முரசொலி தலையங்கம்

“அண்ணாமலையின் அசிங்க அரசியல்.. பா.ஜ.க. அரசியல் செய்ய மாணவி மரணம்தான் கிடைத்ததா?” : முரசொலி கடும் தாக்கு !

12ம் வகுப்பு மாணவி லாவண்யா அவர்களின் தற்கொலையை வைத்து அசிங்க அரசியலைச் செய்து வருகிறார்கள்.

“அண்ணாமலையின் அசிங்க அரசியல்.. பா.ஜ.க. அரசியல் செய்ய மாணவி மரணம்தான் கிடைத்ததா?” : முரசொலி கடும் தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜன., 28 2022) தலையங்கம் வருமாறு:

தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் சமீபத்தில் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். 12ம் வகுப்பு மாணவி லாவண்யா அவர்களின் தற்கொலையை வைத்து அசிங்க அரசியலைச் செய்துவருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் நடத்துவதற்கு ஏதுமில்லை. அதனால்தான் அப்பாவிச் சிறுமியின் தற்கொலையை வைத்து அரசியல் நடத்தி, அதன் மூலமாக தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகிறார்கள். பதற்றத்தை பற்ற வைக்கத் துடிக்கிறார்கள்.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவைச் சேர்ந்த முருகானந்தம்-கனிமொழி இணையரின் மகள்தான் லாவண்யா. எட்டு ஆண்டுகளுக்கு முன் கனிமொழி இறந்து போனார். பின்னர் முருகானந்தம், சரண்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி அருகேமைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளிக்கு படிக்கப்போனார் லாவண்யா.பள்ளிக்கு அருகில் உள்ள செயின் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் லாவண்யா.

கடந்த 9ஆம் தேதி லாவண்யாவுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. மறுநாளே அவரை அவரது வீட்டுக்கு பள்ளியின் சார்பில் அனுப்பி வைத்து விட்டார்கள். தன்னை விடுதியின் காப்பாளர் ஜெனின் சகாய மேரி திட்டியதாகவும், அதனால்களைக் கொல்லி பூச்சிமருந்தை குடித்துவிட்டதாகவும் சொன்னார். தஞ்சை மருத்துவமனையில் லாவண்யா சேர்க்கப்பட்டார். கடந்த 16ஆம் தேதிமாஜிஸ்திரெட்டிடம் வாக்குமூலம் தந்தார். உடனடியாக விடுதியின் காப்பாளர் ஜெனின் சகாய மேரி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். தமிழ்நாடு அரசு துரிதமாகச் செயல்பட்டு நடவடிக்கையை எடுத்துவிட்டது.

இதன் பிறகும் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு என்ன இருக்கிறது? ‘தஞ்சை சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள்' என்று பா.ஜ.க. சொல்கிறது. அவர்களுக்கு சகாயமேரி கைது செய்யப்பட்டது தெரியுமா? தெரியாதா? இதற்கு மேல் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்?

மாணவி தற்கொலையில் உண்மை மறைக்கப்பட்டு வருவதாகவும், மதமாற்றம் செய்ய அந்த விடுதி காப்பாளர் சகாய மேரி முயற்சித்ததாகவும், அதை எதிர்த்து லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாகவும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவர்கள் சொல்லி வருகிறார்கள். இதில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பதை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இவர்கள் சொல்வது எவ்வளவு பெரிய பொய் என்பதை - புலனாய்வு இதழ்கள் அனைத்தும் எழுதி வருகின்றன. அதுவும் பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலரே உண்மையோடுபேட்டிகளைக் கொடுத்து வருகிறார்கள்.

28.1.22 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில், ‘மத மாற்றமா? டார்ச்சரா?' என்று ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. அதில், மைக்கேல்பட்டியைச் சேர்ந்தவரும் பா.ஜ.க. தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவுத் தலைவருமான டேவிட் என்பவரது பேட்டி வெளியாகி உள்ளது. “இறந்துபோன லாவண்யா நல்லா படிக்கிற பொண்ணு. அதனால அங்க இருக்குற சிஸ்டர்ங்க எல்லாருமே அந்தப் புள்ளைய நல்லா பார்த்துக்குவாங்க. இன்னும் சொல்லப்போனா அந்தப் புள்ளைதான் அவங்க வீட்டுக்கு அனுப்ப வேண்டாம்னு எல்லார்கிட்டயும் சொல்லி அழும். காரணம், அந்தப் பொண்ணோட கை, கால்ல வெள்ளையா இருக்கும். எந்த அதனால் அவங்க சித்தி இந்த புள்ளைய வீட்டுக்குள்ளயே சேர்த்துக்கறது இல்லை. வீட்டுக்குப் போனாலே இந்தபுள்ளைக்கின்னு தனி டம்ளர், தட்டு, பாய்னு ஒதுக்கி வச்சிருவாங்கனு சொல்லி அந்தப் பொண்ணு அழுதுருக்கு.

அந்தப் பொண்ணு இங்க வந்ததுக்குப் பிறகுதான் பெரிய பொண்ணாயிருக்கு. அப்பகூட எங்க சித்திக்கு தகவல் குடுக்க வேண்டாம்னு சொல்லி அழுததும் அங்க இருந்த சிஸ்டர்ங்க பக்கத்துல இருந்த இந்து குடும்பங்களுக்குச் சொல்லி இந்து முறைப்படி அந்தப் பொண்ணுக்கு சடங்கெல்லாம் செய்தாங்க. அதுமட்டுமில்லாம கிறிஸ்துமஸுக்கு அந்தப் பொண்ணுக்கு 1,500 ரூபாய்க்கு ட்ரெஸ் வாங்கிக் குடுத்துருக்காங்க. சொல்லப்போனா அங்க இருந்த எல்லாருமே பெத்த பொண்ணாட்டம் இந்தப் புள்ளைய பார்த்துக்கிட்டது மட்டும் எனக்கு நல்லா தெரியும்.

அதனாலதான் இந்தப் புள்ளைகிட்ட எல்லா கணக்கு வழக்குகளையும் குடுத்து வச்சிருந்தாங்க. அன்னைக்கி வாந்தி எடுத்தப்பகூட சிஸ்டர் அவங்க அப்பாவுக்கு போன் பண்ணிருக்காங்க. அப்பகூட ஏன் வீட்டுக்கு போன் பண்றீங்கன்னு சொல்லி அந்த போனை பிடுங்கி வீசியிருக்கு. இதை நேரடியாக பார்த்தவங்களும் இருக்காங்க. அவங்க வேறு ஏதோ உள்நோக்கத்தில் போராட்டம் நடத்துகிறார்கள்” என்று பேட்டி அளித்துள்ளார். அவரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்தான்.

30.1.22 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ‘மதம் மாறச் சொன்னதா கிறிஸ்துவப் பள்ளி?' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. “இந்த விவகாரத்தைப் பெரிதாக்கியதே விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த முத்துவேல்தான். அவர் தான் சோஷியல் மீடியாவில் பரவும் வீடியோவை எடுத்தவர். இதே பகுதியில் வசிக்கிற பா.ஜ.க.வைச் சேர்ந்த சுரேஷ் மூலமாகத்தான் கட்சித் தலைமைக்குவிஷயத்தைக் கொண்டு போயிருக்காங்க. அந்த குடும்பத்தை கையில் வெச்சுக்கிட்டு விஷயத்தை பெரிசாக்குறாங்க.

இறந்து போன ஆன்மாவுக்குமரியாதை கொடுக்காமல் மதத்தை வைத்து அரசியல் செய்றாங்க. ஊர்க்கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுறாங்க” என்று அந்த ஊர்த் தலைவர்கள்சொல்வதாக ஜூனியர் விகடன் எழுதுகிறது. 26-28 சனவரி 22 - தேதியிட்ட நக்கீரன் இதழில் தஞ்சை மாவட்ட பா.ஜ.க.செயலாளரும், திருவையாறு தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான வெங்கடேசன் சொன்னதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.'' கட்சித் தலைமையிடம் அந்தப் பள்ளியில் எந்த தவறும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர்சொன்னதாக செய்தி வெளியாகி உள்ளது.

இவை அனைத்தையும் மறைத்து, தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியை பா.ஜ.க.வினர் செய்து வருகிறார்கள்.

* வாலண்யாவை மருத்துவமனையில் சந்தித்து வாக்குமூலம் வாங்கியுள்ளது காவல்துறை.

* மாஜிஸ்திரேட் முன் லாவண்யா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

* காவல் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்தது.

* தடய அறிவியல் துறை ஆய்வு நடந்துள்ளது.

* உடல் கூராய்வு ஆய்வு நடந்துள்ளது.

* விடுதியின் காப்பாளர் ஜெனின் சகாய மேரி கைது செய்யப்பட்டுள்ளார்.

* மறு உடல் கூராய்வு நடத்தத் தேவையில்லை என்று மதுரை உயர் நீதிமன்றமேகூறியுள்ளது.

* இதனை ஏற்றுக் கொண்டு லாவண்யாவின் பெற்றோர் அவரது உடலைப்பெற்று தகனம் செய்துள்ளனர்.

* பெற்றோரிடம் வாக்குமூலம் பெற்று உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

* தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் இது குறித்து விசாரித்து கடந்த 23ஆம்தேதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

* இந்த வழக்கில் உள்ள 37 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்திலேயே காவல்துறை சொல்லி இருக்கிறது.

- இப்படி அனைத்தும் சட்டபூர்வமாக நடக்கும் போது ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி மதத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்ய பா.ஜ.க. நினைப்பதற்குலாவண்யாவின் மரணம் தானா கிடைத்தது.

வெட்கம்!

banner

Related Stories

Related Stories