முரசொலி தலையங்கம்

மக்கள் உயிரை சுரண்ட கார்ப்பரேட்டுக்கு குத்தகைக்குவிட்ட மோடி அரசு: ஆக்சிஜனுக்கு அல்ல ஆளுமைக்கே பற்றாக்குறை

கொரோனா மரணங்கள் மறைப்பு, மோசமான சுகாதாரக் கட்டமைப்பு இருப்பதால் உத்திரப் பிரதேசம் இந்தியாவின் மோசமான கொரோனா பரப்பும் ஹாட் ஸ்பாட் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்

மக்கள் உயிரை சுரண்ட கார்ப்பரேட்டுக்கு குத்தகைக்குவிட்ட மோடி அரசு: ஆக்சிஜனுக்கு அல்ல ஆளுமைக்கே பற்றாக்குறை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்பது அந்தக் காலத்து அரசியல் முழக்கங்களில் முக்கியமானது. தொழில் வளர்ச்சியில் தெற்கு எந்தளவுக்குப் புறக்கணிக்கப்படுகிறது என்பதை இம்முழக்கம் சொன்னது. ஆனால் இன்று வடக்கு எப்படி வதைபட்டுக் கிடக்கிறது என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக உத்திரப்பிரதேசம், ரத்தப்பிரதேசம் ஆகி வருகிறது. பா.ஜ.க.வின் கனவு முதலமைச்சரான யோகி ஆதித்ய நாத், அந்த மாநிலத்தை ஆளும் லட்சணத்தைப் பார்த்தால், பா.ஜ.க. என்ற கட்சி எத்தகைய மக்கள் விரோத கட்சி என்பது பட்டவர்த்தனமாக பல்லிளித்துக் காட்சி அளிக்கிறது.

உத்திரப் பிரதேசத்தில் உடலை எரிக்கும் கட்டைகளின் விலை மூன்றுமடங்காகியுள்ளதோடு, உடலை எரிப்பதற்காக 5-6 மணி நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. ரேசன் கடையில் பொருள்களை வாங்க நிற்பது போல,உடல்களை எரிக்க வரிசையில் காத்திருக்கிறார்கள் மக்கள்.சீமாபுரி மயானம் சற்று குறுகியது. ஆனாலும், அதிக எண்ணிக்கையில் அங்குசடலங்கள் எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்தன. ஏற்கனவே இருந்த மேடைகள்போதாமல் புதிதாகச் சில அமைக்கப்பட்டுள்ளன. உறவினர்கள் இறந்த உடல்களை அவர்களே கொண்டு வந்து, விறகுகளுக்கும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றனர். ஒரு நாளைக்கு 100 சடலங்களுக்கு மேல் இங்கு சிதையூட்டப்படுகிறது.

உத்திரப்பிரதேசம் ஷாம்லியில் உள்ள காந்தலா சமூக சுகாதார மையத்தில்சரோஜ், அனார்கலி, சத்தியாவதி ஆகிய வயதான மூதாட்டிகள் கொரோனாதடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதில் ஒரு பெண்ணுக்கு திடீரென உடல்நிலை மோசம் அடைந்தது. உடனே தனியார் மருத்துவமனையில் அவர்சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக வெறிநாய்க் கடிதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கும் , நர்சுக்கும்இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. டாக்டர் தகாத வார்த்தையால் பேசியதால்ஒரு கட்டத்தில் நர்ஸ், டாக்டரின் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார்.இதனால் கோபமடைந்த டாக்டர், அந்த நர்சை திருப்பித் தாக்கினார்.

மக்கள் உயிரை சுரண்ட கார்ப்பரேட்டுக்கு குத்தகைக்குவிட்ட மோடி அரசு: ஆக்சிஜனுக்கு அல்ல ஆளுமைக்கே பற்றாக்குறை

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை யளிக்க முடியாமல் உத்திரப்பிரதேசஅரசு திணறி வரும் நிலையில், உலகப் புகழ்பெற்ற இமாம்பரா மசூதிஅறக்கட்டளை நிர்வாகம், தங்கள் கட்டுப்பாட்டின் கீழுள்ள மசூதிகள்அனைத்தையும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றமுன்வந்துள்ளது.உத்திரப்பிரதேச அரசின் அலட்சியம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில்ஒருவர் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்தநீதிபதிகள் உத்திரப்பிரதேச அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். சுதந்திரம்அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாததுவெட்கக்கேடானது என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அரசுமருத்துவமனைக்குச் சென்றால் கொரோனாவுக்கு இறக்காதவர்கள்டெங்குக்காக இறந்துவிடு வர் எனவும் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. அந்தஅளவுக்கு முறையான மின்சாரம், போதிய கழிப்பறைகள் இல்லாமல்மருத்துவமனைகள் உள்ளன.கொரோனா தடுப்பு விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் அரசு, """"என்வழிஇல்லையேல் வேறு வழியே இல்லை"" என்ற அணுகுமுறையைக் கை விட்டு,நீதிமன்றத்தின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள்அதிரடியாகக் கூறினர். இதுதவிர உள்ளாட்சித் தேர்தலின் போது 135 அரசுஊழியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் மீது குற்றநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநீதிபதிகள் எதிர்காலத்தில் என்ன கதிக்கு ஆளாக்கப்படுவார்களோ என்றுதெரியவில்லை!உத்திரப் பிரதேசத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழந்துவரும் நிலையில், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளது என யாராவது கூறினால்அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என உ.பி முதல்வர் யோகிஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.உத்திரப் பிரதேச கொரோனா நிலவரம் மோசமாக உள்ளது என செய்திகள்பரப்பப்பட்டால், அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என யோகிஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த தன் தாத்தாவுக்காக, ஆக்சிஜன்கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட இளைஞர் மீது, உத்திரப் பிரதேச காவல் துறைவழக்குப் பதிவு செய்துள்ளது.ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற கேரளப்பத்திரிக்கையாளர் சித்திக் காப்பான் கைது செய்யப்பட்டார். அவருக்குகொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரை உ.பி. அரசு சிறுநீர் கழிக்கக்கூட விடாமல் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளது. இந்நிலையில் சித்திக்காப்பானின் மனைவி ரைகாந்த் காப்பான், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிரமணாவுக்குக் கடிதம் எழுதி, சித்திக் காப்பானை சித்திரவதையில் இருந்துகாப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பத்திரிக்கையாளர் கதியே இதுஎன்றால், சாதாரணப் பொதுமக்களைப் பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை.உ.பி.யில் உள்ள காசியாபாத் நகராட்சிப் பகுதியில் இரண்டே இரண்டுகொரோனா மரணங்கள் மட்டுமே நிகழ்ந்ததாகத் தகவல் அளித்த நாளில் 60மரணங்களுக்கு மேல் நிகழ்ந்துள்ளது. மரணங்களை உ.பி அரசு குறைத்துக்காட்டுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.கொரோனா மரணங்கள் மறைப்பு, மோசமான சுகாதாரக் கட்டமைப்புஇருப்பதால் உத்திரப் பிரதேசம் இந்தியாவின் மோசமான கொரோனா பரப்பும்ஹாட் ஸ்பாட் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.பிரதமர் தொகுதியான வாரணாசியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 2500க்கும்அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். பலர் ஆக்ஸிஜன் இன்றித் தவிக்கின்றனர்.

இதுதான் உத்திரப்பிரதேசம். யோகி ஆதித்ய நாத்தின் உத்திரப்பிரதேசம். பா.ஜ.க.கையில் ஆட்சி போனால் மக்கள் எத்தகைய துன்ப துயரத்தை அனுபவிக்கவேண்டும் என்பதை உத்திரப்பிரதேசம், மொத்த தேசத்துக்கும் காட்டுகிறது.உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை! மக்களைப் பற்றிய கவலைகளும்இல்லை! கையில் இருக்கும் ஒரே சரக்கு, ஆணவம் மட்டும்தான்! இதுதான்வடக்கை வதைத்துக் கொண்டு இருக்கிறது!தடுப்பூசிக்கு எவ்வளவு விலையை வேண்டுமானாலும் வைத்துக் கொள்,நாங்கள் கேட்க மாட்டோம் என்று அப்பாவி மக்களின் உயிரை கார்ப்பரேட்நிறுவனங்கள் சுரண்டிக் கொள்ள இந்தக் கொரோனா காலத்திலும் குத்தகைக்குவிட்டு விட்டது அரசு.ஆக்ஸிஜன் பற்றாக்குறை மட்டுமல்ல, ஆளுமைகளே பற்றாக்குறைகள்ஆகிவிட்டார்கள்

banner

Related Stories

Related Stories