முரசொலி தலையங்கம்

“300 ஆண்டுகளாக இந்து கோயிலுக்கு சீர் செய்யும் இஸ்லாமியர்கள்”: மத நல்லிணக்கத்திற்கு சான்றாகும் ‘கிள்ளை’!

“300 ஆண்டுகளாக இந்து கோயிலுக்கு சீர் செய்யும் இஸ்லாமியர்கள்”: 
மத நல்லிணக்கத்திற்கு சான்றாகும் ‘கிள்ளை’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிதம்பரம் அருகே கிள்ளை என்ற சிற்றூரில் மாசி மகத் திருவிழா கொண்டாடப்படும். அங்கே முஷ்ணம் பூவராக சுவாமி கோயில் உள்ளது. அந்தக் கோயிலின் பூவராக சுவாமிக்கு தீர்த்தவாரி விழா ஆண்டுதோறும் நடைபெறும். சிதம்பரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள்.

அதன்படி கடந்த வாரம் திருவிழா நடைபெற்றது. அந்த விழாவின் ஒரு நிகழ்வின்போது பல்லாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த சீர்கொடுக்கும் நிகழ்வு இந்தாண்டும் நடைபெற்றது. அதில் என்ன ஆச்சரியம் என்றால் கிள்ளை தர்கா ட்ரஸ்ட் சார்பில், இஸ்லாமியர்கள் மேளதாளம் முழங்க, பட்டு, பச்சரிசி, தேங்காய், பழம் போன்றவற்றை சீர் கொடுத்துள்ளனர்.

“300 ஆண்டுகளாக இந்து கோயிலுக்கு சீர் செய்யும் இஸ்லாமியர்கள்”: 
மத நல்லிணக்கத்திற்கு சான்றாகும் ‘கிள்ளை’!

மதநல்லிணக்கத்திற்கு மாபெரும் சான்றாக பாரம்பரியமாக நடைபெற்றுவரும் இந்த ஏற்பாடு குறித்து கிள்ளை தர்கா ட்ரஸ்டின் தலைவர் சையது சாக்காப் கூறுகையில், “இந்து - இஸ்லாமிய ஒற்றுமை தொடர்ந்து பேணப்பட வேண்டும். எங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்தே 300 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த நடைமுறை இருந்து வருகிறது.

தர்காவில் இருந்து தரப்படும் சீர் பொருள்கள் பூவராக சுவாமிக்கு படையல் செய்யப்படும். அதேபோல் பூவராக சுவாமி கோயிலில் இருந்து கொண்டுவரும் பொருட்களை கிள்ளை தர்காவில் வைத்து வழிபாடு செய்து பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவோம்” எனத் தெரிவித்தார். இதுபோன்ற மத நல்லிணக்கச் செயல்களின் மூலம் இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிரித்தாள நினைப்பவர்கள் இறுதியில் பேதலித்துப் போய் நிற்பார்கள் என முரசொலி தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories