முரசொலி தலையங்கம்

“இதையெல்லாம் செய்துவிட்டு மோடி வாய் வீரம் காட்டலாம்” : பா.ஜ.க அரசை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம் !

குறைந்தபட்சம் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையையாவது மதுரையில் திறந்து வைத்து விட்டு மோடி வாய் வீரம் காட்டலாம். அதுவரை சும்மா இருப்பதே நலம்!

“இதையெல்லாம் செய்துவிட்டு மோடி வாய் வீரம் காட்டலாம்” : பா.ஜ.க அரசை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவையில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள்,“காங்கிரசும் தி.மு.க.வும் மத்தியில் பல ஆண்டுகள் கூட்டணியாக ஆட்சி செய்தன. ஆனால் என்ன சாதனைகளைச் செய்தன?” என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

மோடி அவர்கள் பிரதமராக இருக்கிறார். இந்தக் கேள்வியை மத்திய அரசின் அதிகாரிகளிடம் கேட்டிருந்தால் அவர்கள் பழைய கோப்புகளைப் பார்த்து உண்மை என்ன என்பதைச் சொல்லி இருப்பார்கள். ஆனால் எதுவும் தெரியாத பா.ஜ.க.வினரைப் பார்த்து எதற்காக மோடி இப்படிக் கேட்க வேண்டும்?

பிரதமராக வி.பி.சிங், வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால், மன்மோகன் ஆகியோர் இருந்த போதெல்லாம் அந்தக் கூட்டணியில் தி.மு.க இடம்பெற்றுள்ளது. அப்போதெல்லாம் தமிழகத்துக்கு செய்யப்பட்ட சாதனைகளைச் சொல்வதாக இருந்தால் பல பக்கங்கள் தேவைப்படும். இதே கேள்வியை சில மாதங்களுக்கு முன்னால் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது எழுப்பினார்.

“இதையெல்லாம் செய்துவிட்டு மோடி வாய் வீரம் காட்டலாம்” : பா.ஜ.க அரசை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம் !

அப்போதே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரிவான விளக்கத்தைச் சொல்லி இருக்கிறார். அதன் சுருக்கம் மட்டும் இங்கே சொல்லப்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளைத் தொடக்கி வைக்கும் மேடையில்தான் அப்போது அமித்ஷா இப்படிச் சொன்னார்.

மெட்ரோ ரயில் முதலாம் கட்டப் பணிகளைத் தொடங்கியதே தி.மு.க. - காங்கிரசு கூட்டணி ஆட்சியில்தான்.

14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான மகத்தான திட்டத்தை தொடக்கி வைத்து 80 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டதே தி.மு.க. - காங்கிரசு கூட்டணி ஆட்சியில்தான்.

இந்திய அரசு செலவு செய்த திட்டச் செலவில் 11விழுக்காட்டை தமிழகத்துக்கு கொண்டு வந்தோம். மிக முக்கியமான 69 திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றிக்காட்டினோம்.

இரண்டாயிரம் ஆண்டு இலக்கியப் பெருமை கொண்ட தமிழ் மொழியை செம்மொழியாக்கும் பெருங்கனவு 100 ஆண்டுகளாக நம் தமிழறிஞர்களுக்கு இருந்தது. செம்மொழித் தகுதியை தமிழுக்கு பெற்றுத் தந்தோம். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைத்தோம்.

கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் செலவில் திட்டப்பணிகள் செய்யப்பட்டன!

ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைத்தது.

1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம் .

தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.

சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.

120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மேம்பாடு.

1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.

2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.

நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கம்.

908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

அடக்குமுறை பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டது.

“இதையெல்லாம் செய்துவிட்டு மோடி வாய் வீரம் காட்டலாம்” : பா.ஜ.க அரசை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம் !

தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி .

1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.

சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் .

திருச்சி, கோவை, மதுரை விமான நிலை யங்கள் விரிவாக்கம்.

சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம் .

திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்.

கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப்பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின.

கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா. - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதே போன்ற பட்டியலை மோடியால் வெளியிட முடியுமா?

இந்தி திணிப்பு.

சமஸ்கிருத திணிப்பு.

தமிழ் புறக்கணிப்பு.

நீட் கொடுமை.

மூன்று வேளாண் சட்டங்கள்.

குடியுரிமை சட்டம்.

மாநில உரிமைகள் பறிப்பு.

நிதி உதவிகள் மறுப்பு.

ஜி.எஸ்.டி. நிதி மறுப்பு.

பேரிடர் கால நிதி தர மறுப்பு - அத்தனைக்கும் மேலாக எய்ம்ஸ் நாடகங்கள்.

குறைந்தபட்சம் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையையாவது மதுரையில் திறந்து வைத்து விட்டு மோடி வாய் வீரம் காட்டலாம். அதுவரை சும்மா இருப்பதே நலம்!

banner

Related Stories

Related Stories