரு அரசாங்கமாக நினைத்து நடந்து கொள்கிறார்கள். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கல்வியாளர் அபாதேவ் ஹபீப் கவலைப்படுவது இதை வைத்துத்தான்.

“கவலைப்படும் கல்வியாளர்கள்.. சனாதனக் காவலரான ஆளுநர் RN.ரவி சட்டமசோதாக்களை  மதிப்பாரா?” - முரசொலி !

இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள ‘தினமணி' இதற்கு எழுதிய முன்னுரையில், “மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநில அரசுகளுக்கும் இடையேயான அரசியல் சண்டையில் பல்கலைக்கழகங்கள் சிக்கித் தவிப்பதாக கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக மாநில அரசுக்கும், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு காரணமாக மாநில பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகிறது. திறமையின் அடிப்படையில் அல்லாமல் அரசியல் செல்வாக்கின் கீழ் சில பல்கலைக்கழகங்களில் நியமனங்கள் செய்யப்படுவதாக புகார்கள் எழுகின்றன.

அந்த வகையில் அரசியல் போர்க் களமாக பல்கலைக் கழகங்கள் மாற்றப்படுகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில அரசுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருவது துணை வேந்தர்கள் நியமனத்தை பாதிப்பதோடு கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி அதிகாரத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்'' என்று எழுதி இருக்கிறது.

“கவலைப்படும் கல்வியாளர்கள்.. சனாதனக் காவலரான ஆளுநர் RN.ரவி சட்டமசோதாக்களை  மதிப்பாரா?” - முரசொலி !

இதனால் தான் துணைவேந்தர்களை மாநில அரசால் நியமிக்கப்படும் தேர்வுக்குழுவே தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும் என்கிறோம். பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி இருக்கிறது.

* தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா, 2020.. (வேந்தருக்குப் பதிலாக ஆய்வு மற்றும் விசாரணை அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குதல்)

* தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா, 2020. (ஆய்வு அதிகாரத்தை அரசாங்கத் திற்கு வழங்குதல்)

* தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2022 . (உயர் கல்வித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்).

* சென்னை பல்கலைக்கழக (திருத்த) மசோதா, 2022. (பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நியமிப்பதற்கும், நிதிச் செயலாளரை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக சேர்ப்பதற்கும்)

* தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா, 2022 , (பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்).

* தமிழ்ப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, 2022.

* தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை (திருத்தம்) மசோதா, 2022 (துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்)

* தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, 2022 (பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்).

- ஆகிய சட்டமசோதாக்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் கவலைப்படுகிறார்களே, அந்தக் கவலையைப் போக்கும் சட்டமசோதாக்கள் இவை.

சனாதனக் காவலரான ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இந்த சட்டமசோதாக்களை மதிப்பாரா? அனுமதி வழங்குவது எப்போது? அப்போதுதான் கல்வியாளர்களது கவலையைப் போக்க முடியும்!

banner

Related Stories

Related Stories