முரசொலி தலையங்கம்

அ.தி.மு.க ஆட்சியின் இருண்ட காலத்தை அம்பலப்படுத்திய வெள்ளை அறிக்கை.. பழனிசாமி அண்ட் கோ செய்தது என்ன ?

மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பதில் கைதேர்ந்த, தயாரிப்பாளர்களை மொட்டை அடிப்பதில் தலைசிறந்த ஒரு நடிகக் கட்சித் தலைவர், இது வெள்ளை அறிக்கை அல்ல, மஞ்சள் நோட்டீஸ் என்று கிண்டலடித்துள்ளார்.

அ.தி.மு.க ஆட்சியின் இருண்ட காலத்தை அம்பலப்படுத்திய வெள்ளை அறிக்கை.. பழனிசாமி அண்ட் கோ செய்தது என்ன ?
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 12, 2021) தலையங்கம் வருமாறு:

கடந்த கால அ.தி.மு.க ஆட்சியின் இருண்ட காலத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது இன்றைய தமிழ்நாடு அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை. கோட்டைக்குள் புகுந்து நிதியைச் சூறையாடிய கூட்டம்தான் பழனிசாமி - பன்னீர் கூட்டம் என்பதை பட்டவர்த்தனமாகச் சொல்லி இருக்கிறது இந்த அறிக்கை. இந்த அறிக்கை வெளிவருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக ‘வீட்டுச் சிறையில்’ இருந்து (ஆமாம்! அவர்தான் வெளியில் எங்கும் வருவது இல்லையே!) வெளியே வந்த பழனிசாமி, ‘நாங்கள் வாங்கிய கடன் எல்லாம் மூலதனமாக இருக்கிறது’ என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் போய்விட்டார்.

‘இன்னொரு பழம் எங்கே?’ என்றால், ‘அதுதானே இது’ என்ற செந்தில் தனக்காமெடி போல இருக்கிறது பழனிசாமி ஆட்சி செய்த லட்சணம். கடன் வாங்குவது தவறு இல்லை. தேவைக்காக வாங்கப்பட்டாலும் அது எதற்காகச் செலவு செய்யப்படுகிறது? அந்த செலவின் மூலமாக அடைந்த வரவு என்ன? அந்த செலவில் எவ்வளவு திரும்ப அடைக்கப்பட்டுள்ளது? - இதுதான் பொருளாதாரம் தரப்போகும் நன்மையின் எளிமையான வழிமுறை.

பழனிசாமி அண்ட் கோ என்ன செய்தது? கடன் வாங்கியது. டெண்டர்விட்டது. அது தனக்கே மாற்றுப்பாதையில் வருவது போலப் பார்த்துக்கொண்டது. மீண்டும் கடன் வாங்கியது. கடன் வாங்கி வட்டி கட்டியது. மீண்டும் கடன் வாங்கியது. அவ்வளவுதான். இவர் சொல்லும் மூலதனம் எல்லாம் ‘எங்கு’ மூலதனமாக ஆகி உள்ளது என்பதை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தான் விரைவில் கண்டுபிடித்துச் சொல்ல இருக்கிறது. அதற்கு முன்னதாக நிதிச் சூறையாடல்களை நிதி அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராசன் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஆழ - நீளங்களோடு விளக்கி விட்டது.

அ.தி.மு.க ஆட்சியின் இருண்ட காலத்தை அம்பலப்படுத்திய வெள்ளை அறிக்கை.. பழனிசாமி அண்ட் கோ செய்தது என்ன ?

* 2011-12ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமை உச்சநிலையில் இருந்தது. அது கடந்த பத்தாண்டு காலத்தில் மந்த நிலைமையை அடைந்துள்ளது.

* அதிலும் குறிப்பாக 2013 -14 ஆண்டில் இருந்து தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது.

* இப்படி நெருக்கடியில் இருந்த நிலையை கொரோனா என்ற பெருந்தொற்றுப் பரவல் கூடுதலாகப் பாதித்துவிட்டது.

* 2006-13 காலக்கட்டத்தில் ஏழு ஆண்டுகளில் 5 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு உபரி வருவாயை அடைந்திருந்தது. 2013 முதல் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது.

* 2017-19 காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே அதிகளவு வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு ஆக்கப்பட்டுவிட்டது.

* 2016- 21 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நிதிப்பற்றாக்குறையில் வருவாய் பற்றாக்குறை விகிதம் என்பது 52.48 சதவிகிதம் ஆகும். இது முந்தைய ஆட்சியில் 2011 ஆம் ஆண்டில் 14.95 சதவிகிதமாக இருந்தது.

* அ.தி.மு.க ஆட்சியின் உண்மையான செலவுகள் கட்டுப்படுத்தப்படவில்லை. பற்றாக் குறைகள் மறைக்கப்பட்டுள்ளது.

* ஒட்டுமொத்தமாக இன்றைய கடன் என்பது 5,70,189 கோடி ரூபாய் ஆக இருக்கிறது. 2010 இல் 16.68 சதவிகிதமாக இருந்த கடனை 2011 இல் 15.36 சதவிகிதமாக குறைத்தோம். ஆனால் இன்று அது 25 சதவிகிதம் ஆகிவிட்டது. அ.தி.மு.க ஆட்சியின் தொடக்கம் முதலே கடன் வாங்குதல் அதிகம் ஆகிவிட்டது.

* இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் தற்போது அதிகளவு கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தொழில் வளர்ச்சியின் முன்னோடி மாநிலமாகச் சொல்லப்படுகிற மகாராஷ்டிராவில் கடன் சதவிகிதம் 16.7 ஆகவும், தொழில் வளர்ச்சியில் பழனிசாமியால் தேய்க்கப்பட்ட மாநிலமான இங்கு 24.6 சதவிகிதமாகவும் ஆகிவிட்டது.

* இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபாய் பொதுக்கடன் சுமத்தப்படுகிறது. - ஒட்டுமொத்தமாகச் சொல்வதாக இருந்தால் தமிழ்நாட்டின் நிதிநிலைமை, நிலையற்ற தன்மையில் இருப்பதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார்.

இதைவிட வெளிப்படைத்தன்மையாக அரசு நடத்த முடியாது. அந்தளவுக்கு வெளிப்படைத்தன்மையோடு இந்த வெள்ளை அறிக்கை வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.வை குறை சொல்வதற்காக மட்டுமே இந்த அறிக்கை வெளியானது போன்ற தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

அ.தி.மு.க ஆட்சியின் இருண்ட காலத்தை அம்பலப்படுத்திய வெள்ளை அறிக்கை.. பழனிசாமி அண்ட் கோ செய்தது என்ன ?

அது உண்மை அல்ல. 2007 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த முன்னேற்றம் குறித்து இதில் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் இந்தளவு பொருளாதாரம் சீரழியவில்லை. 2013 முதல் தான் மாபெரும் சீரழிவைச் சந்தித்துள்ளது என்பது இதில் விளக்கப்பட்டுள்ளது. இன்னும் சொன்னால், அ.தி.மு.க. ஆட்சியில் நிதிநிலைச் சீரழிவு

குறித்த தரவுகள் இதில் முழுமையாக இருக்கிறது. அவர்கள் மீதான அரசியல் தாக்குதல்கள் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை. ஒரு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வரும் போது அது யாருடைய வயிறு, எதனால் இது பாதிக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்படாது. அதுபோல அப்பழுக்கற்றதாக இந்த அறிக்கை உள்ளது.

படிப்பவர்தான் அதில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பதில் கைதேர்ந்த, தயாரிப்பாளர்களை மொட்டை அடிப்பதில் தலைசிறந்த ஒரு நடிகக் கட்சித் தலைவர், இது வெள்ளை அறிக்கை அல்ல, மஞ்சள் நோட்டீஸ் என்று கிண்டலடித்துள்ளார். அவருக்குத் தெரிந்தது எல்லாம் மஞ்சள் நோட்டீஸ் மட்டுமாக இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்? மத்திய மந்திரியாக இருந்தபோது லாலிபாப் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர், இன்று இந்த வெள்ளை அறிக்கையை முழுமையாகப் படிக்காமலேயே ‘பாட்டாளி’ களுக்காக நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

“சமீபத்தில் முடிவடைந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை மாற்றியமைக்கவோ அல்லது கைவிடுவதற்கோ ஒரு காரணத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த அறிக்கை இல்லை’’ - என்று கொட்டை எழுத்தில் 125 ஆவது பக்கத்தில் ஆறாவது, ஏழாவது, எட்டாவது வரியாக உள்ளது. இது இவர்களது அறிவுக்கு எட்டாமல் போனது ஏனோ? தி.மு.க. மீதான வன்மம் கண்ணை மறைக்கிறது. அவ்வளவுதான்!

தமிழ்நாட்டு மக்களின் கண்ணைத் திறந்துள்ளது வெள்ளை அறிக்கை. இந்த அறிக்கையை வெல்லும் அறிக்கையாக நிதிநிலை அறிக்கை அமையட்டும்!

banner

Related Stories

Related Stories