முரசொலி தலையங்கம்

“எல்லாத்தரப்பு மக்களையும் சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு அரசு”: ‘முரசொலி’ தலையங்கம் புகழாரம்!

ஓர் அரசு சமூகத்தின் எல்லாத்தரப்பு மக்களையும் சிந்தித்துச் செயல்படுகிறது என்பதற்கு இந்த ஐந்து அம்ச திட்ட அறிவிப்பு ஒரு எடுத்துக்காட்டாகும்.

“எல்லாத்தரப்பு மக்களையும் சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு அரசு”: ‘முரசொலி’ தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

ஓர் அரசு சமூகத்தின் எல்லாத்தரப்பு மக்களையும் சிந்தித்துச் செயல்படுகிறது என்பதற்கு இந்த ஐந்து அம்ச திட்ட அறிவிப்பு ஒரு எடுத்துக்காட்டாகும் என முரசொலி தலையங்கம் புகழாரம் சூட்டியுள்ளது. இதுதொடர்பாக முரசொலி தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாற

கலைஞரின் 98-ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசு ஐந்து அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்காக வெளியிட்டு இருக்கிறது. கரும்பு நுனி முதல் அடிவரை இனிப்பதுபோல் அறிவிப்பின் ஒவ்வொரு அம்சமும் இருப்பதுதான் அதன் சிறப்பு.

(1) சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்.

(2) 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக் கப்படும்.

(3) இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து இலட்ச ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

(4) தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாதெமி போன்ற விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

(5) திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தி மழை வெள்ளத்தினால் சேதமடைந்ததைத் தவிர்ப்பதற்காகவும், விவசாயிகளுக்காகப் பேருதவியாக இருக்கும் பொருட்டு 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.

“எல்லாத்தரப்பு மக்களையும் சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு அரசு”: ‘முரசொலி’ தலையங்கம் புகழாரம்!

இந்த ஐந்து அம்சங்களைத்தான் கலைஞரின் 98ஆவது பிறந்தநாள் அறிவிப்பாக தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது. முதலும் கடைசியுமாக இருக்கிற அம்சங்கள் மருத்துவம், விவசாயம் தொடர்புடையவைகள் ஆகும். சென்னையில் ஒரு பன்னோக்கு மருத்துவமனை செயல்பாட்டில் இருக்க இன்னொரு மருத்துவமனை அமைவதும் வரவேற்கத் தகுந்ததே ஆகும்.

அடிக்கடி மழைக்காலங்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு பிந்தியவைகள் சாலைகளில் கொட்டப்பட்டு அவை பாதுகாப்பு இன்றி சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் நெல் முளை விட்டுவிடும் காட்சியை நாம் கடந்த காலங்களில் பார்த்து இருக்கின்றோம். சேமிப்பு கிடங்குகள் இருப்பதால் அறுவடைக்குப் பிந்தியவை சேமிப்பு கிடங்குக்குச் சென்று விடும். ஆகவே, அவற்றைக் கட்ட திட்டமிடுதல் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகும்.

வட தமிழ்நாட்டிற்கு அறிஞர் அண்ணாவின் பெயரால் ஒரு நூலகம் அமைந்துவிட்டது. அதன் பராமரிப்புப் பணிகளும் தொடங்கிவிட்டன. இந்த நூலகம் போன்று தென் தமிழ்நாட்டில் அதுவும் மதுரையில் கலைஞரின் பெயரால் நினைவு நூலகம் ரூபாய் 70 கோடி செலவில் அமையவிருக்கிறது என்பது தென் தமிழ்நாட்டு மக்கள் நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ள உதவும். புத்தகப் பிரியர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்களுக்கு இது பெருமகிழ்ச்சி அளிக்கக் கூடிய அறிவிப்பாகும்.

“எல்லாத்தரப்பு மக்களையும் சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு அரசு”: ‘முரசொலி’ தலையங்கம் புகழாரம்!

நூலகம் மட்டுமில்லை, கலைமாமணி விருதைப்போல இலக்கிய மாமணி விருதினை ஏற்படுத்தி ஆண்டுக்கு மூன்று எழுத்தாளர்களுக்கு விருது, பாராட்டு, ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கியச் செழுமைக்கு அரசே வித்திட்டுள்ளது. இது சிறப்பாக வரவேற்கத்தக்கது ஆகும். படைப்பாளியை எப்படியெல்லாம் சிறப்பிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசு சிந்தனைச் செய்து இன்னொரு நடவடிக்கையையும் செயல்படுத்த முனைந்திருப்பது இதுவரை எந்த அரசும் செய்ய முன்வராத செயல் ஆகும்.

அதாவது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசிய விருதுகள், மாநில விருதுகள், உலகளாவிய விருதுகள் பெற்றிருந்தாலும் குடியிருக்க சரியான வீடு இல்லாத படைப்பாளிகள் நிரம்ப பேர் உண்டு. விருதுகள், ரொக்கப் பரிசுகள் மட்டும் போதா. அவர்கள் வாழும் காலத்தில் அரசு வீட்டில் இருக்கும் படியான ஒரு செயல் திட்டத்தினை அரசு அறிவித்துள்ளது. ஓர் அரசு சமூகத்தின் எல்லாத்தரப்பு மக்களையும் சிந்தித்துச் செயல்படுகிறது என்பதற்கு இந்த ஐந்து அம்ச திட்ட அறிவிப்பு ஒரு எடுத்துக்காட்டாகும்.

banner

Related Stories

Related Stories