முரசொலி தலையங்கம்

வாய்மை எது, வதந்தி எதுவென மக்களுக்குத் தெரியாதா? - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இமயம் முதல் குமரி வரை எல்லா மாநிலங்களிலும் தன்னெழுச்சியான போராட்டங்களில் மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் உறுதியுடன் பங்கேற்று வருகிறார்கள்.

இந்திய மக்கள் எல்லோரும் இணைந்து நடத்தும் இந்த அமைதிப் புரட்சியையும் அதற்குப் பின்னால் இருக்கும் லட்சியத்தையும் அலட்சியம் செய்திடும் வகையில் பிரதமரும், முதல்வரும் அவதூறாகப் பேசியிருக்கிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் திட்டமிட்டு இஸ்லாமியரையும், ஈழத் தமிழர்களையும் நீக்கி வைத்திருக்கிறது பா.ஜ.க அரசு. ஆனால், அரசியல் எதிரிகள் வதந்திகளைப் பரப்பிவிட்டு நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாகப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில், எதிர்க்கட்சியினர் மீது அவதூறு பரப்புவதை நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளது முரசொலி தலையங்கம்.

banner